காச குடுத்து விஷத்தை வாங்கி குடிக்காதீங்க! ரோட்டோர ரோஸ் மில்க்கில் புதைந்திருக்கும் ஆபத்து! வார்னிங்
சென்னை: கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் பல குளிர்பான கடைகளில் ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பழங்களில் ரசாயன கலப்படம் இருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் கோடைகாலத்தில் ரோஸ் மில்க் மற்றும் தரமற்ற ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு தொண்டை வலி, ருமாட்டிக் காய்ச்சல் உள்ளிட்டவை வரும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக பழ விற்பனை கடைகள், குளிர்பான கடைகள் முளைத்திருக்கின்றன. அங்கு தர்பூசணி, ஆப்பிள், மோர், லெமன் ஜூஸ், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றில் கலப்படம் மற்றும் ரசாயனம் கலந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் நடத்தப்பட்ட சோதனையில் ரசாயனம் கலந்த எட்டாயிரம் கிலோ தர்பூசணி மற்றும் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள் பழங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க சாலையோரங்களில் ஐஸ்கிரீம், சர்பத், ரோஸ் மில்க், கரும்பு ஜூஸ், தர்பூசணி, ஆப்பிள் உள்ளிட்டவற்றை தயார் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறார்கள். இவை எசன்ஸ், கலர் பொடிகள், தயாரிக்கப்படுகிறது. இதே போல ஆரஞ்சு, லெமன் உள்ளிட்ட பிளேவர்களுக்காகவும் இரசாயன பொடிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தரமற்ற ரசாயன பொருட்கள் காலாவதியான எசன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் ஆகியவற்றை தயாரித்து விற்பதாக புகார் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தரமான ரோஸ்மில்க் ஆக இருந்தாலும் அதிக அளவில் பயன்படுத்தும் போது ருமாட்டிக் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இது தொடர்பாக மருத்துவர் குழந்தைசாமி உடன் பேசிய போது," தற்போது கோடைக் காலத்தில் குளிர்ச்சியாக குளிர்பானம் உள்ளிட்டவற்றை மக்கள் அதிக அளவில் விரும்புவார்கள். குறிப்பாக குழந்தைகள் குளிர்ச்சியான பொருட்களை நாடுவார்கள்.
அதிலும் ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் உள்ளிட்டவற்றை அதிகம் சாப்பிட விரும்புவார்கள். பெற்றோர்களும் குறைந்த விலையில் கிடைத்தது என்பதற்காக ரோஸ் மில்க் உள்ளிட்டவற்றை வாங்கி தருகின்றனர். வெயில் காலத்தில் எப்போதாவது ஒருநாள் என்றால் கொஞ்சம் சாப்பிடலாம். தொடர்ந்து அல்லது தினமும் சாப்பிடும் போது தொண்டை வலி, சளி உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் அவைகளை சாதாரணமானது என அலட்சியப்படுத்தக் கூடாது. தொண்டை வலியை அலட்சியப்படுத்தினால் அது ருமாட்டிக் காய்ச்சல் எனும் பிரச்சனையில் கொண்டு போய் சேர்த்து விடும். இதனால் இதயம், மூட்டு, தோல் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படும்.
உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் இதய பாதிப்பு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். கோடை காலம் தான் என ரோஸ் மில்க் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை சாப்பிட பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. ஒருவேளை அதிக அளவில் சாப்பிட்டு தொண்டை வலி வந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரின் பரிந்துரையை ஏற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications