வசம்பு வாசம்.. திருஷ்டிக்கு மட்டுமில்லீங்க.. இப்படியும் வசம்பு யூஸ் பண்ணலாம்.. அதென்ன வசம்பு ஆயில்
சென்னை: மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காலை நேரத்தில் என்ன உணவு சாப்பிடலாம் தெரியுமா? மூலத்தை போக்குவதில் வசம்புக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது தெரியுமா?
மூலநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.. நீண்ட நாட்களாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் இருந்தால் மூலநோய் வர வாய்ப்புள்ளது. அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், அலர்ஜி பிரச்சனை இருப்பவர்களும் மூல நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.

உணவு முறைகள்: அதிக காரமான உணவு, அதிகமாக வெயிட் தூக்குவது, குறைவான நார்ச்சத்து உணவு, இப்படி பல்வேறு வகைகளில் மூலநோய் ஆபத்துகள் நம்மை நெருங்குகின்றன.. இந்த மூலநோய் அதிகமாக இருந்தால் அல்லது ரத்தக்கசிவுகள் மூல நோய் பாதிக்கப்பட்டால், உடனடியாக தாமதிக்காமல் டாக்டரை சந்தித்து, முறையான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும்.
அதேசமயம் உணவில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதன்மூலம் உணவு எளிதில் ஜீரணமாகும்.. அதேபோல, எளிதில் ஜீரணமாக உணவுகளையே எடுத்து கொள்ளலாம்.. உஷ்ண பொருட்களை தவிர்த்துவிட்டு, குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட துவங்க வேண்டும்.. அதாவது, மலம் கழிப்பதில் எந்த சிரமமும் இல்லாதவாறு, உணவுமுறைகளை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
பழைய சாதம்: இதில், மூலநோய் தணிய, தினமும் காலையில் பழைய சாதம் குடிக்கலாம்.. இரவு மீதமாகும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி, சின்ன வெங்காயம், சிறிது கல் உப்பு போட்டு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த பழைய கஞ்சியை 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், மூல நோய்க்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
இப்படி இரவு நேரம் தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட்டால், லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.. இதை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, உடலிலுள்ள உஷ்ணங்கள் தணிந்துவிடும்.. மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் இந்த கஞ்சி தண்ணீர் செயல்படும்.. அல்சர் புண்களும் ஆறிவிடும்.. சிறுகுடலும் ஆரோக்கியம் பெறும்.. அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சி பெறும்.
நாட்டு மருந்து: அதேபோல, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வசம்புவை வைத்தும் இதற்கு எளிய முறையில் தீர்வு காணலாம்.. பொதுவாக, பிறந்த குழந்தைகள் எந்த நோய் நொடியில்லாமல் இருப்பதற்காக இந்த வசம்பை கோர்த்து பிறந்த குழந்தைகளின் கைகளில் கட்டுவது உண்டு. இந்த வசம்பானது வசம்பு வேரானது நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. வயிறு தொடர்பான பிரச்சனைகளை இந்த வசம்பு போக்கக்கூடியது.
வயிறு வீக்கம், வயிறு உப்புசம் பிரச்சனைகளுக்கு வசம்பை தீயில் சுட்டு தூளாக்கி, தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தருவார்கள்.. குழந்தைகளுக்கு பசியின்மை இருந்தாலும், இந்த வசம்புவை உள்ளுக்குள் மருந்தாக தருவார்கள்..
வசம்பு: ஆனால், மூலநோய்க்கும் இந்த வசம்புவை பயன்படுத்தலாம்.. வசம்பு பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.. இந்த பொடியை, நல்லெண்ணெய்யுடன் சேர்த்து கலக்க வேண்டும்.. பிறகு இதை லேசாக சூடு செய்து, ஒரு வெள்ளை துணியில் வைத்து கட்டிவிட வேண்டும்.
இப்போது இந்த துணியை பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் போல கொடுக்க வேண்டும்.. அப்போது, வெள்ளை துணியிலிருக்கும் எண்ணெய், பாதிக்கப்பட்ட இடத்தில் விழும்போது, நரம்புகள் சுருங்க தொடங்கும்.. இதற்கு பிறகு, ரத்தப்போக்கு படிப்படியாக நிற்கும். ரத்த நாளங்கள் இயல்பு நிலைக்கு வரும்வரை இப்படி இதமாக ஒத்தடம் செய்யலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications