ருத்ராட்ச மாலையை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?.. திருமணமானவர்கள் அணியலாமா? தாம்பத்ய உறவில் ஈடுபடலாமா?
சென்னை: சிவபெருமானின் வடிவமாக பார்க்கப்படும் ருத்ராட்சத்தின் பயன்கள் என்னென்ன தெரியுமா. இதை அணிந்து கொண்டால் சாமியாராகிவிடுவோமா என்ற சந்தேகம் இருக்கிறதா ?
சிவபெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானதாக சொல்கிறார்கள். இந்த மாலையை சித்தர்கள் கூட அணிந்துள்ளார்கள். எந்த சிவலிங்கத்தையும் ருத்ராட்சம் அணியாமல் அலங்கரிக்கவே மாட்டார்கள்.

இந்த ருத்ராட்சம் சிவனின் அருளை நமக்கு தருகிறது என்பது ஐதீகம். இந்த ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை கணக்கிட்டு எத்தனை முகங்கள் இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். அதாவது ருத்ராட்சையில் 5 கோடுகள் இருந்தால் பஞ்சமுக ருத்ராட்சம் என அழைக்கிறார்கள்.
மொத்தம் 21 முகங்கள் உள்ளன. இவற்றில் ஒரு முக ருத்ராட்சை கிடைப்பதுதான் மிகவும் அரிதானது. இது மோட்சம் தரக் கூடிய சக்தியை தருகிறது. அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளும் மருத்துவர்கள் அணிந்து கொள்வர். 2 முக ருத்ராட்சம் என்பது பாவத்தை நீக்கும். இதில் 3 முகங்களை கொண்ட ருத்ராட்சத்தை அங்காரகன் ஆள்வதாக பார்க்கப்படுகிறது.
4 முகம் ருத்ராட்சத்தை அணிந்தால் புத்தி கூர்மை ஏற்படும். 5 முக ருத்ராட்சத்தை அணிந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனம் வலுப்பெறும். 7 முக ருத்ராட்சம் என்பது ஆதிசேஷனை குறிக்கும். பிச்சைக்காரனையும் அரசனாக்கும் சக்தி உள்ளது. இதை அணிந்தால் நிதி சிக்கலில் இருந்து விடுபடலாம். இப்படியாக ருத்ராட்சங்களின் முகங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் 12 முதல் 21 முகங்களை வரை கிடைப்பது அரிது.
அதில் 1,11,7,8,9 ஆகியவையும் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. இதன் விலையும் அதிகமாகும். இந்த ருத்ராட்சத்திலும் மோசடிகள் நடக்கின்றன. எனவே இதை பார்த்து வாங்க வேண்டும். இந்த ருத்ராட்சங்கள் நேர்மறை எண்ணங்களை துரத்துகின்றன. இந்த புனித ருத்ராட்சத்தை ஆண், பெண், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் அணியலாம்.
மாதவிடாய், தாம்பத்யம் ஆகியவை இயற்கை விஷயங்கள் என்பதால் இந்த நேரத்தில் ருத்ராட்சம் அணிவதில் தவறில்லை. அது போல் யாருக்கேனும் திதி கொடுக்கும் போது அணிந்திருக்கலாம். இவற்றை தவிர மற்ற நேரங்கள் சுத்தமாக இருத்தல் வேண்டும். ருத்ராட்சம் அணிந்திருக்கும் போது மது அருந்தக் கூடாது, புகைப்பிடிக்க கூடாது, அசைவம் சாப்பிட கூடாது. அது போல் இறுதி சடங்கு பணிகளை செய்யக் கூடாது.
திருமணமானால் ருத்ராட்சம் அணியக் கூடாது என்பது தவறான கருத்து. சிவன் கோயில்களில் தினமும் திருப்பள்ளி எழுச்சி நடக்கும். அப்போது இரவில் சிவனும் அம்பாளும் ஒரே ஊஞ்சலில் இருப்பர், மறுநாள் காலையில் அவர்கள் அவரவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்படும். எனவே தேவியுடன் இருக்கும் போது சிவனும் ருத்ராட்சம் அணிந்திருப்பார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications