100 டூ 103 டிகிரி பாரன்ஹீட் காய்ச்சல்.. உடல் வலி, சிவந்த ராஷ்கள், பொதபொதவென கண்களை சுற்றி வீக்கமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்கு காய்ச்சல் வந்தால் என்னென்ன அறிகுறிகள் வருகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தற்போது சீசன் முடிந்த போதிலும் மீண்டும் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

கோடை காலம், மழை காலங்களில் புதிய புதிய ப்ளூக்கள் வந்துக் கொண்டே இருக்கும். ஏற்கெனவே உள்ள காய்ச்சல்களும் அந்தந்த சீசனுக்கு ஏற்ப வந்து செல்லும். ஒவ்வொரு காய்ச்சலுக்கும் ஒரு வைரஸோ பாக்டீரியாவோ காரணமாக இருக்கலாம்.

ஒரு சில காய்ச்சல்களுக்கு சில உயிரினங்களும் காரணமாக இருக்கும். அந்த வகையில் டெங்கு காய்ச்சலுக்கு ஏடீஸ் எனப்படும் பகலில் கடிக்கும் கொசுவே காரணமாக அமைகிறது. இந்த டெங்கு காய்ச்சல் உயிருக்கே உலை வைக்கும் வேலையை செய்கிறது.

தண்ணீர் தேங்காமல்: இதனால்தான் அரசாங்கமும் வீட்டுக்கு அருகே தண்ணீர் தேங்காத வகையிலும் குப்பைகள் இல்லாத வகையிலும் பார்த்து கொள்ளுமாறு கூறுகிறார்கள். ஆட்டுக்கல், அம்மிக்கல், பழைய டயர்கள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே நாசம் செய்கிறது.

Do you know the symptoms of Dengue fever?

ரத்தக் கசிவு: இதனால்தான் இதை உயிருக்கு உலை வைக்கும் காய்ச்சல் என்கிறோம். இந்த காய்ச்சல் வந்தால பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் ரத்தக் கசிவு ஏற்படும். ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை பிளேட்லெட்டுகள் (ரத்த தட்டுகள்) உள்ளன. இவை இந்த எண்ணிக்கையிலிருந்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரத்த போக்கு: இந்த பிளேட்லெட்டுகள் குறைந்தால் சிறுநீர் கழிக்கும் போது மலம் கழிக்கும் போதும் பல் தேய்க்கும் போதும் ரத்தக் கசிவு ஏற்படும். டெங்கு காய்ச்சலுக்கு எந்தவித மருந்தும் இல்லை என்கிறார்கள். டெங்கு வந்தால் ஆன்டிபயாடிக் கொடுப்பதும், நோயாளியின் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடிக்கடி நீர், நீர்மோர், இளநீர், ஜூஸ் உள்ளிட்டவைகளை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வெளியேறும் வைரஸ்: இதன் மூலம் சிறுநீர் அடிக்கடி கழிப்பதால் அதன் வழியாக அந்த வைரஸுகள் வெளியேற வாய்ப்புகள் உள்ளன. பற்களை பிரஸ் போட்டு தேய்க்க கூடாது. இந்த காய்ச்சலின் போது பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அப்போது வழக்கத்திற்கு மாறாக உதிரப்போக்கு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

டெங்கு அறிகுறிகள்: டெங்கு காய்ச்சல் வந்தால் அதீத காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி உள்ளிட்டவை ஏற்படும். அதிக சோர்வாகவும் காணப்படுவர். மேலும் உடலில் ஆங்காங்கே தடிமனான ரேஷுகள் ஏற்படும். சிலருக்கு கண்களை சுற்றி வீக்கம் ஏற்படும். வீங்கிய பகுதிகளில் வலியும் இருக்கும். கேபிலரி டியூப்களில் நீர் சேர்ந்து கொள்வதால் இது போன்று வீக்கங்கள் ஏற்படும்.

ண்களில் வீக்கம்: எனவே அதீத காய்ச்சலுடன் தடிமன்கள், அதில் அரிப்புகள், கண் வலி, கண்களை சுற்றி வீக்கம் உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். டெங்கு காய்ச்சல் பிளேட்லெட்டுகளை உருவாக்கும் எலும்பு மஞ்சையையே தாக்குகின்றன. இதனால்தான் அதன் எண்ணிக்கை குறைகிறது. இந்த டெங்கு மண்ணீரலையும் வீக்கமடைய செய்கிறது. எப்போதும் ஆரம்ப கால சிகிச்சைகள் மூலம் நோயாளி மோசமான நிலைக்கு தள்ளப்படாமல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+