சர்க்கரை நோயாளிகளே! 3 வேளையும் சாதம் சாப்பிடணுமா? கவலையை விடுங்க.. இந்த அரிசி இருக்க கவலை ஏன்?
சென்னை: உடலுக்கு மிகவும் நன்மையை பயக்கும் குள்ளக்கார் அரிசியின் பயன்கள் என்ன என தெரியுமா? இந்த அரிசியின் மூலம் என்னென்ன உணவு வகைகளை செய்யலாம் எனபதையும் தெரிந்து கொள்வோம்.
பாரம்பரிய அரிசி வகைகள் ஒவ்வொன்றாக தற்போது மீட்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. நிறைய வகைகளில் அரிசிகள் உள்ளன. பொதுவாக நமக்கு தெரிந்து பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, குண்டு அரிசி, பாஸ்மதி அரிசி, பொன்னி அரிசி, நொய் உள்ளிட்டவைதான்.

ஆனால் பாரம்பரிய முறையில் நிறைய அரிசிகள் தற்போது பயிரிடப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. அவற்றில் உடலுக்கு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை 3 வேளை சாப்பிட்டாலும் உடல் நலனுக்கு எந்த பிரச்சினையும் வராது.
அந்த வகையில் நாம் குள்ளக்கார் எனும் அரிசி குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம். இது தமிழகத்தில் விளைவிக்கப்படுகிறது. குள்ளக்கார் அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலையும் நரம்பையும் வலுப்படுத்தும். இந்த அரிசியை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். இந்த அரிசி மூலம் செய்யப்படும் உணவு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
இந்த குள்ளக்கார் அரிசியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. அது போல் வெள்ளை அரிசியுடன் ஒப்பிடுகையில் ஜிங்க் அதிகமாக இருக்கிறது. அது ரத்த அழுத்தத்தை சீராக்கும். தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.
மூளை, நரம்புகள், உடலுக்கு ஆற்றலை தரும். குள்ளக்கார் அரிசியில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால் இது ஜீரணிக்க தாமதமாகும். எனவே இந்த அரிசி எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பை வலுவாக்கும். மலச்சிக்கலை போக்கும்.
இந்த அரிசியை கொண்டு இட்லி, தோசை, புட்டு, சாலட், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி, அரிசி பாயாசம், கிச்சடி உள்ளிட்டவைகளை செய்யலாம். இந்த அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும் (சிகப்பு அரிசி வேறு, குள்ளக்கார் அரிசி வேறு நிறம் ஒன்றுதான்). இது முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளும். இந்த அரிசி மூளையை சுறுசுறுப்பாக்கும். இந்த அரிசி 100 முதல் 110 நாட்களில் வளரக் கூடியது. இது பட்டைத்தீட்டப்படாத அரிசியாகும். இந்த பயிர் 100 செ.மீ. உயரம் வளரக் கூடியது.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications