பனிக்காலமா இருக்கே! முகக் கவசம் அணிவது பாதுகாப்பு தருமா? யாருக்கு அவசியம்?
சென்னை: முகக் கவசம் அணிவது பாதுகாப்பு தருமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆம்.. சுவாசப்பாதை வழியாகப் பரவும் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். தற்போது இன்ஃப்ளூயன்சா, கொரோனா போன்ற வைரஸ்கள் பரவி வரும் சூழ்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தொற்று ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.

இதனால் தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பு குறையும். யார் முகக்கவசம் அணிவதால் பாதுகாப்பு அதிகம் கிடைக்கும்? சளி இருமல் தும்மல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் "தொற்றைப் பரப்புபவர்கள்" இவர்கள் முகக்கவசம் அணிவதால் பிறருக்குத் தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பு குறையும். முகக்கவசம் அணிவதால் தொற்று கொண்டவர்களிடம் இருந்து பரவும் "வைரஸ் எண்ணிக்கை" (வைரஸ் லோடு) குறையும். இதன் மூலம் தீவிர தொற்று ஏற்படும் வாய்ப்பு மட்டுப்படும்.
அதுவே சளி, இருமல், காய்ச்சல் தும்மல் இருப்பவர்கள் முகக்கவசம் அணியாமல் அவர்களை சுற்றி இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பு குறையாது. சரி... சளி இருமல் தும்மல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் எத்தனை நாட்கள் தொற்றைப் பிறருக்குப் பரப்பும் நிலையில் இருப்பார்கள்?
ஒருவருக்கு காய்ச்சல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பிருந்து அதற்குப் பின்பான 5 முதல் 7 நாட்கள் வரை பிறருக்குத் தொற்றுப் பரவல் நடக்கும். எனவே காய்ச்சல் ஏற்பட்டவர்கள் ஒரு வார காலம் முதல் பத்து நாட்கள் வரையாவது முகக்கவசம் அணிவது பிறருக்குத் தொற்றுப் பரவாமல் பாதுகாத்திட உதவும். முதியவர்கள், பல்வேறு இணை நோய்கள், கொண்டவர்கள் எதிர்ப்பு சக்தி குன்றியோர், கட்டாயம் வெளி இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
எனினும் மக்கள் நெருக்கடி அதிகமான இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் தரும் பாதுகாப்பு குறையும். எனவே சுவாசப் பாதை வைரஸ் தொற்றுகள் பரவும் காலங்களில் மக்கள் நெருக்கடி அதிகமான இடங்களுக்குச் செல்வதை முதியோர்கள்/ இணை நோய்கள் இருப்பவர்கள் தவிர்ப்பது நலம்.
பள்ளிகளுக்குச் செல்லும் சிறார் சிறுமியருக்கு மற்றவர்களிடம் இருந்து பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பனிக்காலம் முடியுமட்டும் அவர்கள் முகக்கவசம் அணிவது ஓரளவு பாதுகாப்பு அளிக்கும். பொது சமூகமாக நாம் அனைவரும் முக்ககவசம் அணிவதன் மூலம் பல்வேறு இணை நோய்கள் கொண்ட மக்கள், முதியவர்களுக்கு தொற்றுப் பரவல் நடக்கும் வாய்ப்பைக் குறைத்திட முடியும்.
இதன் மூலம் அவர்களுக்கு தீவிர நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அறிந்து கொள்ள வேண்டிய செய்தி பனிக்காலம் முடியுமட்டும் பொது சமூகமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் சங்கமிப்பது தொற்றுப் பரவல் மட்டுப்படும். இதன் மூலம் பல்வேறு உயிர்கள் காக்கப்படும் என்பது திண்ணம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications