அனீமியா இருக்கா? முருங்கைக்கீரை போதுமே.. "கீரைகளின் ராணி" முருங்கையிலை காட்டும் அதிசயம்.. செம டிப்ஸ்
சென்னை: ரத்த சோகை பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால், உணவில் சற்று கூடுதலான கவனத்தை செலுத்தினால் போதும்.. குறிப்பாக, முருங்கைக்கீரைகள் ரத்தசோகை பிரச்சனைக்கு பிரதானமாக உதவுகின்றன. எப்படி தெரியுமா?
பொதுவாக, ஆண்களுக்கு ஹீமோகுளோபின் (Hb) அளவானது, 13 கிராம்/100 மில்லிக்கு கீழும், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 கிராம்/100 மில்லிக்கு கீழும் இருக்க வேண்டும் என்று ரத்தசோகை பற்றின ஆய்வுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகள்: சமீபத்தில்கூட, மத்திய அரசு ஒரு ஆய்வு நடத்தியது.. அது தொடர்பாக தமிழகத்திலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 52.9 சதவீத பெண்களும், 24.6 சதவீத ஆண்களும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதிலும், சென்னையை பொறுத்தவரை 4 சதவீத பெண்களும், 4 சதவீத ஆண்களும் மோசமான ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.
அதாவது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கான ரத்த சோகை பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆண்களில் 4-ல் ஒருவருக்கும் பெண்களில் 50 சதவீதத்தினருக்கு ரத்தசோகை பாதிப்பு இருப்பதாகவும் வேறு பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன..
மாதவிடாய்: இதில், மாதவிடாய், மகப்பேறு போன்ற காரணங்களால் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இரும்புச்சத்து குறைப்பாடுதான், ரத்தசோகையின் பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.. இதற்கு அருமருந்தாவது முருங்கை கீரைகள்..
முருங்கைக்கீரையில், ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடக்கின்றன. மற்ற தாவர உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்பு சத்து அதிகமாகவே இந்த கீரையில் உள்ளது.
செயற்கை மாத்திரை: எனவே, செயற்கையாக நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தைவிட, இயற்கையாகவே முருங்கை கீரையில் கிடைக்கும் இரும்பு சத்தை நம்முடைய உடல் எளிதில் கிரகித்து கொள்கிறது. அந்தவகையில், இரும்புச்சத்து கூட்டும், முருங்கைக்கீரையை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் நமக்கு பயன்களை அள்ளி தரும். அந்தவகையில் 2 வகையான சட்னிகளை மட்டும் இப்போது பார்ப்போம்.
முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, மல்லி விதை, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.. இவைகள் பொன்னிறமாக சிவந்ததுமே, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, முருங்கை கீரையையும், உப்பையும் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது முருங்கை கீரை ஆறியவுடன், அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அரைத்தால் சட்னி ரெடி.
துவையல்: தேங்காய் சேர்த்தும் முருங்கை சட்னி அரைக்கலாம்.. ஒரு பாத்திரத்தில், எண்ணெய், காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, உளுத்தம் பருப்பு போன்றவற்றை தனித்தனியாக வறுத்து ஆறவைத்து கொள்ள வேண்டும். அதே எண்ணெய்யில் சுத்தம் செய்யப்பட்ட முருங்கைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் சிறிது தேங்காயையும் துருவி போட்டு வதக்க வேண்டும். இப்போது ஏற்கனவே வறுத்த கலவையுடன், இந்த கலவையையும் சேர்த்து, சிறிது புளி, சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும். கடைசியாக வாணலில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டினால் முருங்கை சட்னி தயார்.
முருங்கைப்பூக்கள்: முருங்கைகீரைக்கு பொதுவாகவே, உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு.. முருங்கை கீரையை சமைக்கும்போதெல்லாம் சிறிதளவு முருங்கை பூவையும் சேர்த்து சமைத்தால், நரம்புகள் வலுப்படும்.












Click it and Unblock the Notifications