குண்டா இருக்கீங்களா.. இரவில் "இதை" மட்டும் சாப்பிடுங்க..ஆமா, ஜவ்வரிசி இருக்குல்ல.. அப்படினா சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இரவு உணவில் கூடுதல் கவனத்தை செலுத்தினாலே போதும்.. குட்டி குட்டி டிப்ஸ்களை கடைப்பிடித்தாலே, மெல்ல எடை குறைய ஆரம்பித்துவிடும்.

இரவு 8 மணிக்கு மேல், உணவு சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. உடல் எடையை குறைக்க வேண்டுமானால், மாலை 6.30 முதல் 7.30 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டுமாம். இதுவே பெரும்பலனை பெற்று தந்துவிடும்.

 Do you know which Food Best for Weight Loss and What are the Health Benefits of Sabudana

காரணம், இரவில் நாம் எதை சாப்பிட்டாலும் அது கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பாக மாறிவிடுகிறது.. நாம் தூங்கும்போது, நம்முடைய உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது.

ஓட்ஸ்: எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும்.. இதில் முதல் சாய்ஸ், ஓட்ஸ் மற்றும் தினை வகைகள்தான்.. காரணம், ஓட்ஸ்ஸில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், எளிதில் ஜீரணமாகிறது..

எனவே, ஓட்ஸில் உப்புமா, இட்லி போல சாப்பிடலாம். அல்லது பொங்கல் போல செய்து சாப்பிடலாம்.. குக்கரில் பருப்பை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், சீரகம், மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறக, வேகவைத்த பருப்பு, ஓட்ஸ் இரண்டையும் சேர்க்க வேண்டும். கஞ்சி பதம் வரும்வரை காய்ச்சி இறக்கினால் ஓட்ஸ் பொங்கல் ரெடி.

அல்லது காய்கறி உப்மா, தவா பனீர், வறுத்த, வேகவைத்த, பச்சை காய்கறிகள், காய்கறி இட்லி, சியா விதை புட்டு, ராகி மாவு ரொட்டி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளலாம்..

வாழைப்பழம்: குறைந்த கலோரியும், புரோட்டீன் நிறைய உள்ள தயிரை இரவில் ஒரு கப் சாப்பிடலாம்.. அல்லது வாழைப்பழத்தில் நிறைய நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளதால், உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது.. அல்லது சிறிது பாதாம் சாப்பிட்டாலும் நன்மை கிடைக்கும்.. குறைந்த கலோரி + அதிக ஊட்டச்சத்து நிறைந்ததுதான் இந்த பாதாம்..

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இதனால், உடல் எடை வெகுவாக குறைகிறது.. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காயையும் பொரியல் செய்து சாப்பிடலாம். அல்லது காய்கறி, பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடலாம். உடல் எடை குறைப்பவர்கள் என்றில்லாமல் அனைவருமே இரவில் லைட்டான உணவையே சாப்பிட சொல்கிறார்கள்.

குழிப்பணியாரம்: ஆவியில் இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை சாப்பிடலாம்.. காய்கறி அவியல், ஓட்ஸ் கஞ்சி, தோசை, ஆப்பம், குழிப்பணியாரம், சப்பாத்தி, அடை, சாப்பிடலாம்.. சாலட்கள், தயார் செய்து சாப்பிடலாம்.. அல்லது பால், கிரீம் அல்லாத ஜூஸ்கள் சாப்பிடலாம்.

இரவு நேரத்தில் ஜவ்வரிசி உப்புமா இன்னும் நல்லது.. 1 மணி ஊற வைத்த ஜவ்வரிசியை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை சேர்த்து, பிறகு, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.. சிறிது கல் உப்பு, கொத்துமல்லி, எலுமிச்சம் சாறு கலந்து இறக்கினால், உப்புமா ரெடி.

கிரீன் டீ: ஒருவேளை இரவு பசி எடுத்தால் தண்ணீர் குடித்துவிடலாம் அல்லது ஒரு மலைவாழைப்பழம் சாப்பிடலாம்... எக்காரணம் கொண்டும் சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தூங்க செல்ல கூடாது. அதேபோல, என்ன சாப்பிட்டாலும் கட்டாயம் கிரீன் டீ ஒருகப் குடிப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+