போச்சே.. கண்ணாடி அணியாமலே பார்வையை சரி செய்வதாக அறிமுகமான சொட்டு மருந்துக்கு தடை!
டெல்லி: வெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் நிறுவனத்தின் சொட்டு மருந்தை பயன்படுத்தினால் மூக்குக் கண்ணாடியே அணியத் தேவையில்லை என பிரஸ்வியூ நிறுவனம் விளம்பரம் செய்திருந்த நிலையில் அந்த பொருளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை அந்த சொட்டு மருந்தை சந்தைப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
40 வயது ஆகிவிட்டாலே சாளேஸ்வரம் என்ற ஒன்று வந்துவிடும். இதனால் கண்ணாடியை அவசியம் போட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த குறைபாடுக்கு பெயர் பிரஸ்பியோபியா ஆகும். இந்த பாதிப்புக்குள்ளானோரால் சிறிய எழுத்துகளை படிக்க முடியாது. எல்லா கோணங்களில் வைத்தும் சிறிய எழுத்துகளை படிக்க இயலாது.

அதாவது படுத்துக் கொண்டேவோ, தலையை சாய்த்தபடியோ நம் வசதிக்கேற்ப போனையோ, லேப்டாப்பையோ, புத்தகங்களையோ படிக்க இயலாது. இதற்காக ஒரு தீர்வு என்றால் கண்ணாடி போடுவதுதான். இந்த நிலையில் இந்த பிரஸ்பியோபியா பிரச்சினைக்கு தீர்வாக கண் சொட்டு மருந்து கண்டுபிடித்துள்ளதாக பிரஸ்வியூ மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சொட்டு மருந்தை கண்களில் ஊற்றினால் 15 நிமிடங்களில் வெள்ளெழுத்து பிரச்சினை சரியாகிவிடும் என்றும் அதன் பிறகு ரீடிங் கிளாஸ் இல்லாமலேயே பேப்பர், புத்தகம், படிக்கலாம் என அந்த நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இந்த சொட்டுக்கு சிடிஎஸ்சிஓ, அதாவது மத்திய மருந்துகள் நிபுணர் குழு அனுமதி வழங்கி இருந்தது.
அது போல் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் மத்திய மருந்துகள் நிபுணர் குழு தாங்கள் அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த சொட்டு மருந்து பயன்படுத்தினால் கண்ணாடியே தேவையில்லை என நிறுவனத்தின் தவறான விளம்பரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மறுஉத்தரவு வரும் வரை இந்த மருந்தை சந்தைப்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் Pilocarpine என்ற மருந்து பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது புதியதல்ல, ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் மருந்துதான் என கண் மருத்துவர்களும் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications