நெல்லிக்காய் சூப்பர்.. நல்லதை செய்யும் நெல்லி சோறு தெரியுமா? அக்கு அக்கா தலைமுடிக்கு ராஜகனியின் சாறு
சென்னை: தலைமுடி வளர்வதற்கு, செயற்கை மருந்துகளைவிட, இயற்கையான முறையிலேயே தீர்வு காணலாம்.. அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த சூப்கள், அல்லது ஜூஸ்கள் தயாரித்து சாப்பிட்டு வருவதால், நல்ல தீர்வு கிடைக்கும். அதில் முக்கியமானதுதான் நெல்லிக்காய். தலைமுடியின் வளர்ச்சிக்கு நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது?
உடலில் ஹார்மோன்கள் சீராக இருந்தாலே, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்... ஆனால், இரும்புச்சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்வு நிறையவே இருக்கும்.. ஜிங்க் சத்து குறைந்தால், தலைமுடி உடைந்த நிலைமையில் அதாவது வலுவாக இல்லாமல் போய்விடும்.. புரோட்டீன் குறைவாக இருந்தால், தலைமுடியின் செல்களின் வளர்ச்சியை பாதித்துவிடும். வைட்டமின் D குறைவாக இருந்தால், முடியின் வளர்ச்சியை மொத்தமாக தடை ஏற்படுத்திவிடும்.

அதனால், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதுபோன்ற உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் C, B, E போன்றவை இருக்கும்படியும் பார்த்து கொள்ள வேண்டும்.
சத்துக்கள் என்னென்ன தேவை
ஏனென்றால், வைட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடும்போது, அது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. வைட்டமின்கள் B நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, முடிவளர்ச்சி அதிகமாகிறது.. வைட்டமின் E நிறைந்த உணவை சாப்பிடும்போது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, முடி உதிர்வையும் கட்டுப்படுத்துதகிறது. இவைகளுடன் சேர்த்து ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவைப்படுகின்றன.
எனவே, தலைமுடிக்கும், நாம் சாப்பிடும் உணவிற்கும் நேரடியாகவே தொடர்பு உள்ளது.. அதேபோல, நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. அந்தவகையில் நெல்லிக்காய் முதன்மையானது.
நெல்லிக்காய் சாறு
ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.. ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே, தலைமுடி உதிர்வு இருக்காது.. அதனால்தான் தலைமுடிக்கு தயாராகும் ஷாம்புகள், எண்ணெய்களில் இந்த நெல்லிக்காயை மூலப்பொருட்களாக அதிகமாக சேர்க்கிறார்கள். பொடுகு இருந்தாலும், அதற்கும் நெல்லிக்காய் சாறு பயன் தருகிறது. எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் சமஅளவு எடுத்து கலந்து தலைக்கு தேய்த்தால், பொடுகு மறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய்களில், நெல்லிக்காய்களை வெட்டிப்போட்டு எண்ணெய் காய்ச்ச வேண்டும். இதில் நிறைய புரோட்டீன் சத்து உள்ளதால், நேரடியாக தலைக்கு தடவி மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, எள் எண்ணெய்யுடன் நெல்லிக்காய் சாறு, வெட்டிவேர் கலந்து நன்றாக காய்ச்சி, ஆறவைத்து, தலைக்கு தேய்த்து வந்தால், இன்னும் நன்மைகள் கிடைக்கும்..
வறண்ட கூந்தலுக்கு எண்ணெய்
வறண்ட கூந்தல் இருப்பவர்கள், எள் எண்ணெய்க்கு பதிலாக, பாதாம் எண்ணையில், நெல்லிக்காய் சாறு கலந்து காய்ச்சி, பயன்படுத்த வேண்டும்.. இதனால் கூடுதல் சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்கிறது. வாரம் 2 முறை இந்த பாதாம் எண்ணெய்யை தேய்த்து வந்தால் போதும்.
குழந்தைகளுக்கு நெல்லி சோறு
குழந்தைகளுக்கு நெல்லிக்காய் சோறு சமைத்து தருவதால், தலைமுடி வலுவாகும்.. இந்த சோறு எப்படி செய்வது? நெல்லியிலுள்ள விதைகளை எடுத்துவிட்டு, தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைத்துகொள்ள வேண்டும். ஒரு வாணலில் நெய் ஊற்றி, மிளகு போட்டு தாளித்து, அரைத்த நெல்லிக்காய் விழுதை கொட்டி, வடித்த சோற்றையும், உப்பையும் சேர்த்து கிளறினால், நெல்லிக்காய் சோறு ரெடி.
அதேபோல நெல்லிக்காய் லட்டு சமைத்து தரலாம். இதற்கு நெல்லிக்காய்களை கழுவி இட்லி தட்டில் 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஆறவைத்து, துருவிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பாதாம் பருப்பு சேர்த்து வறுத்து, துருவிய நெல்லிக்காயும் சேர்த்து வதக்கி, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறிவிடவேண்டும்.
இறுதியில், ஏலக்காய், சுக்கு சேர்த்து இறக்கி சூடாக இருக்கும்போதே லட்டு போல பிடித்து கொள்ளலாம். இதில், தேவைக்கேற்ப நெய், நட்ஸ்களை சேர்த்து கொள்ளலாம். இதை சாப்பிட்டு வந்தாலும் தலைமுடி அதிகமாக வளரும். உடலில் ரத்த சோகை பிரச்சனை வராது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications