கீழாநெல்லியை விடுங்க.. கல்லீரலுக்கு இதுவும் பெஸ்ட் உணவு.. கண், தோலின் நிறம் மஞ்சளா? அப்ப இதை பாருங்க
சென்னை: ஈறுகளின் நிறம் மற்றும் தோலின் நிறங்களில் தோன்றும் அறிகுறிகளை வைத்தே, உடல் உபாதைகளை பற்றி ஓரளவு அறிந்து கொள்ளலாம்..!!
பல் ஈறுகளின் நிறத்தை வைத்தே, வாய் ஆரோக்கியம் அறியப்படுகிறது.. ஆரோக்கியமான ஈறுகள் என்றால், ரோஸ் கலரில் இருக்கும்.. இளஞ்சிவப்பு நிறத்தில் ஈறுகள் காணப்பட்டால், அவைகள் பலம்மிக்க உறுதியான ஈறுகள் என்று பொருள்.

ஈறுகள் கருப்பு கலர்: சிலருக்கு கருப்பு கலரில் ஈறுகள் இருந்தால், பலவகையான காரணம் இருக்கும்.. குறிப்பாக, அதிகப்படியான மெலனின் படிவதால் கருப்பு திட்டுகள் ஏற்படலாம்.. அல்லது சிகரெட் நிறைய பிடித்தாலும், கருப்பு கலரில் ஈறுகள் மாறலாம்..
பல் ஆரோக்கியம் சரியாக பராமரிக்கப்படவில்லையானாலும், ஈறுகளில் கருப்பு நிறம் தோன்றலாம்.. பல் இடுக்குகளில் உணவு துணுக்குகள் சிக்கி, பாக்டீரியாக்களை உருவாக்கி, மெல்லிய படலமாக ஈறுகளில் படிந்தும், கருப்பு கலருக்கு மாறலாம்..
அல்லது பலநாட்களாகவே வயிற்றில் ஏற்படும் புண்கள், தொண்டை சதை வளர்ச்சி, சைனஸ் நோய், சீரற்ற பல்லமைப்பு, ஸ்டீராய்டு மருந்துகள், பாதரசம், தாமிரம், துத்தநாகம் போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுவதாலும் ஈறுகளில் கருப்பு நிறம் தோன்றலாம்.. பதப்படுத்தப்பட்ட உணவுகள், கூல்டிரிங்ஸ், இப்படி எத்தனையோ காரணங்களினாலும், ஈறுகள் பாதிக்கப்படுகின்றன.
உடல் உபாதைகள்: இந்த அறிகுறிகளை வைத்தே உடல் உபாதைகளை அறிந்து கொள்ள முடியும்.. அத்துடன், வாய் ஆரோக்கியம் பராமரிக்கவும் இவைகள் உதவியாக இருக்கும்.
அதுபோலவே, நம்முடைய தோலின் நிறத்தை வைத்தும், கல்லீரல் ஆரோக்கியம் அறியப்படுகிறது. உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணிகளை செய்வதே இந்த கல்லீரல் தான்.. ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் இந்த கல்லீரல்தான்.. புரதத்தை உருவாக்குவதும் இந்த கல்லீரல்தான்..
சிறுநீரகம்: சிறுநீரகம், கண்கள் என பல்வேறு உறுப்புகளையும் மாற்றிவிடலாம்.. அவ்வளவு ஏன்? இதயத்தைகூட மாற்றிவிடலாம்.. ஆனால், கல்லீரல் கெட்டுவிட்டால், உயிருக்கே ஆபத்து. எப்போதுமே, கல்லீரலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பிறகே வெளியே தெரியவரும்.. அதனால்தான், இது பேராபத்து என்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி, கல்லீரலை பத்திரமாக பாதுகாத்து வைத்து கொள்வதுதான்.
கல்லீரலுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும், கல்லீரலுக்கு தொந்தரவுக்கு தரும் உணவுகளை தொடவே கூடாது. இந்த இரண்டு வழிகளில் கல்லீரலை காக்கலாம்.
கண்கள்: அதேசமயம், கல்லீரல் பற்றிய குறைபாடுகள் இருந்தால், அது கண்களிலேயே பிரதானமாக தெரிந்துவிடும்.. உதாரணமாக, உங்களின் கண்களோ அல்லது தோலின் நிறமோ மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைக்கான அறிகுறியாக இருக்கலாம்..
அதேபோல, கண்கள் அதிக வறட்சியாக காணப்பட்டாலும், கல்லீரல் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது, வாந்தி உணர்வு, வறண்ட தொண்டை, பசியின்மை, போன்றவைகளும் கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவர்களை அணுக வேண்டும்.
உணவுகள்: ஹெப்படைட்டிஸ்-B, ஹெப்படைட்டிஸ்-C போன்ற நோய்த்தொற்றுக்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீழாநெல்லிக்கு உண்டு.. இதை பயன்படுத்தும்போது, கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்கூட தடுத்து நிறுத்தப்பட்டுவிடுமாம். அதேபோல, ஒமேகா-3 நிறைந்த உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மீன், முட்டை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் புரதமும் உண்டு, ஒமேகா 3 சத்தும் உண்டு.. சல்ஃபர் சத்தும் உண்டு.. இவைகள் எல்லாமே உடலிலுள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்க உதவுகிறது. பீட்ரூட்டை ஜூஸ் போல தயாரித்து சாப்பிடலாம். நச்சுக்கழிவுகளை விரைவாக அகற்ற, இந்த ஜூஸ் உதவும்.. முள்ளங்கியையும் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும். க்ரீன் டீயை தேன் கலந்து குடிக்கலாம்..












Click it and Unblock the Notifications