மட்டனை விட பெஸ்ட் நாட்டுக்கோழி.. கேன்சர் முதல் சுவாச கோளாறு வரை விரட்டும் சூப்பரான நாட்டுக்கோழி சாறு
சென்னை: எந்த உணவு கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்கிறதோ, அதுவே மிகச்சிறந்த உணவு என்கிறார்கள் நிபுணர்கள்.. இதை மையப்படுத்திதான், நாட்டுக்கோழியை சிறந்த உணவில் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
மட்டனை விட பெஸ்ட் இந்த நாட்டுக்கோழி.. காரணம், 100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது. ஆனால், 100 கிராம் பிராய்லர் கோழியில், 23 கிராம் கொழுப்பு உள்ளதாம். 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரோட்டீன் உள்ள நிலையில், 100 கிராம் நாட்டுக்கோழியில் 21 கிராம் புரோட்டீன் இருக்கிறதாம்.

கொழுப்பு: அந்தவகையில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் உள்ளதால், நாட்டுக்கோழி உடல் எடையை குறைக்க உதவுகிறது.. ஆனால், வெறுமனே வேகவைத்து, உப்பு, மிளகு சேர்த்து சாப்பிடும்போது பலன் முழுமையாக கிடைக்கும் மீன்களை போலவே, நாட்டுக்கோழியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து நெருங்குவதில்லை.
காமத்தை தூண்டும் உணவு பட்டியலில் நாட்டுக்கோழிக்கு பிரதான இடம் இருக்கிறது. அதேபோல, உடல் பலவீனமானவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து இந்த நாட்டுக்கோழி.. வளரும் குழந்தைகள் முதல், நீண்ட நாட்கள் படுக்கையில் கிடந்தவர்கள் வரை நாட்டுக்கோழியை தவிர்க்கவே முடியாது. உடலுக்கு பலத்தையும், தசைகளுக்கு உறுதியையும், நரம்புகளுக்கு உரத்தையும் தருகிறது இந்த நாட்டுக்கோழி..
கண் பார்வை: நாட்டுக்கோழியில் அடங்கியிருக்கும், வைட்டமின் A, கண்பார்வையை கூர்மை பெற செய்கிறது.. இதிலுள்ள இரும்புச்சத்துக்கள் ஹீமோகுளோபின் பிரச்சனையை தீர்த்து ரத்தவிருத்தியை அதிகரிக்க செய்கிறது.
நாட்டுக்கோழியிலுள்ள B வைட்டமின்கள் கண்புரை, தோல் கோளாறுகளை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. செரிமானத்தையும், நரம்பு மண்டலத்தையும் மேம்படுத்த உதவுகிறது. ஒற்றை தலைவலி, இதய கோளாறுகள், நரை முடி, அதிக கொழுப்பு, சர்க்கரை நோயை தடுக்க பேருதவி புரிகின்றன..
எலும்புகள்: இதிலுள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. இதனால் எலும்புகள், பற்கள் வலுப்பெறுகின்றன.. அதேபோல, இதிலுள்ள பாஸ்பரஸ், உடல் பலவீனம், எலும்பு ஆரோக்கியம், மூளையின் செயல்பாடு, பல் பராமரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற சிக்கல்களை சமாளிக்க தூண்டுகோலாகிறது.
நாட்டுக்கோழியில் குழம்பு, வறுவல் செய்வதைவிட, ரசம், சூப் வைத்து குடிப்பதே சிறந்த மருந்தாகும். உடல் உஷ்ணத்தை அதிகம் தரக்கூடியது என்பதால், இதில் நல்லெண்ணெய் பயன்படுத்துவார்கள்.
நாட்டுக்கோழி ரசம்: நாட்டுக்கோழி ரசம் வைப்பதானால், ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி, பச்சை மிளகாய், மிளகு சீரகம் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு என ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். பின்னர் சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை கொட்டி, தண்ணீர் ஊற்றி வேகவைத்து, மல்லி இலை தூவினால் நாட்டுக்கோழி ரசம் ரெடி.
நாட்டுக்கோழியை அம்மியில் நன்றாக நசுக்கி எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு வாணலில் எண்ணெய், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இடித்து வைத்த நாட்டுக்கோழியை சேர்த்து, மஞ்சள் பொடி, மல்லிதூள், கல் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்தால் நாட்டுக்கோழி இடிச்ச சாறு ரெடி.
தாய்மார்கள் : இளம் தாய்மார்களுக்கு இந்த நாட்டுக்கோழி மிகவும் நல்லது.. பிரசவத்தில் இழந்த சத்துகளை மறுபடியும் பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்து தருவார்கள்.. ஆனால், இப்போதெல்லாம் கருத்தரித்தவுடனே, நாட்டுக்கோழி சாப்பிடுவது நல்லது என்கிறார்கள். ஆனால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது முறையான ஆரோக்கியமாகும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications