சர்க்கரை நோயாளி "இதை" மட்டும் தொடாதீங்க.. நீரிழிவு நோயாளிகளுக்கு பெஸ்ட் பழம் இதுதான்.. நோட் பண்ணுங்க
சென்னை: நீரிழிவு நோயை எந்நேரமும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உணவுப்பழக்கத்தையும் நீரிழிவு நோயாளிகள் சரியாக கடைப்பிடிக்க வேண்டி உள்ளது.
சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, அதிக அளவு சிறுநீர் கழிப்பதும், உடல் சோர்வுகளும் இருக்கும்.. இதை சரிக்கட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டி உள்ளது. ஆனால், எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடுவதாக ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்கிறது.

லிஸ்ட் ரெடி: என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது? எதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்ற லிஸ்ட்டை தயாரித்து, அதை பின்பற்றினாலே போதும் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
பருப்புகள், விதைகள், கீரைகள் இவைகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டி உள்ளது.. காரணம், பருப்புகளில் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவு. அதேசமயம், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன.. இந்த இரண்டுமே ரத்த சர்க்கரை அளவை அவ்வளவாக பாதிக்காது... மேலும், வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள், இரும்புச்சத்துக்கள் என அனைத்துமே இவைகளில் கிடைத்துவிடுகிறது.
முட்டைக்கோஸ்: பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு, வைட்டமின் C குறைப்பாடு வரலாம். இவைகளை தவிர்க்கக்கூடியது, காய்கறிகள்தான். பீன்ஸ், முட்டைக்கோஸ், அருகம்புல் போன்றவற்றில் நிறைய நார்ச்சத்தும், தாதுக்களும் உள்ளதால், இவைகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு உட்பட, அதிக கார்போஹைட்ரேட் அளவு கொண்ட பழங்கள், காய்கறிகள், உணவுகள் கெடுதலையே தந்துவிடும்..
இனிப்பு சுவை கொண்ட கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதுதான் ஆச்சரிய உண்மை. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறதாம்.
சர்க்கரை நோயாளிகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.. பசியும், சோர்வும் அதிகமாக இருக்கும்.. இந்த பிரச்சனைக்கெல்லாம் தேங்காய் பூக்கள் மிகவும் சிறந்தது.. இதனால், கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். வெறும் தேங்காயை அப்படியே சாப்பிடாமல், சட்னி, பொரியல்களில் கலந்து சாப்பிடலாம்.
பிளம்ஸ் பழங்கள்: பழங்கள் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதால், அதை நீரிழிவு நோயாளிகள் முழுமையாக தவிர்த்து விடுகிறார்கள்.. ஆனால், பிளம்ஸ், கிவி, ஜாமூன்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு அளவை கொண்டுள்ளன..
நெல்லிக்காயைவிட பெஸ்ட் பழம் வேறில்லை.. வைட்டமின் C, நார்சத்துக்கள் அதிகம் உள்ள பழம்.. அதிக சத்துக்கள் நிறைந்த பலன்களில் முதன்மையானது கொய்யாப்பழம்... அதேபோலஆரஞ்சு, திராட்சை பழங்கள், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கக்கூடியது.. பப்பாளியில் சர்க்கரையின் அளவு என்பதால் தாராளமாக சாப்பிடலாம்..
என்ன பழங்கள் சாப்பிடலாம்: ரத்த ஓட்டத்தை சீராக்குவதில், மாதுளைக்கு நிகர் வேறில்லை.. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது ஆப்பிள்.. உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது தர்ப்பூசணி. ஆனால், உலர்ந்த பிளம்ஸ், அன்னாசிப்பழம், பழுத்த வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உலர்ந்த திராட்சை, திராட்சை மற்றும் பேரீச்சம்பழம், மாம்பழம், போன்ற இனிப்பு பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால், இந்த பழங்களை தவிர்க்க வேண்டுமாம்.
புரத சத்துக்கள்: முட்டை போன்ற புரோட்டீன்களை அதிகம் சாப்பிட வேண்டும்.. பால் பொருட்கள், சிக்கன், மீன் போன்றவற்றிலும் புரோட்டீன் உள்ளது.. அதேசமயம், கொழுப்பின் அளவு வேறுபடும் என்பதால், குறைந்த அளவு சாப்பிட வேண்டும்.
பாகற்காய் இலையில் சாறு எடுத்து, அதில், சிறிது பெருங்காய பொடியை கலந்து சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஆனால், மருத்துவரின் உதவியோடுதான் இந்த இலைகளை பயன்படுத்த வேண்டும்.
முருங்கையிலை, அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவைகளை நிறைய சேர்த்து கொள்ளலாம்.. ஜூஸ் வடிவிலும் பயன்படுத்தலாம்.. நன்மைகளையே தந்தாலும், மிதமான அளவில் எடுத்து கொண்டால் சிறப்பு. அதைவிட முக்கியமாக, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று, உணவுமுறையை கடைப்பிடிப்பது அதைவிட சிறப்பு..!!!
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications