கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களின் கவனத்திற்கு... டாக்டர் பரூக் அப்துல்லா அட்வைஸ்!
சென்னை: கோவேக்சின் தடுப்பூசி & பக்கவிளைவுகள் ஆய்வு குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று
காலத்தில் உலகின் முக்கிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு தீவிர தொற்றுகளைத் தவிர்த்து, அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் பொருட்டு அவசர நிலையெனக் கருதி தடுப்பூசிகளைத் தயார் செய்தன.

அமெரிக்கா - மாடர்னா மற்றும் ஃபைசர் ( கோமிர்நாட்டி) தடுப்பூசி
ரஷ்யா - ஸ்புட்னிக் தடுப்பூசி
சீனா - சைனோஃபார்ம்
பிரிட்டன் - வேக்ஸ்செர்வியா
இந்தியா - கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின்
கோவேக்சின் தொழில்நுட்பம் வைரஸை செயலிழக்கச் செய்து அதன் நோய் தொற்று உண்டாக்கும் ஆற்றலை இல்லாமல் செய்து உடலில் செலுத்துவதன் மூலம் நோய் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவது கோவேக்சின் தடுப்பூசியின் தொழில்நுட்பமாகும். இது பழமையான காலத்தால் பரிசோதிக்கப்பட்ட குறைவான பக்கவிளைவுகளைக் கொண்ட தொழில்நுட்பமாகும்.
இந்த தடுப்பூசியை இந்திய அரசின் ஐசிஎம்ஆர் தொழில்நுட்பத்தை வழங்க அதைத் தயாரிக்கும் பொறுப்பை பாரத் பயோடெக் நிறுவனத்தார் ஏற்றனர். இந்தியாவில் இதுவரை 36 கோடி பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கள ஆய்வுகளில் ஏனைய கொரோனா தடுப்பூசிகளை வைத்து ஒப்பீடு செய்ததில் மிகக் குறைவான பக்கவிளைவுகள் மற்றும் மிகக் குறைவான தீவிர பக்க விளைவுகள் கொண்ட தடுப்பூசியாக கோவேக்சின் தேறி இருப்பது உண்மை.
எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வில் கோவேக்சினுக்கு பக்கவிளைவுகள் இருப்பதாக முடிவு வெளியிடப்பட்டு அது பரபரப்பாகி வருகிறது. இந்தக் கட்டுரையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் தரம் மற்றும் முறைகளை சீர்தூக்கிப் பார்ப்போம். மருத்துவ ஆய்வுகளைப் பொருத்தவரை சிறந்த தரம் கொண்டவை என்றும் ஆய்வின் முடிவு அதிக நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பது
"இருபுறமும் மறைக்கப்பட்ட - ஆய்வில் கலந்து கொள்வோரிடத்தே பாரபட்சமின்றி சார்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆய்வுகளாகும். இதை DOUBLE BLINDED RANDOMISED CONTROL TRIALS என்போம்.
ஆய்வுகளில் பலம் குன்றியவை - OBSERVATIONAL STUDIES நோக்குற்குரிய ஆய்வுகள் இத்தகைய ஆய்வுகளில் நடக்கும் நிகழ்வுகளை நோக்க மட்டுமே முடியுமே அன்றி நிச்சயமாக எதனால் இவை நேர்ந்தன? என்பதை விளக்க இயலாது. மருத்துவ ஆய்வுகளை கூர்நோக்குவதில் பிரபலமான சொலவடை உண்டு.. OBSERVATIONS ARE NOT CAUSATIONS அதாவது ஆய்வில் நாம் கண்ட அத்தனை விசயங்களும் உண்மை ஆனால் அது எதனால் நடந்தது என்பதை கூற இயலாது என்பதால் அவற்றைக் காரணிகளாக அறிவிக்க இயலாது.
இந்த ஆய்வும் ஒரு நோக்கத்திற்குரிய ஆய்வு தான். இந்த ஆய்வு செய்யப்பட்ட விதம் :- கோவேக்சின் தடுப்பூசி பெற்றவர்கள் 926 பேரை அவர்கள் தடுப்பூசி பெற்ற நாளில் இருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அலைப்பேசி மூலம் அழைத்து அவர்களுக்கு நேர்ந்த அல்லது அவர்களுக்கு அப்போது இருக்கும் நோய் குறித்து கேட்டறியப்பட்டது.
இதில் தோராயமாக 50% பேருக்கு அந்த வருடத்தில் சுவாசப் பாதை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
10.5% பேருக்கு தோல் சார்ந்த நோய்கள்
10.2% பேருக்கு பொதுவான நோய்கள்
5.8% பேருக்கு தசை வலி
5.5% பேருக்கு நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள்
4.6% பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு
2.7% பேருக்கு கண் சார்ந்த நோய்கள்
0.6% பேருக்கு ஹைப்போதைராய்டிசம்
0.3% பேருக்கு பக்கவாதம்
0.1% பேருக்கு குல்லியன் பாரி சிண்ட்ரோம் எனும் நரம்பு மண்டலத்தை தாக்கி பக்கவாதம்/நரம்பு தளர்ச்சி ஏற்படுத்தும் நோய் வந்ததும் கண்டறியப்பட்டது.
ஆயிரம் பேரில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது என்று பொருள். இதில் மேலே குறிப்பிட்ட நோய்கள் சாதாரணமாக தடுப்பூசி பெறாத மக்களுக்கும் அந்த வருடத்தில் ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆய்வில் CONTROL என்று கூறப்படும் "தடுப்பூசி பெறாத மக்களையும் ஒரு சேர ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களிடத்தில் இத்தகைய நோய்கள் அந்த வருடத்தில் எந்த விகிதத்தில் உண்டாகின என்பதையும் அறிந்து வெளியிட வேண்டும்.
அப்போது தான் அது தரத்தில் சிறந்த ஆய்வு. இந்த ஆய்வில் கண்ட்ரோல் ஆர்ம் என்று கூறப்படும் தடுப்பூசி பெறாதவர்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மேலும் தடுப்பூசி பெற்ற ஒரு வருடத்திற்குள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டோரில் நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் மூன்று பேருக்கு நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது.
ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே நிகழ்ந்த மரணங்களை நேரடியாக தடுப்பூசிகளினால் தான் நிகழ்ந்தன என்று அறுதியிட்டு கூற இயலாது என்று ஆய்வை செய்தவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்த ஆய்வில் நீங்களும் ஒருவராக இருந்திருந்தால் உங்களுக்கு ஒரு வருடம் கழித்து அழைப்பு வந்திருக்கும் "சார் இந்த ஒரு வருசத்துல உங்களுக்கு சளி இருமல் ஏற்பட்டுச்சா?"
"ஆமா சார்.. ரெண்டு தடவ வந்துச்சு" "உடம்பு கை கால் வலி?" "இருந்துருக்கு சார்" உடனே ஆய்வாளர் தடுப்பூசி பெற்றவர்களில் அந்த ஒரு வருடத்தில் சளி இருமல் உடல் வலி ஏற்பட்டவர்கள் லிஸ்ட்டில் உங்களையும் சேர்த்து அதை தடுப்பூசியின் பக்கவிளைவாக இருக்கலாம் என்று வெளியிடுவார். ஆனால் உண்மையில் தடுப்பூசி பெறாத உங்களின் நண்பருக்கும் அதே வருடத்தில் நான்குமுறை காய்ச்சல் சளி உடல் வலி ஏற்பட்டிருக்கலாம். அதை ஆய்வாளர் கணக்கில் கொள்ள மாட்டார்.
மீண்டும் கூறுகிறேன், எந்த ஒரு விளைவுக்கும் பக்கவிளைவுகள் உண்டு. அதே போல மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் உண்டு. மருந்தின் நன்மை தரும் விளைவை அதன் பக்கவிளைவுகளோடு சீர்தூக்கிப் பார்த்தே மருந்துகள் புழக்கத்துக்கு வருகின்றன. எனினும் மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருந்து அதன் மூலம் ஆதாயம் தேடி மக்களிடம் தடுப்பூசிக்கு எதிரான ஒவ்வாமையை அதிகரிப்பதில் இது போன்ற ஆய்வுகள் முன்னிலை வகிக்கின்றன.
இவ்வாறாக வலு குறைவான தரத்தில் குறைந்த கண்ட்ரோல் எனப்படும் தடுப்பூசி பெறாதவர்களையும் கணக்கில் சேர்க்காத ஆய்வாளரின் சார்புத்தன்மை கேள்விக்குறியான இந்த ஆய்வின் முடிவுகளை மக்கள் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. கோவேக்சின் பெற்றுக் கொண்ட மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications