"அது" மூளையை மழுங்கடிக்கிறதா? ஒரே ஒரு மாசம் போதும்.. இதை செய்ங்க.. டாக்டர் பரூக் அப்துல்லா
சென்னை: அந்த உணவு பொருள் அப்படித்தான் மூளையை மழுங்கடிக்கச் செய்யும். நீங்கள் ஒரு மாசம் இப்படி செய்து பாருங்கள், பழகிவிடும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நீரிழிவு நோயர்கள் சீனி/ நாட்டு சர்க்கரை வேண்டாம்னு சொல்றீங்க. அப்ப சுகர் ஃப்ரீ / ஸ்டீவியா ( சீனித் துளசி) போன்றவற்றை பயன்படுத்தலாம் தானே?

இனிப்பு சுவையைப் பொருத்தவரை அதற்கு அடிமையான ஒருவரை அவரே இனிப்பு உண்பதை நிறுத்த வேண்டும் என்று நினைத்து விட்டொழிக்காதவரை இனிப்பு அடிமைத்தனத்தில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது. இதனால் தான் சீனி வேண்டாம் என்று கூறினால் நாட்டு சர்க்கரை போட்டு டீ பருக உந்துகிறது.
சீனியும் நாட்டு சர்க்கரையும் அதே கரும்பில் இருந்து தான் கிடைக்கிறது என்று மூளைக்குத் தெரிந்தாலும்
நாட்டு சர்க்கரை தரும் இனிப்பு சுவை நன்றாக இருப்பதால் அந்த உண்மையை மூளை மழுங்கடிக்கச் செய்து நீரிழிவு நோயர்களை அதைப் போட்டு சாப்பிடச் செய்கிறது. இனிப்பு சுவை நாவில் உணரப்படும் போது மூளையின் ஊக்கமளிக்கும் மையம் தூண்டப்பட்டு
மீண்டும் மீண்டும் இனிப்பு சுவையை அதிகமாக உண்ணும் படி கட்டளை இடுகிறது.
கொகய்ன் , கஞ்சா போன்ற போதை வஸ்துகள் மூளையில் செய்யும் அதே வேலையை இந்த இனிப்பு சுவை செய்கிறது. இந்த இனிப்பு சுவையில் இருந்து ஒருவரை மீட்க அவர் இனிப்பு சுவை தரும் அனைத்தையும் நிறுத்த வேண்டும். சீனி, நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன் , பனங்கற்கண்டு இனிப்பான பழங்கள் என அனைத்தையும் நிறுத்த வேண்டும்.

இந்த லிஸ்ட்டில் தான் சுகர் ஃப்ரீ மற்றும் ஸ்டீவியா போன்றவையும் வரும். ரத்தத்தில் க்ளூகோஸ் அளவுகளை ஏற்றாது என்பதால் சுகர் ஃப்ரீ கலந்த பானங்களுக்கு மாறினால் நமது மூளையில் இனிப்பு சுவை வழங்கும் அடிமைத்தனம் ஒருநாளும் விட்டொழியாது. எப்போதெல்லாம் சீனி கலந்த பதார்த்தங்களைக் காண்கிறோமோ அப்போது அதையும் உண்ண உந்தும். இதைத்தான் "க்ரேவிங்" என்று அழைக்கிறோம்.
மேலும் சுகர் ஃப்ரீ கலக்கப்பட்ட பதார்த்தங்கள் ரத்த சர்க்கரையை ஏற்றாது எனும் எண்ணம் இருப்பதால் அளவு வரைமுறையின்றி மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை உட்கொள்ளும் நிலையும் ஏற்படும். இதனால் நாளடைவில் ரத்த சர்க்கரை அளவுகள் ஏறக்கூடும். இனிப்பு க்ரேவிங்கில் இருந்து வெளியே வர விரும்புபவர்கள் மேற்சொன்ன இனிப்பு சுவை தரும் அனைத்தையும் நிறுத்தி விட்டு க்ரேவிங் ஏற்படும் போது தேங்காய் , கொய்யா காய், நிலக்கடலை, பாதாம் பருப்பு, உப்பிட்ட லெமன் சாறு, போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
எப்பாடுபட்டாவது ஒரு மாத காலத்தை இனிப்பின்றிக் கழித்து விட்டால் இனிப்பு சுவைக்கான க்ரேவிங்கில் இருந்து விடுபட முடியும். நான் இனிப்பு சுவை தரும் உணவுகளை நிறுத்தி ஏழு வருடங்கள் கடந்து விட்டன. இப்போது இனிப்பு சுவை தரும் எந்த உணவும் எனக்கு நாவில் எச்சில் ஊற வைப்பதில்லை. முயன்றால் முடியாதது எதுவுமில்லை. நீரிழிவு நோய் உள்ள சகோதர சகோதரிகள் முயற்சி செய்யுங்கள் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications