தொப்புள் கொடி.. தொட்டு தொடரும் "தொப்புள் கொடி தாயத்து".. அடேங்கப்பா, இதுல இத்தனை மருத்துவ நன்மைகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம்தான், "தொப்புள் கொடி தாயத்து" பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகளுக்கு மூலிகையான வசம்புவை பயன்படுத்துவார்கள். காரணம், குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிறு உப்பசம், வயிறு வீக்கம், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் வசம்பு உதவுகிறது.. உடல் குளிர்ச்சியையும் நீக்க உதவுகிறது.

பயன்கள்: இந்த வசம்பினை ஒரு கல்லில் வைத்து உரசி, அதை வழித்து எடுத்து, தாய்ப்பாலுடனோ அல்லது தேனுடன் கலந்தோ குழந்தைகளுக்கு தருவார்கள்.. ஆனால், வசம்பு கொடுத்துவிட்டால், அடுத்த அரை மணி நேரத்துக்கு குழந்தைகளுக்கு பால்தரக்கூடாது என்பார்கள். எனினும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று வசம்பை, மருந்தாக தருவது பாதுகாப்பானது.

Health

சிறு சிறு துண்டுகளாக்கி, அரைஞாண்கயிறு போல குழந்தைகளின் இடுப்பில் தாயத்து வடிவில் இடுப்பில், கைகளில் கட்டினால், வலிப்பு நோய் வருவது தடுத்து நிறுத்தப்படும்.

வசம்பு: இந்த வசம்பை தீயில் சுட்டு, தாய்ப்பாலில் குழைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் திருஷ்டி பொட்டு போல வைப்பார்கள்.. இதனால் எந்தவிதமான நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாது. அதனால்தான், வசம்பிற்கு "பிள்ளை மருந்து, பிள்ளை வளர்த்தி" என்றெல்லாம் பெயர் சொல்வார்கள்.

வசம்பை போலவே, "தொப்புள் கொடி தாயத்து"களை குழந்தைகளுக்கு கட்டிவிடுவார்கள்.. அதாவது பிறந்த குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். அதுவும் காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும். அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்த குழந்தைகளின் கழுத்திலோ, கையிலோ, இடுப்பிலோ கட்டிவிடுவார்கள். சிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பொடியாக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள்.

தாயத்து: இதற்கு காரணம், அந்த குழந்தை வளர்ந்த பிறகு, ஏதாவது கொடிய நோய் ஏற்பட்டால் அவற்றிலிருந்து காப்பற்ற, தாயத்துக்குள் இருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து தருவார்களாம்..

இதன்மூலம் அந்த பயங்கர நோய் நீங்கிவிடுமாம். நாளடைவில் இதனை மூடநம்பிக்கை என்று நினைத்து பலரும் ஒதுக்கி விட்டார்களாம்.. ஆனால் உண்மையை சொல்லப்போனால், அந்த குழந்தை வளர்ந்தபிறகு, புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தாலும், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவம்

ஆதார செல்கள்: அதாவது, குழந்தை பிறந்ததுமே அதன் தொப்புள் கொடியிலுள்ள, சுமார் 80 மி.லி ரத்தம் தொப்புள் கொடி ரத்தம் (Umblical cord blood) என்பார்கள்.. இந்த ரத்தத்தில் அதிக அளவு ஆதார செல்கள் (ஸ்டெம் செல்கள்) உள்ளன. இந்த ஆதார செல்களிலிருந்து உடலின் உறுப்புக்களை உருவாக்கலாம்.

இந்த ரத்த ஆதார செல்களை குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுத்து, பத்திரமாக வைத்து கொண்டால், ரத்த சம்பந்தமாக ஏற்படும் 80-க்கும் மேற்பட்ட நோய்களை இந்த சேமித்த ஆதார செல்களை பயன்படுத்தி அந்த குழந்தையையோ அல்லது இது பொருந்தக்கூடிய மற்ற குழந்தையையோ குணமாக்கலாம் என்கிறார்கள்.

நன்மைகள்: அதனால்தான், பல தனியார் மருத்துவமனைகளில், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை சேமித்து வைப்பதற்காக, அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்கப்பட்டு, இதற்காகவே, பெரிய அளவில் தொகையும் கொடுக்கப்படுகிறதாம். அந்த அளவுக்கு தொப்புள் கொடியின் மருத்துவ நன்மைகளை, மருத்துவ உலகமும் அறிந்து வைத்திருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+