முருங்கையிலை "டிட்டோ".. சர்னு வெயிட் குறையும்.. சர்க்கரை நோயாளி இதை குடிச்சு பாருங்க.. சூப்பர் ஜூஸ்
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் எடை குறைப்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக உள்ளது சேப்பங்கிழங்கு இலைகள்.. எப்படி தெரியுமா?
பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்த சேப்பங்கிழங்கைவிட, இந்த கிழங்கின் இலைகள் அதிக சத்துக்கள் உடையன.. அந்தவகையில், சேப்பங்கிழங்கு இலை தரும் நன்மைகள் என்னென்னவென்று பார்ப்போம்.

சேப்பங்கிழங்கை பொறுத்தவரை, வைட்டமின் A, E, பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, போன்ற சத்துக்களை உள்ளடக்கியது.. அதனால்தான், கண்களுக்கும், பற்களுக்கும் எலும்புகளுக்கும், மிகுந்த வலுவையும், செயல்பாட்டையும் தருகின்றன.
நார்ச்சத்து: நார்ச்சத்து அதிகமுள்ள இந்த கிழங்கு செரிமான கோளாறை சீராக்குகிறது.. குடல்புண்களை ஆற்றுகிறது.. நரம்பு தளர்ச்சியை சரிசெய்கிறது.. ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுக்கிறது. சருமத்தை பாதுகாக்கிறது. சேப்பங்கிழங்கு இவ்வளவு நன்மைகளை தந்தாலும், சேப்பங்கிழங்கு இலைகளில் கூடுதல் மருத்துவ தன்மைகள் உள்ளன.
இதய வடிவில் காணப்படும் இந்த இலைகள் சமையலுக்கு உகந்தது. பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷத்தன்மையை முறிக்கும் தன்மை இந்த இலைகளுக்கு உண்டு.. வைட்டபின் B உள்ளதால் நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது இந்த இலைகள்.
இதய வடிவ இலை: வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த இலைகளில் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து நிறுத்துகிறது.. குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த இலைகளுக்கு உண்டு.. குறிப்பாக, பெண்களை அதிக அளவு பாதிக்கும், மார்பக புற்று நோய் வராமல் தடுக்கவும் இந்த இலைகள் துணைபுரிகின்றன.
இலைகளில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மிகச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. ரத்தக்கசிவு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இந்த இலைகளே போதும்..
உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த கீரையை பயன்படுத்தலாம்.. நார்ச்சத்துக்கள் நிறைந்த இலைகளை சமைத்து சாப்பிடும்போது, மலச்சிக்கல் தீர்ந்து குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இரும்புச்சத்து: வழக்கமாக இலைகளில், இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் என்றாலும், இந்த சேப்பங்கிழங்கு இலைகளில் சற்று கூடுதலாகவே உள்ளதாம். எனவே, அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த இலைகளை சமைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. காரணம், இந்த இலைகளில் சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட், ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் அனைத்துமே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய அம்சங்களாகும்.
நீரிழிவு நோயாளிகள்: சமீபத்தில் இந்த இலைகளிலிருந்து சாறு எடுத்து, எலிகளுக்கு தந்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அப்போது, அதன் ஆண்டிஹைர்பெர்ட்டென்சியஸ் மற்றும் கடுமையான டையூரிக் தன்மை, எலிகளின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தெரிய வந்துள்ளது. அதனால், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த இலைகள் மிகச்சிறந்த உணவாக திகழ்கிறது.
அதேபோல, சர்க்கரை நோய் உள்ள எலிகளுக்கு, இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனாலை கொண்டு பரிசோதனை செய்திருக்கிறார்கள். அப்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாம்.
அந்தவகையில், இந்த இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்றே சொல்கிறார்கள். சேப்பங்கிழங்கு இலையில் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென சர்க்கரை அதிகரிக்கவும் செய்யாது.
எப்படி சாப்பிடலாம்: இந்த இலைகளை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த இலைகளை வைத்து, சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக இலையை சாப்பிடக்கூடாது..
சிலருக்கு இந்த இலைகளால் அரிப்பு, சிவந்து போதல், எரிச்சல் போன்றவை சருமத்தில் ஏற்படலாம். இந்த இலைகளில் உள்ள ஆக்ஸலேட் சிறுநீரக கற்களையும் உருவாக்கலாம். அதனால்தான், இதை பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிட சொல்கிறார்கள். எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று பலன் பெறலாம்.












Click it and Unblock the Notifications