முருங்கையிலை மாதிரியே வாழையிலை.. மிளகு, சீரகம் இருக்கா? அப்ப வாழையிலை ரசம் ரெடி.. அதிசயம் பாருங்க
சென்னை: குளிர்ச்சியை தரக்கூடிய வாழையிலைகள், சளி, காய்ச்சல், இருமலுக்கும் நிவாரணத்தை அள்ளி தருகிறது.. எப்படி தெரியுமா?
பொதுவாக, வாழையிலையில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம். செம்பு போன்ற ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் A, C, K வைட்டமின்கள் நிறைந்துள்ளன..

வாழையிலை: குளிர்ச்சி நிறைந்த வாழையிலை குடற்புண்களை ஆற்றும்.. ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும்.. சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும்.. இத்தனையும் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்துள்ளன. அதனால்தான், வாழையிலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும் என்கிறார்கள்.
வாழையிலையில், தண்ணீரை தெளித்து இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி, இலையில் சூடான உணவுகளை வைக்கும்போது, அந்த சூட்டில் இலை லேசாக வெந்துவிடும்..
பச்சையம்: இதனால், இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் A, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்கு சத்துக்களாக கிடைக்கின்றன. இதெல்லாம் நமக்கும் ஆயுளை கூட்டுகிறது என்பதால், வாழையிலையில் சாப்பிட சொல்கிறார்கள்.
வாழையிலையில் அலட்டாயின் என்ற சத்து நிறைந்துள்ளதால், சாறு எடுத்து சருமத்துக்கு உபயோகப்படுத்தினால், சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு, கட்டிகள், போன்ற சரும பிரச்சனைகள் தீரும்..
முக சுருக்கம்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன.. தலையில் அரிப்பு, பொடுகு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும், இந்த சாற்றினை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், வாழையிலையை வைத்து சமையல் செய்வார்கள்.. மீன் பொழிச்சது இந்த வாழையிலையில் செய்யப்படும் கேரளாவில் மிகப்பிரபலமான உணவாகும். அதேபோல, வாழையிலையில் அல்வா செய்வார்கள்.. இது பார்ப்பதற்கு பச்சை கலரில் இருக்கும். அதேபோல, வாழையிலையில் ரசம் வைக்கலாம்.. எப்படி தெரியுமா?
வாழையிலைகள்: வாழை இலையை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.. பிறகு அதை குட்டி குட்டி துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். வாழை இலை, பூண்டு, மிளகு , சீரகம், தக்காளியை விழுதாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இப்போது, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து, அரைத்த மசாலாவையும் கொட்டி வதக்க வேண்டும். மசாலா ஓரளவு வதங்கியதும் அதில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலக்க வேண்டும்.. ரசம் கொதிக்க ஆரம்பித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் போதும். காய்ச்சல், சளி, தலைபாரம், இருமல் உள்ளவர்களுக்கு இந்த ரசம் நிவாரணத்தை தரும்.












Click it and Unblock the Notifications