தொள தொள தொப்பை.. கடகடனு குறையணுமா? அப்ப இந்த கீரையே போதும்.. கல்லீரலை காத்து வியப்பை கூட்டும் கீரை
சென்னை: நுரையீரலுக்கும், கல்லீரலுக்கும் நன்மை தரும் கீரைகளில் ஒன்றுதான் கரிசலாங்கண்ணி.. இந்த கீரை உணவாகவும், மருந்தாகவும் எப்படி பயன்படுகிறது தெரியுமா?
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் கைகொடுப்பது கீழாநெல்லி என்றால், அதற்கு அடுத்தபடியாக உதவுவது இந்த கரிசலாங்கண்ணிதான்..

கீரைகள்: இந்த கரிசலாங்கண்ணியை கீழாநெல்லியுடன் சேர்த்து விழுதாக அரைத்து குடிப்பார்கள்.. 2 கீரையுமே சம அளவு எடுத்து அரைத்துக்கொண்டு, பால் அல்லது மோரில் கலந்து 7 நாட்கள் குடித்தால் காமாலை குணமாகும்.. ஈரல் வீக்கமும் மெல்ல குறைந்துவிடும். இவை இரண்டுமே மூலிகை இலைகள் என்பதால், புளி, காரம், எண்ணெய் சேர்க்காமல் அந்த நாட்களில் பத்தியம் இருக்க வேண்டும்..
மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், கொழுப்பு கல்லீரல், மண்ணீரல் வீக்கம் என கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க இந்த கீரை பேருதவி புரிகிறது.
தீராத காய்ச்சல்: அதேபோல, சளி, இருமல், தீராத காய்ச்சல் என்றால், உடனே கை கொடுக்கக்கூடியது இந்த கரிசலாங்கண்ணி கீரை.. இந்த கீரையை சாறு எடுத்து, தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், சளி இருமல் குறையும்.. சுவாச கோளாறுகளும் நீங்கும்.. சிறுவர்களுக்கு 3 நாட்கள் கொடுத்தால் போதும்.. இதுவே பெரியவர்களுக்கென்றால், ஒரு வாரம் தர வேண்டுமாம்..
கெட்ட கொழுப்பு: உடல் எடை குறைப்போருக்கு பெஸ்ட் கீரை இதுவென்றே சொல்லலாம்.. காரணம், உடலில் சேரும் அதிகமான கொழுப்பை இந்த கீரை கரைத்துவிடும். கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை சேர்த்து கஷாயம் போல செய்து தினமும் குடித்து வந்தால், தொப்பை கரைந்துவிடும்.. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளும் கரைந்துவிடும்.
ரத்த சோகை தீர்ந்து ரத்தம் விருத்தியடையும்.. இந்த கீரையை நிழலில் உலர்த்தி பொடித்து, சூரணமாகவும் செய்து சாப்பிடலாம். இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்ற குறைபாடுகளை நீக்க இந்த கரிசலாங்கண்ணி பயன்படுகிறது. வெறும் கீரையை சுத்தம் செய்து, தண்ணீரில் காய்ச்சி குடித்தாலே நிறைய பலன்கள் கிடைக்கும்.. ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், இந்த கரிசலாங்கண்ணி கீரையை 48 நாட்களுக்கு, நெய்யில் கலந்து சாப்பிட்டு, இரவில் பசும் பால் குடித்து வந்தாலே, நிவாரணம் கிடைக்கும் என்பார்கள்.
கண் எரிச்சல் : கண் வலி, கண்ணில் நீர் வடிதம், கண் எரிச்சல், போன்ற கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை இந்த இலைகள் தீர்க்கின்றன.. அதனால்தான், இந்த இலையை அரைத்து, தலைக்கு தடவி குளிப்பார்கள். அவ்வளவு ஏன்? பெண்கள் பயன்படுத்தும் கண் மை, இந்த கீரையின் சாறிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, பல் ஈறுகளில் ரத்தம் வடிவது, ஈறுகள் பலவீனமாக இருப்பது, பற்களில் வலி என்றால், அதற்கும் இந்த கீரையே பயன்படுகிறது.
தலைமுடி வளர்ச்சி: இந்த வெள்ளை கரிசலாங்கண்ணியை தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள்... கரிசலாங்கண்ணி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்து வந்தால், தலைமுடி வலுப்பெறும்..












Click it and Unblock the Notifications