Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினசரி ஒரு கிளாஸ் பால் குடித்தால் போதும்.. புற்றுநோய் அபாயம் வெகுவாக குறைகிறது! மக்களே நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சமீபத்தில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தினசரி ஒரு கிளாஸ் பால் குடிப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பது தெரிய வந்துள்ளது. வரும் காலத்தில் இளைஞர்களிடையே கேன்சர் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என அஞ்சப்படும் நிலையில், பால் குடிப்பது அந்த பாதிப்பை வெகுவாக குறைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதில் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் தரும். குறிப்பாக, பாலின் உள்ள கால்சியம் நமது எலும்பு வலிமையாக இருக்க உதவுகிறது. மேலும், பால் நமது நோயெதிர்ப்பு அமைப்பையும் வலுவானதாக மாற்றுகிறது.

cancer milk

பாலின் நன்மைகள்:

மேலும், இது நமது சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும். இப்படி தினசரி பால் குடிப்பதால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் ஏற்படுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சமீபத்தில் பிரிட்டனில் நடந்த ஆய்வில் பால் குடிப்பது கேன்சர் அபாயத்தையும் குறைப்பது தெரிய வந்துள்ளது.

குறையும் கேன்சர் அபாயம்!

அதாவது தினசரி ஒரு கிளாஸ் பால் குடித்தால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஐந்தில் ஒரு பங்காகக் குறைவது பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தினசரி நாம் கூடுதலாக 300mg கால்சியம் எடுத்துக் கொள்வது (இது ஒரு பெரிய கிளாஸ் பாலில் இருந்து நமக்குக் கிடைக்கும் கால்சியம் அளவு) பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 17% குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் இப்போது நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் பேரிடம் இருந்து பெற்ற டேட்டாவின் அடிப்படையில் 97 உணவுப் பொருட்கள் & ஊட்டச்சத்துக்களுக்கும் குடல் புற்றுநோய் ஆபத்திற்கும் இடையே உள்ள தொடர்பு ஆராயப்பட்டது.

உறுதியான ஆதாரம்:

இந்த ஆய்வில் தான் தினசரி ஒரு பெரிய கிளாஸ் பாலை குடித்தாலே பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 17% குறைவது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பே நடந்த பல ஆய்வுகளில் பால் சார்ந்த பொருட்கள் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கலாம் எனக் கூறப்பட்டு இருந்தாலும் கூட அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே இந்த ஆய்வில் தினசரி பால் குடிப்பது புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது உறுதியாகியுள்ளது.

பெருங்குடல் புற்றுநோய்:

இது சர்வதேச அளவில் அதிகம் ஏற்படும் புற்றுநோய்களில் 3வது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேருக்குப் பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. அவர்களில் சுமார் 10 லட்சம் பேர் இந்த புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். இந்த பெருங்குடல் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும் என்றாலும் கூட அதை முன்கூட்டியே கண்டறிவது அவசியமாகும்.

மேலும், வரும் காலங்களில் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. வரும் 2040ல் குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 32 லட்சம் என்ற அளவுக்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஆண்டுக்கு 16 லட்சமாக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஒரு கிளாஸ் பால்!

சமீப காலங்களாகவே இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்ற போதிலும் இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் அதிகரிப்பது உறுதியாகத் தெரிவதாக கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலைமை இப்படி இருக்க.. நாம் தினசரி வெறும் ஒரு கிளாஸ் பாலை குடிப்பதன் மூலமே புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, மறக்காமல் இதைப் பின்பற்றுங்கள்.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+