கல்லீரலை "காலி" செய்வதே இதுதான்.. கல்லீரலை காக்க உதவும் உணவுகள், பழங்கள்.. உடனே நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: நம்முடைய உடலின் மிகப்பெரிய உறுப்புகளில் மட்டுமின்றி முக்கியமான உறுப்பும்கூட இந்த கல்லீரல்.. மற்ற உறுப்புகளைவிட, இந்த கல்லீரலுக்கு முக்கியத்துவங்கள் தரப்படுவது ஏன்? கல்லீரலை காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, மொத்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியை செய்வதே இந்த கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..

சிறுநீரகம்: சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகளைகூட மாற்றிவிடலாம்.. ஏன், இதயத்தைகூட மாற்றிவிடலாம்.. ஆனால், கல்லீரல் கெட்டுவிட்டால், உயிருக்கே ஆபத்து. எப்போதுமே, கல்லீரலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும்.. அதனால்தான், பேராபத்து என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி, கல்லீரலை பத்திரமாக பாதுகாத்து வைத்து கொள்வதுதான்.
இதற்கு 2 வழிகள் உள்ளன.. ஒன்று, கல்லீரலுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். மற்றொன்று, கல்லீரலுக்கு தொந்தரவுக்கு தரும் உணவுகளை தொடவே கூடாது.
சிவப்பு இறைச்சி: கல்லீரல் பாதிப்படைய முக்கிய காரணமே, நாம் எடுத்துக்கொள்ளும் உணவுதான்.. மதுபானம் இதில் முதன்மையான காரணமாக இருக்கிறது.. ஆல்கஹாலுக்கு அடுத்ததாக, சிவப்பு இறைச்சியை அதிகம் சாப்பிட்டாலும் கல்லீரல் பாதிப்பு வரலாம்.. உப்பை தவிர்த்தாலே, கல்லீரல் நோய் அண்டாது.. காரணம், உப்பில் சோடியம் அதிகமுள்ளதால், உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது.. கல்லீரலில் வீக்கம் வர காரணமே இதுதான்.. அதனால், உப்பை தவிர்க்கலாம் அல்லது குறைத்து கொள்ளலாம்.
இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வெள்ளை மாவில் செய்யப்படும் ரொட்டி, பீட்சா, பாஸ்தா போன்றவை தவிர்க்கலாம்.. மொத்தத்தில், உப்பு + சர்க்கரை இது ரெண்டுமே கல்லீரலுக்கு பகைதான்.
அப்படியானால், கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் போன்றவை கல்லீரலை காக்க உதவும் உணவுகள்.. சமையலில், நிறைய இஞ்சி, பூண்டு, வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து சமைக்க வேண்டுமாம்... அதனால்தான், அசைவம் செய்யும்போது, இந்த பொருட்கள் கட்டாயம் இடம்பெறுகின்றன.
மஞ்சள் : கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுப்பதே இந்த மஞ்சள்தான்.. கல்லீரல் புற்றுநோய்களை அண்ட விடாமல் தடுப்பதும் இந்த மஞ்சள்தான். பழங்களை பொறுத்தவரை, எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடியில் நிறைய வைட்டமின் C உள்ளன.. இவைகளில் பெஸ்ட் நெல்லிக்காய்தான். ஆப்பிள்களை சாப்பிடலாம்.. அல்லது ஆப்பிள் சீடர் வினிகரையும் சாப்பிடலாம். .
கீழாநெல்லி சாறு, கல்லீரலின் பாதுகாவலன் எனலாம்.. கீழாநெல்லியை செய்து, நன்றாக அரைத்து, அந்த விழுதை மோருடன் கலந்து குடித்து வந்தால், காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும்.. அல்லது கீழா நெல்லி பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.. இந்த பொடியை நீரில் கொதிக்க வைத்து, சீரகத்தூள், தேன் கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.. அல்லது இந்த செடியை காய வைத்து பொடி செய்து அதை மோரில் கலக்கி சாப்பிட்டாலும் காமாலை தீரும்..

புற்றுநோய்: மஞ்சள் காமாலை என்றில்லாமல், ஹெப்படைட்டிஸ்-B, ஹெப்படைட்டிஸ்-C போன்ற நோய்த்தொற்றுக்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீழாநெல்லிக்கு உண்டு.. இதை பயன்படுத்தும்போது, கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்கூட தடுத்து நிறுத்தப்பட்டுவிடுமாம். மதுப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளவர்களை தடுத்து நிறுத்துவதற்கும், மீண்டும் இயல்பு நிலைக்கு உடலை கொண்டு வருவதற்கும் கீழாநெல்லி பெரும் பலனை தருகிறது.
அதேபோல, ஒமேகா-3 நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் புரதமும் உண்டு, ஒமேகா 3 சத்தும் உண்டு.. சல்ஃபர் சத்தும் உண்டு.. இவைகள் எல்லாமே உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்க உதவுகிறது.
கல்லீரல் பாதுகாப்பு: பீட்ரூட்டை ஜூஸ் போல தயாரித்து சாப்பிடலாம். நச்சுக்கழிவுகளை விரைவாக அகற்ற, இந்த ஜூஸ் உதவும்.. முள்ளங்கியையும் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். க்ரீன் டீயை தேன் கலந்து குடிக்கலாம்..
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications