இட்லிக்கு அரைக்கும்போது இதையும் கலந்து போடுங்க.. தோசை மாவு கரைக்கும்போது ஆப்ப சோடா யூஸ் பண்றீங்களா?
சென்னை: இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்பட்டாலும், 1 நாளுக்குமேல் இட்லி மாவை வைத்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா? இரவு நேரத்தில் இட்லி, தோசையை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா? இட்லிக்கு அரைக்கும்போது, சோடா மாவு பயன்படுத்துறீங்களா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பெரும்பாலும், புழுங்கல் அரிசி, உளுந்து இந்த 2 பொருட்களை மட்டுமே வைத்து இட்லி மாவு அரைக்கப்படுகிறது. இதற்கு காரணம், அதிகமாக உள்ள நார்ச்சத்துதான்..
பயறு வகை புரோட்டீன்களில் லைசின் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகை புரதத்தில் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன. எனவேதான், இட்லி, தோசைகளில் உளுந்து சேர்க்கப்படுகிறது. பொங்கல் செய்தாலும், அதில் பாசிப்பருப்பு சேர்க்கப்படுகிறது.

உளுத்தம் பருப்பில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்திருப்பதால், இதய ஆரோக்கியத்தை காக்கிறது.. கொழுப்பின் அளவு சீராகிறது.. பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுக்க செய்கிறது. பற்கள், எலும்பு உறுதி பெறுகிறது.
கருப்பு உளுந்து சத்துக்கள்
அதேபோல, வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்தலாம். காரணம், கருப்பு உளுந்து மேற்புற தோலின்மீது Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியா அதிகமாக உள்ளது. இதுதான் இட்லி மாவு புளிக்க மூலகாரணமாகும்.. இந்த கறுப்பு தோலை எடுத்துவிட்டு வெறும் வெள்ளை கலர் வெந்தயம் பயன்படுத்துவதால், புளிப்புத்தன்மை இல்லாமல் போகிறது. எனவே, மாவு புளிப்பதற்காகவே, தனியாக வெந்தயம் சேர்க்கப்படுகிறது. இதற்கு பதில், நேரடியாகவே கருப்பு உளுந்து பயன்படுத்தினால் கூடுதல் நார்ச்சத்து கிடைக்கும்.
சிலர் இட்லி மாவு கரைக்கும்போது, ஆப்ப சோடா சேர்ப்பார்கள்.. இட்லி உப்பலாக வரவேண்டும் என்பதற்காக ஒரு சிட்டிகையாக சேர்ப்பது உண்டு.. ஆனால், பேக்கிங் சோடா, உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்..
பேக்கிங் சோடா போடுறீங்களா?
ஆப்ப சோடாவிலுள்ள பாஸ்போரிக் அமிலம், செரிமானத்தை குறைப்பதுடன், ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் தடுத்து நிறுத்திவிடும்.. அதுமட்டுமல்ல, காரத்தன்மை கொண்ட பேக்கிங சோடா, ரத்தத்தின் காரத்தன்மையையும் மாற்றக்கூடியது. இந்த காரத்தன்மை அதிகமாகும்போது, சிறுநீரகம் செயலிழக்கலாம். சோடியம் பைகார்பனேட் உடல் வளர்சிதை மாற்றத்தையும், தசை உடலியலையும் பாதித்துவிடும்..
கல்லீரல் சர்க்கரையையும் கொழுப்பாக மாற்றிவிடும்.. பேக்கிங் சேடாவிலுள்ள பாஸ்போரிக் ஆசிட், எலும்புகளுக்கு பாதிப்பை உண்டுபண்ணி விடும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும். நோயெதிர்ப்பு செயல்பாடும் குறைந்துவிடும். எனவேதான், அளவுடன் சோடா மாவு பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.
ஒரு நாள் இட்லி மாவு
அதேபோல, 3 நாட்களுக்கு மேல் இட்லி மாவு பயன்படுத்தினால், அஜீரணம், அசெளகரியம் ஏற்படலாம். அதிலும், இதய நோய் உள்ளவர்கள் 3 நாட்களுக்கு மேல் இட்லி மாவை பயன்படுத்த கூடாது.. ஏனென்றால், பாக்டீரியாக்களின் வளர்ச்சி மாவில் அதிகமாக இருக்கும்..
அதிலும் ஒரே பாத்திரத்தில் இட்லி மாவை வைத்திருப்பதால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்... பிரிட்ஜில் வைத்தாலும்கூட, இவையெல்லாம் மாவை விட்டு நீங்காது.. இதனை சமைத்து சாப்பிடும்போது, நெஞ்செரிச்சல், குடல் தொடர்பான பிரச்சனை, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை ஏற்படலாம். எனவே, இட்லி மாவு புளிக்காவிட்டாலும், அரைத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications