எலும்பு தேய்மானம், மூட்டுவலி நீங்க.. ஆர்த்ரைடிஸ் குறைய.. சுக்கான் இலை.. கல்லீரல் பலம் பெற சுக்காங்கீரை
சென்னை: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய கீரைதான் இந்த சுக்கான் கீரை.. அளவுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் சுக்கான் கீரையை பற்றி சுருக்கமாக பார்ப்போம். இந்த கீரையை யார் யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
சுற்றி சுற்றி சிலவகை கீரைகளை மட்டுமே உணவில் பயன்படுத்துகிறோமே தவிர, அதிக பயன்தரும் கீரைகள் பலவற்றை சமையலுக்கு நாம் உபயோகப்படுத்துவதேயில்லை. அதில் ஒன்றுதான், புளிப்பு சுவை நிறைந்த இந்த சுக்கான் கீரை.

கீரைகள்: மற்ற கீரைகளைவிட, கூடுதல் சத்துக்கள் இந்த கீரையில் உள்ளன. மற்ற கீரைகளை போலவே, இந்த கீரையையும் பருப்பு சேர்த்து சமைத்து கடைந்து சாப்பிடலாம்.. அல்லது சூப் போல வைத்து குடிக்கலாம். அல்லது இறைச்சி வகைகளில்கூட சேர்த்து சமைப்பார்கள்.. இந்த கீரை தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ரத்த அழுத்த பிரச்சனை நீங்கும்.. ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். எலும்பு தேய்மானம்: அதுமட்டுமல்ல,
இதய பாதுகாப்பு: சுக்கான் கீரையை சுக்காங்கீரை என்பார்கள்.. சுக்குகீரை, சொக்கான் கீரை என்றும் அழைப்பார்கள்.. கீரைகள் ரத்த விருத்திக்கு நல்லது என்றாலும், இந்த சுக்கான் கீரை இதய பாதுகாப்பை அதிகப்படுத்துகிறது. ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது.
பசி இல்லாதவர்கள், அஜீரண குறைபாடு நிறைந்தவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிடலாம். இதனால், கழிவுகள், நச்சுக்கள், வாயுக்கள் நீங்குவதுடன் நன்றாக பசியெடுக்கும். குடலும் சுத்தமாகிறது.
குடிப்பழக்கம்: கல்லீரலை உறுதிப்படுத்தக்கூடிய தன்மை இந்த சுக்கான்கீரைக்கு உண்டு.. அதாவது, குடிப்பழக்கத்துக்கு, கஞ்சா போதைக்கும் அடிமையாகி, கல்லீரலில் பாதிப்பு உள்ளவர்கள், இந்த சுக்காங்கீரையை தவறவிடவே கூடாது.
இதனால், கல்லீரலை சுற்றியுள்ள அபாயம் நீங்கிவிடும்.. பித்தத்தையும் நீக்கி கல்லீரலையும் பாதுகாக்கும். எனவேதான், மஞ்சள் காமாலை நோய்க்கு இந்த கீரையை மருந்தாக கொடுப்பார்கள். மதுபோதைக்கு ஆளாகியிருப்பவர்கள் இந்த சுக்கான் கீரையில் சூப் செய்து குடித்து வரலாம்.
எலும்பு தேய்மானங்கள், மூட்டுவலி பாதிப்பு உள்ளவர்கள், கால்சியம் நிறைந்த சுக்கான் கீரை மூலம் பயன்பெறலாம். கால்சியம் இதில் அதிகம் என்பதால், இந்த கீரையை நிழலில் உலர்த்தி தூள் செய்து, பற்களை துலக்கியுள்ளார்கள் நம்முடைய முன்னோர்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இந்த கீரையில் சூப் செய்து தந்தால், எலும்பு வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், வயிற்றிலுள்ள குடல் பூச்சிகளும் வெளியேறிவிடும்.
வாத பிரச்சனை: அதேபோல, வாத பிரச்சனை இருப்பவர்கள், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள், தைராய்டு உடையவர்கள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் சமையலில் இக்கீரையை சேர்த்து கொள்ள வேண்டும். தைராய்டு பிரச்சனை, எலும்பு தேய்மானம் பிரச்சனை, ஆர்த்ரைடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமருந்தாகின்றன இந்த கீரை. ரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்வதில் இந்த கீரைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.












Click it and Unblock the Notifications