Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சு பஞ்சா பறக்கும் நோய்கள்.. "கடவுளின் அமிர்தம்" பெருங்காயம்.. துளி போதும்.. பெண்கள் சாப்பிடலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலி பெருங்காய "டப்பா" என்றாலும், நின்று மணம் தரக்கூடியது.. பெருங்காயம் இன்றி தென்னகத்து சமையல்களில் சமைக்கவே முடியாது.. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உணவுப்பொருள் ஆகும்.

1910-ம் ஆண்டு, ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது... அந்த தொற்றுக்கு எதிராக பெருங்காயம் செயல்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது..

Excellent health tips of asafoetida and asafoetida is very good for heart patients

இதற்கு பிறகு, பெருங்காயத்தை தங்களது கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் அணிந்திருந்தார்களாம்.. அதனால்தான், "கடவுளின் அமிர்தம்" என்றும் பெருங்காயத்துக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

என்னென்ன நன்மைகள்: பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலில் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதால், பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகளை சரிசெய்யும் அருமருந்தாகிறது இந்த பெருங்காயம்.. மாதவிடாய் சரியாக வராத பிரச்சனைக்கும், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்சனைக்கும், சினைப்பை நீர்க்கட்டி (Polycystic Ovary) உள்ள பெண்களும், இந்த பெருங்காயம் பேருதவி புரிகிறது.. அந்தவகையில், பெண்கள் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது பலன் தரும்.

அஜீரணத்துக்கு பெருங்காயத்தைவிட சிறந்த மருந்து உணவில் கிடையாது.. வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேரும்போது, வாயு பிடிப்பு ஏற்படாமல் தடுக்க, பெருங்காயத்தை சேர்ப்பார்கள்.. பருப்பு வகைகளிலும் பெருங்காயத்தை சேர்ப்பது வழக்கம்.

செரிமானம்: ஒரு டம்ளர் தண்ணீரில் பெருங்காயத்தை கலந்து பருகினால் தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை நீங்கும். இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகிறது. வயிறு வீக்கம், வலி, குடற்புண், குடல் புழுக்கள், வாயு, வயிற்று எரிச்சல் போன்றவற்றுக்கும் தீர்வாக உள்ளது.. செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள், சிறிது பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தால் உடனே சரியாகும்.

பெருங்காயத்தில் வைரஸ் எதிர்ப்புகள் நிறைய இருப்பதால், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, சளி போன்ற சுவாசப்பிரச்சனைகளை சீர்செய்கிறது.. குழந்தைகளுக்கு சிறிதளவு ஓமம் நீரில், பெருங்காயப்பொடியை துளி கலந்து தந்தால், நன்றாக பசியை தூண்டிவிடும்..

மன அழுத்தம்: நுரையீரல், மார்பகம், குடல்புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாக இந்த பெருங்காயம் கட்டுப்படுத்துகிறதாம். மன அழுத்தத்தை போக்குகிறது.. அத்துடன் தூக்கமின்மைக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது.. சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இவர்கள் பாகற்காயில் பெருங்காயத்தை கலந்து சாப்பிடலாம்.

ஆண்மைக்குறைவு: அதேபோல, ஆண்மைக்குறைவு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் பெருங்காயம் சிறந்த தீர்வாகும்.. நன்கு வெண்ணெயில் வறுக்கப்பட்ட பெருங்காய பொடியை தேனுடன் கலந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்குறைவு தொடர்பான பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள்.. அதேபோல, பெருங்காயம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளை நீக்கவும் செய்வதாக, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Excellent health tips of asafoetida and asafoetida is very good for heart patients

எப்படி வாங்குவது: பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.. ஒருவேளை, அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், டாக்டர்களின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். இப்போதெல்லாம் நிறைய கலப்படம் கலந்து விற்கப்படுகின்றன.. வாசனையை பார்த்து மட்டுமே, பெருங்காயத்தை வாங்கிவிடுகிறார்கள்.

கற்பூரம்: ஆனால், வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருப்பதே நல்ல பெருங்காயம் ஆகும்.. கருப்பாகி காணப்பட்டால், அதை வாங்கக்கூடாது.. கற்பூரம் மாதிரி எரிந்தால், அதுதான் கலப்படமில்லாத பெருங்காயமாகும்.. பெருங்காயத்தை நம்முடைய உணவில் 125 முதல் 500 மி.கி. மட்டுமே பயன்படுத்தி வந்தால் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு கிடைக்கும்.. உண்மையிலேயே "கடவுளின் அமிர்தம்தான்"..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+