Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்துமாவால் அவதிப்படறீங்களா? மூச்சிரைப்பு ஏற்படுவது ஏன்? இந்த உணவுகளை தொடாதீங்க? டாக்டர் பரூக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன், அதற்கான சிகிச்சைகள் என்ன, கட்டுப்படுத்துவது எப்படி என்பதை விளக்கியுள்ளார் சிவகங்கை அரசு மருத்துவமனையின மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: உலகளவில் சுமார் 30 கோடி மக்கள் பிறந்த குழந்தையில் இருந்து சிறார் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கு ஏற்படும் நோய் நிலையாக ஆஸ்துமா இருக்கிறது. ஆஸ்துமா என்பதன் தமிழ் பதம் "இரைப்பு நோய்" இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி அவ்வப்போதோ அல்லது தொடர்ந்தோ மூச்சு விடுவதில் சிரமம் இளைப்பு , நெஞ்சு பகுதியில் இறுக்கம், இருமல் ஏற்படும்.

Dr Farook Abdulla explains about Asthma

இரவில் உறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழிக்கும் நிலை ஏற்படக்கூடும். இந்த நோய்க்கான மூல காரணம் பின்வருமாறு- நமது நாசியில் தொடங்கி நுரையீரலின் நுண் சுவாசப்பைகளில் முற்றுப் பெரும் சுவாசப்பாதையில் நாம் சுவாசிக்கும் காற்றானது
உள்சென்று அதில் இருந்தும் ஆக்சிஜனை நமது நுரையீரல் கிரகித்து ரத்தத்தை சலவை செய்கிறது. இதில் ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு மகரந்தத் தூள், வாகனப்புகை , நுண் தூசி , செயற்கை அறை குளிரூட்டியில் இருந்து வரும் நுண் தூசி, குளிர்ந்த கால நிலை போன்றவற்றை சந்திக்கும் போது நுரையீரலின் சுவாசப்பாதை தசைகள் சுருக்கம் காணும். இதனால் சரியான அளவு காற்று நுரையீரலின் நுண் சுவாசப்பைகளை அடைய முடியாத நிலை ஏற்படும்.

இத்துடன் சுவாசப் பாதையின் சுவர்களில் பிசின் போன்ற திரவம் சுரக்க ஆரம்பிக்கும். கூடவே சுவாசப்பாதையின் சுவர் முழுவதிலும் உள்காயமும் அழற்சியும் ஏற்படும். இவ்வாறு தொடர் பாதிப்புகளை சந்திக்கும் சுவாசப்பாதை நிரந்தர உருமாற்றத்தை சந்திக்கிறது. ஆஸ்துமா நோயரைப் பொருத்தமட்டில் அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளாவோர் என்றும் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாவோர் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர்.

Dr Farook Abdulla explains about Asthma

சிலருக்கு பருவ மாற்றம் ஏற்பட்டு குளிர் காலம் நெருங்கும் போது ஆஸ்துமா தாக்குதல் நிகழ்வுகள் அதிகமாகும். இன்னும் சிலருக்கு வருடத்தின் அனைத்து பருவ நிலைகளிலும் ஆஸ்துமா தாக்குதல் தொடர்ந்து நிகழும். இவ்வாறு ஆஸ்துமா தாக்குதலுக்கு உள்ளாவது
பெரும்பாலும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடும் போதும் பயணங்களின் போதும் இரவு உறங்கும் போதும் என்று ஏற்படலாம். இதனால் உறக்கமின்மைக்கு உள்ளாகி அடுத்த நாள் சரியாக வேலை செய்ய இயலாமலும் போகும். அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும் நிலையில் உடனடியாக அவசர சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆஸ்துமாவின் சிகிச்சையைப் பொருத்தமட்டில் சுவாசிக்கத் தகுந்த மருந்துகளை இன்ஹேலர் மூலம் உள்சுவாசிக்க முடியும்.

ஆஸ்துமா தாக்குதலில் இருந்து நிவாரணம் வழங்கும் மருந்துகள் அடங்கிய இன்ஹேலர். இதை ஆஸ்துமா தாக்குதலில் இருந்து விடுவிப்பான்கள் என்று அழைக்கிறோம். இந்த மருந்தானது சுவாசப்பாதையின் சுருக்கம் கண்ட தசைகளை விரிவடையச் செய்கின்றன.
இதனால் உடனடியாக தேவையான அளவு காற்று நுரையீரலின் அடிப்பகுதி வரை அடைகிறது. இதற்கடுத்த சிகிச்சை தாக்குதல்களை தடுப்பான்கள். இவை ஆஸ்துமாவின் முக்கிய காரணமாக விளங்கும் சுவாசப்பாதை உள்காயங்களை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் வேலையை செய்யும்.

இந்த மருந்துகளில் மிகக் குறைவான அளவு ஸ்டீராய்டு மருந்துகள் உள்ளன. இவை உள்காயங்களை குணப்படுத்தும் தன்மையுடன் செயல்படுகின்றன. தொடர்ந்து ஆஸ்துமா தாக்குதல்களுக்கு உள்ளாபவர்களுக்கு மேற்சொன்ன இரண்டு மருந்துகளும் கலந்த இன்ஹேலர்கள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. இன்ஹேலர்களில் மிகக் குறைந்த அளவே ஸ்டீராய்டு மருந்து உபயோகப்படுத்தப்படுவதால் இவற்றால் நோயருக்கு பாதகங்களை விட சாதகங்கள் மிக அதிகம்.

Dr Farook Abdulla explains about Asthma

எனவே ஆஸ்துமா சிகிச்சைக்கு மாத்திரைகளை விடவும் இன்ஹேலர் சிகிச்சையே சிறந்தது. ஆஸ்துமா நோயைப் பொருத்தவரை மிக இளம் வயதில் ஏற்படும் நோய் குழந்தை வளர்ந்து வளர் இளம் பருவத்தை எட்டும் போது சிலருக்குத் தானாக அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாத அளவு கட்டுப்படும் நிலையை அடைகிறது. வயது வந்தவர்களில் 2 முதல் 52% பேருக்கு சிகிச்சை இல்லாமலோ சிகிச்சையுடனோ அறிகுறிகள் அற்ற நோய் கட்டுப்படும் நிலைக்கு ஆஸ்துமா செல்கிறது. அறிகுறிகள் இல்லாத நிலையை REMISSION என்று அழைக்கலாம் ஆனால் அதை நோய் முற்றிலும் குணமாகி விட்டது என்று கூற முடியாது.

REMISSION IS CLOSER TO CURE BUT NOT EXACTLY THE CURE அதற்கான காரணம் நோயை உண்டாக்கும் அடிப்படை பிரச்சனைகளான சுவாசப்பாதை அழற்சி , வாசப்பாதை நிரந்த உருமாற்றம் போன்றவை அறிகுறிகள் இல்லாத நிலையிலும் அப்படியே இருக்கின்றன. எனவே அறிகுறிகள் அற்ற நிலையை அடைந்தவர்களுக்குக்கூட அவர்களின் வாழ்வின் பிற்பகுதியில் மீண்டும் ஆஸ்துமா தலையெடுக்க வாய்ப்புள்ளது. ஆஸ்துமாவுக்கான சிகிச்சை முறையும் தற்போது நோயின் அடிப்படையை குறிவைத்து நவீனம் கண்டு வருவதால் பலரும் ஆஸ்துமாவின் அறிகுறிகள் கட்டுப்பட்டு சிறப்பான வாழ்வை வாழ்கிறார்கள். உடல் பருமனை சரிசெய்தல், புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் போன்றவற்றின் மூலமும் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த முடியும்.

Dr Farook Abdulla explains about Asthma

உணவைப் பொருத்தவரை விதை சார்ந்த உணவுகள் - தானியங்கள் - குறிப்பாக கோதுமை , மைதா போன்றவற்றை நிறுத்துவது நல்ல பலனைத் தரும். சுத்திகரிக்கப்பட்ட சீனி சர்க்கரை போன்றவற்றை தவிர்ப்பது , சுவாசப்பாதை உள்காயங்களை கட்டுப்படுத்த உதவும். பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது சிலருக்கு பயன் அளிக்கக்கூடும். புரதச்சத்து நிரம்பிய உணவுகளான மாமிசம், முட்டை , மீன் போன்றவற்றில் உள்ள புரதம் உள்காயங்களை ஆற்றும் திறன் பெற்றவை. மரக்கறி உணவாளர்கள் - சோயா ( அளவுடன்) பன்னீர் உண்ணலாம். ஒமேகா-3 நிரம்பிய மீன்களை உட்கொள்வதன் மூலம் உள்காயங்களை ஆற்றிட முடியும்.

மெக்னீசியம் சத்து நிரம்பிய பாதாம் பருப்பு, கீரை , காய்கறிகள் போன்றவை சுவாசப்பாதை தசைகள் விரிவடைய உதவுகின்றன. பனிக்கூழ் (ஐஸ்கிரீம்) , குளிர் பழச்சாறுகளும் ஆஸ்துமாவை தூண்டக் கூடும். தவிர்ப்பது சிறந்தது. சிலருக்கு உணவு சார்ந்த ஒவ்வாமை இருக்கும். அத்தகைய ஒவ்வாமை தரும் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயர்கள் எங்கு பயணம் செய்யும் போதும் கையில் தாக்குதலில் இருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கும் இன்ஹேலர்கையும் தாக்குதல்களை தடுக்கும் இன்ஹேலர்களையும் உடன் கொண்டு செல்ல வேண்டும். ஆஸ்துமாவை கட்டுக்குள் வைப்பது ஒட்டுமொத்த வாழ்வின் தரத்தை சிறப்பானதாக்கும். அனைவருக்கும் ஆஸ்துமாவுக்கான முறையான சிகிச்சையை உறுதி செய்வோம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+