காலையில தூங்கி எழுந்தா! கண்களுக்கு கீழ் வீக்கமா இருக்கா? முருங்கை இலை பத்து போதுமே!
சென்னை: கண்களுக்கு கீழ் வீக்கமாக இருக்கிறதா, இதற்கு சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாமா? எளிமையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தியே இது போன்ற பிரச்சினைகளை சரி செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கண்ணுக்கு கீழ் வீக்கமா? பட்டுனு சரியாக இதோ சில எளிய வழிகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம்மில் பலருக்கு கண்ணுக்குக் கீழ் வீக்கம் ஏற்படுவது வழக்கம். இது சிலருக்கு முதுமையை அடையும் போது தோல் சுருங்கி, கொழுப்புகள் எல்லாம் பைகள் போல் தேங்கி, கண்ணுக்குக் கீழ் வீக்கத்தை உண்டாக்கும்.

அதுமட்டுமின்றி உப்பு அதிகமுள்ள உணவு அல்லது அலர்ஜியால் நீர் சேர்வது அதிகரித்து, அதன் காரணமாகவும் கண்ணில் வீக்கம் அதிகரிக்கும். சில நேரங்களில் வீக்கமான கண்கள், சிறுநீரகக் கோளாறுகளுக்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.
இவற்றை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
வெள்ளரிக்காய் சாறு அல்லது ரோஸ் வாட்டரில் சுத்தமான காட்டன் பஞ்சை நனைக்க வேண்டும். சாய்வாக படுத்துக் கொண்டு கண்ணின் மேற் பகுதியில் வைத்து ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு அப்படியே கால் மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இது கண்ணுக்கு இதம் கொடுக்கும். வீக்கத்தைக் குறைக்க உதவும். கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
உருளைக் கிழங்கும் கூட கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். வீக்கத்தைக் குறைக்க உதவும். உருளைக்கிழங்கை மெல்லியதாக வட்ட வடிவில் சீவி அதை கண்ணின் மேல் பகுதியில் வைத்துக் கொண்டு கால் மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். வெள்ளரிக்காயைும் மெல்லிய வட்ட வடிவில் துண்டாக சீவி எடுத்து கொள்ளலாம்.
ரசநாடி சூரணம் அல்லது கச்சோரதி சூரணம் ஆகியவை சிறந்த நிவாரணம் அளிக்கும். இந்த சூரணத்தில் ஒன்றை 3 முதல் 5 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு அதை மோரில் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொண்டு அதை வீங்கிய கண்ணில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவிக் கொள்ளலாம்.
கருத குளிகாவை எடுத்து அதை நசுக்கி மோர் கலந்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை கண்ணில் தடவி 30 நிமிடம் காய வைக்க வேண்டும்.
திரிபலா கஷாயத்தை பயன்படுத்தியும் கண்களைக் கழுவலாம். இது கண்களுக்கு குளிர்ச்சியையும் ஆற்றலையும் கொடுக்கும்.
கற்றாழை சாறு அல்லது முருங்கை இலைகளை கண்களுக்கு மேல் வைத்து அதன் மேல் மெல்லிய வெள்ளைத் துணியை வைத்து கண்களை கட்டி சிகிச்சை அளிக்கலாம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இது போன்ற வீட்டு குறிப்புகளை செய்து நோயின் தீவிரத்தை பெரியதாக்கிக் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையையும் பெறுவது நல்லது. கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கத்தை சரி செய்ய பார்லி அரிசியை கொண்டு கஞ்சி காய்ச்சி குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நீர் இறங்கும்.
பொறுப்பு துறப்பு: எந்த ஒரு வைத்தியத்தையும் வீட்டிலேயே சுயமாக செய்து கொள்ளுதல் நல்லதல்ல. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் சொல்லும் வழிமுறையையும் சிகிச்சைகளையும் பின்பற்றுவதே பாதுகாப்பானது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications