குண்டு குண்டுனு ஆகணுமா? இருக்கவே இருக்கு ஜவ்வரிசி.. ஜவ்வரசி கிடைக்கும் முத்துமுத்து பலன்.. சூப்பர்ல
சென்னை: ஜவ்வரிசியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.. இவ்வாறு நிபுணர்கள் அறிவுறுத்துவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
100 கிராம் ஜவ்வரிசியில் மட்டுமே 351 கிலோ கலோரிகள், 87 கிராம் கார்போஹைட்ரேட், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.2 கிராம் புரதம் அடங்கியிருக்கின்றன.. இவைகளை தவிர, கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே உள்ளன..

அதனால்தான் ஜவ்வரிசியில், பால், காய்கறி, பருப்புகள் சேர்த்து சமைக்கப்படுகிறது. இதனால், முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவை நம்மால் பெற முடியும்.
உடல்வாகு: மெலிந்த உடல் வாகு உள்ளவர்கள், பலவீனமான உடலை கொண்டவர்கள், கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு இந்த ஜவ்வரிசி. காரணம், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவாக இது உள்ளதால், உடலுக்கு ஆற்றலை தருகிறது.. மாவுச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், இதன் மூலம் எளிதில் உடல் எடையை பெறலாம்.
அதனால்தான், உண்ணாவிரத காலங்களில் ஜவ்வரிசியை சாப்பிட சொல்கிறார்கள்.. விரத காலங்களில் ஏற்படும், அசதி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்றவற்றை தடுக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்து இந்த ஜவ்வரிசி ஆகும்.. காரணம், ஜவ்வரிசியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த ஓட்டத்தை கட்டுக்குள் வைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே, இதயம் பாதுகாக்கப்படும்.
புண்கள்: அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ஜவ்வரிசி வரப்பிரசாதமாகும். வயிற்றிலுள்ள புண்களை ஆற்றி, குடல் பாதுகாப்பு கிடைக்க செய்கிறது.. அதாவது, உணவுக்குழாயில் செரிமானமான உணவுப்பொருட்கள், சுலபமாக கடந்து செல்ல குடலின் சுவற்றில் ஒருவிதமான வழவழப்பு தன்மையை இந்த ஜவ்வரிசி உண்டாக்குகிறதாம்.
அதனால்தான், குடல்புண்கள் எளிதாக ஆறுகின்றன. புரோட்டீன்கள் ஜவ்வரிசியில் அதிகம் என்பதால், தசைகளை பலம் தரும் செல்களை புதுப்பிக்க செய்கிறது..
காபி டீ அதிகம் குடிப்பவர்களுக்கு உடலில் பித்தம் சேர்ந்துவிடும். இதுபோன்றவர்கள், ஜவ்வரிசியில் கஞ்சி செய்து குடித்தால், பித்தம் விலகும்.. அடிக்கடி ஜவ்வரிசியை உணவில் சேர்ப்பதால், மூட்டுவலி அபாயமும் குறைகிறது.. எலும்புகளையும் பலப்படுத்துகிறது. எலும்பு வலுவடைகிறது. எலும்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது. எலும்பு தொடர்பான பிரச்சனைகள் முக்கியமாக ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வராமல் தடுக்கிறது.எனவே, வளரும் பிள்ளைகளுக்கு ஜவ்வரிசி சிறந்த உணவாகும்.
சர்க்கரை நோயாளிகள்: இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்கலாம். காரணம், ஏராளமான சர்க்கரையும், கார்போஹைட்ரேட்களும் உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் ஜவ்வரிசியை தவிர்த்துவிடலாம்.
பெண்களுக்கு இந்த ஜவ்வரிசி மிகவும் பலன்தருகிறது.. எப்படி தெரியுமா? குழந்தை பேறு உண்டாக்கக்கூடியது இந்த ஜவ்வரிசி.. அந்தவகையில், கருவுறும் சக்தியை அதிகரிக்க செய்கிறதாம்.. மாதவிடாய்க்கு முந்தைய கால காலகட்டத்தில் ஜவ்வரிசி சாப்பிடுவதால், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உபாதைகளை குறைக்கலாம்.
மாதவிடாய்: அதேபோல மெனோபாஸ் என்று சொல்லப்படும், மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகள், குறிப்பாக தலைவலி, உடற்சோர்வு போன்றவற்றுக்கு இந்த ஜவ்வரிசி நிவாரணியாக விளங்குகிறது.
மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், ஜவ்வரிசி அதற்கு கைகொடுக்கிறது.. மாதவிடாய் ஏற்பட்ட 4 அல்லது 5வது நாட்களில் ஒரு கிண்ணம் ஜவ்வரிசியை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. மதிய உணவில், தயிருடன் 1 கப் ஜவ்வரிசி சாப்பிட்டால், மாதவிடாய் சமயத்தில் பசியை உண்டாக்கும்.
கர்ப்பிணிகள்: அதேபோல, கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாக இந்த ஜவ்வரிசி உள்ளது.. வைட்டமின் B6, ஃபோலேட் சத்துக்கள் உள்ளதால், கரு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இந்த ஜவ்வரிசி வழங்குகிறது. கர்ப்பிணிகள் இதை சாப்பிடும்போது, வயிற்றிலுள்ள குழந்தைக்கும் நன்மை தருகிறது.. மேலும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.












Click it and Unblock the Notifications