"வேர்க்கலை வேர்க்கலை" எலிகளின் இயற்கையான போலிக் ஆசிட்! கேன்சரை அழிக்கும் நிலக்கடலை
சென்னை: வேர்க்கடலை, நிலக்கடலை, மல்லாட்டை பயிர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான விதையின் நலன்கள் என்ன தெரியுமா?
ரயில்கள், பேருந்து நிலையங்களில் வேர்க்கடலையை விற்பவர்கள் கூவும் போது நம் காதில் வேர்க்கலை வேர்க்கலை என்றே கேட்கும் இந்த நிலக்கடலை பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கலக்காய் என்றும் அழைக்கப்படும் இதை வேக வைத்தும், வறுத்தும், அப்படியேவும் சாப்பிடலாம். நிலத்திலிருந்து பறித்த வேர்க்கடலையை சாப்பிட்டால் அத்தனை சுவையாக இருக்கும். அதை பச்சை கடலை என்பார்கள்.

அதை உரித்து வைத்துக் கொண்டு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா தேவாமிர்தம்! இந்த வேர்க்கடலை சுவையை மட்டும் கொடுக்காது. இதில் ஏராளமான நன்மைகளும் சத்துகளும் இருக்கின்றன.
அந்த வகையில் வேர்க்கடலையில் மோனோ மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அவை உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இதில் கார்ப்போஹைட்ரேட்கள் குறைவு. ஆனாலும் புரதம் அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின்கள் ஈ, பி1, பி3, பி9, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
ரெஸ்வெராட்ரோல், பினோலிக் அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள், அர்ஜினைன் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் போன்றவைகளின் சிறந்த ஆதாரமாக வேர்க்கடலை உள்ளது. எடை குறைப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும் வயிறு நிரம்பி பசி எடுக்காது. இதயத்திற்கு சிறந்தது. இது இதய நோய்களைத் தடுக்கும். மெலிந்த உறுதியான தசைகளை உருவாக்க இது உதவுகிறது.
அதாவது தசை வளர்ச்சிக்கும், தசை பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்வோரும் விளையாட்டு வீரர்களும் வேர்க்கடலையை பொடி செய்து அதை புரத மாற்றாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த வேர்க்கடலையில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. நீரிழிவு நோயுள்ளவர்களும் வேர்க்கடலையை சாப்பிடலாம்.
இதை சாப்பிடுவதால் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்துகிறது. ஞாபக சக்தியையும் மேம்படுத்துகிறது. இதில் போலிக் அமிலங்கள் உள்ளன. எலும்பு தேய்மான பிரச்சினையை தீர்க்க பெரிதும் உதவுகிறது. பச்சை வேர்க்கடலைக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. ஏனென்றால் அதில் ரெஸ்வெர்டால் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது.
இதில் போலிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. புதிதாக திருமணமான தம்பதிகள், ஏற்கெனவே திருமணமாகி அடுத்த குழந்தைக்கு முயற்சிக்கும் தம்பதிகள், கர்ப்பிணிகள் இந்த வேர்க்கடலையை சாப்பிடலாம். இது குழந்தைக்கு பிறவி குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். எலிகள் அதிகமாக இந்த வேர்க்கடலை செடிகள் பயிரிடப்படும் இடத்தில் இருக்கும். அவை இந்த வேர்க்கடலை பயிரை பூமியில் இருந்து தோண்டி எடுத்து உண்ணும். இதனால் அதன் குட்டிகள் ஆரோக்கியமானதாக இருக்கும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications