தொப்பைக்கு சுடு தண்ணீர் தான் "எமன்?" உடல் எடை குறையுமா.. அடடே மருத்துவர் சொல்வதை கேளுங்க.. ட்விஸ்ட்
சென்னை: இப்போது உடல் பருமன் தான் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இளம் வயதில் இருப்பவர்களே உடல் பருமன் காரணமாக மிகப் பெரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். வெந்நீரைக் குடித்தால் உடல் பருமனைக் குறைக்கலாம் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். இது உண்மை தானா.. எந்தளவுக்கு எடை குறையும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் எல்லாமே நமது வீடு தேடி வந்துவிடுகிறது. ஷாப்பிங், டேட்டிங்க என அனைத்திற்குமே தனித்தனியாகச் செயலிகள் உள்ளன. இதனால் மக்கள் ஒரே இடத்தில் (sedentary lifestyle) உட்கார்ந்து வேலை செய்வது அதிகரித்துள்ளது.

உடல் பருமன்: இதனால் உடல் பருமன் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இளம் வயதினரும் கூட உடல் பருமனால் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். இதை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று பலரும் பல விதத்தில் முயல்கிறார்கள். பலவற்றைச் செய்கிறார்கள். அப்படி தான் சுடு தண்ணீரையும் குடிக்கிறார்கள். ஒரு தரப்பினர் மட்டன் போன்ற நான் வெஜ் உணவைச் சாப்பிட்டுவிட்டுச் சுடு தண்ணீர் குடித்தால் கொழுப்பு சேராது என்கிறார்கள்.
மற்றொரு தரப்பினர் சுடு தண்ணீர் குடித்தால் உடலில் ஏற்கனவே இருக்கும் கொழுப்பு கூட குறைந்துவிடும் என்கிறார்கள். ஆனால், இது உண்மை தானா.. உடல் எடை குறையும் என்பது குறித்துப் பார்க்கலாம்..
மருத்துவர்கள்: இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "சூடான தண்ணீரைத் தினசரி காலை குடித்தால் தொப்பை வராது எனப் பலரும் நினைக்கிறார்கள். தொப்பை இருந்தாலும் கூட சுடு தண்ணீர் குடித்தால் தொப்பை கரைந்துவிடும் என்பார்கள். உடல் பருமன் என்றால் நமது உடலில் தோலுக்கு அடியில் தொப்பையில் சேரும் அதீத கொழுப்பு தான். இந்த கொழுப்பு செல்கள் தான் தொப்பைக்குக் காரணம்.
மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து என நாம் அதை அதிகமாகச் சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவை போக மற்றவற்றை நமது உடல் கொழுப்பாக மாற்றிச் சேமித்து வைக்கும். இதுவே உடல் பருமனுக்கும் காரணமாகும். இந்த கொழுப்பு என்பது உடலுக்கு எரிசக்தி போன்றது தான்.. அதாவது ஆற்றில் நீர் அதிகமாக வரும் போது அதை எப்படி நாம் அணைக் கட்டி சேர்த்து வைக்கிறோம். பிறகு கோடைக் காலத்தில் அதைப் பயன்படுத்துகிறோம். அதுபோல கொழுப்பை நமது உடல் சேமித்து வைக்கிறது.
முடியாது: அதேநேரம் கொழுப்பை நமது உடல் பயன்படுத்தினால் மட்டுமே அது கரையும். வேறு எப்படியும் கொழுப்பைக் கரைக்க முடியாது. அதாவது உணவில் கலோரிகளை குறைத்துச் சாப்பிட்டால்.. அல்லது மாவுச்சத்தைக் குறைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
அல்லது உடல் பயிற்சி செய்து உடலில் ஆற்றலுக்குப் பற்றாக்குறையை ஏற்படுத்தினால்.. நமது உடல் அந்த கொழுப்பை எரிசக்தியாக மாற்றும். அப்போது கொழுப்பு அல்லது தொப்பையைக் குறைக்க முடியும். ஆனால், சூடாக்கினால் எல்லாம் கொழுப்பு குறையாது.. சுடு தண்ணீர் குடித்தாலும் கொழுப்பு கரையாது. இது லாஜிக்கே இல்லை. சுடு தண்ணீர் குடித்தால் எல்லாம் கொழுப்பு கரையாது.
என்ன காரணம்: கொழுப்பு என்பது hydrophobic.. அதாவது தண்ணீரைப் பார்த்தாலே கொழுப்பு பயந்து ஓடும்.. எனவே, நீங்கள் எவ்வளவு தான் சுடு தண்ணீர் குடித்தாலும் கொழுப்பு அதன் அருகிலேயே செல்லாது. அதாவது தண்ணீர் குடித்தால் அது வயிற்றை stimulate செய்து வயிற்றைச் சுத்தப்படுத்தலாம். ஆனால், சுடு தண்ணீரால் கொழுப்பு அல்லது கொலஸ்டிரால் குறையவே குறையாது. எனவே கொழுப்பைக் குறைக்கத் தண்ணீர் குடித்தால் அது பயன் தராது" என்று அவர் தெரிவித்தார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை மருத்துவ ஆலோசனையாகக் கருதக்கூடாது.. உடல்நல பாதிப்பு எதாவது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து? -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications