கொரோனாவின் திடீர் வேகம் ஏன்? புதிய அலை வீசுகிறதா? லாக்டவுன் போடப்படுமா? டேட்டா அனலிஸ்ட் விளக்கம்
சென்னை: இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை லேசாக உயர்ந்து வருவது புதிய அலையின் தாக்கமா என்ற கேள்விக்கு கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கொரோனா வைரஸ் பரவி பலரின் உயிரை எடுத்தது. இது தொற்றுநோயாக இருந்ததால் 2020, 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2021 இறுதி முதல் படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் எச்3 என்2 ஃப்ளூ காய்ச்சல் பரவியது. இது அதிகமாக பரவி தீவிர அறிகுறிகளை ஏற்படுத்தியது.

அடங்கியது
இந்த நிலையில் இது சற்று அடங்கிய நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் துளிர் விட்டுவிட்டன. நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நிலவரம் 3 ஆயிரத்தை தாண்டியது. அது போல் இந்தியாவில் இன்று புதிதாக கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 2,994 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களுக்கு மீண்டும் ஒரு லாக்டவுன் போட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா புதிய அலை வீசுகிறதா? கொரோனா திடீரென உயர காரணம் உள்ளிட்டவை குறித்து கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்திடம் ஒன் இந்தியா தமிழுக்காக தொடர்பு கொண்டோம்.

இந்தியா
அவர் கூறுகையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கேஸ்கள் லேசாக அதிகரித்துத் தான் வருகின்றன. ஆனால் அச்சப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை. 4 வாரங்களாக தமிழகத்திலும் அதிகரித்துதான் வருகிறது. ஒரு நாளைக்கு 100, 120 கேஸ்கள் வருகின்றன. டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் 3.5 சதவீதம்தான் இருக்கிறது.

லேசாக அதிகரிப்பு
லேசாகதான் அதிகரித்து வருகிறது. எனவே பெரிய அலை வருவதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் XBB 1.16 sublineageதான். இது இந்தியாவில் பரவி வருகிறது. அதனால்தான் கேஸ்கள் அதிகரிக்கின்றன. இந்த வைரஸ் வேகமாக பரவுகிறதே தவிர இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வெளிநாடுகளிலும் பெரிய கவலையை தரும் அளவிற்கு இது இல்லை.

சப் லீனியேஜ்
இந்த எக்ஸ்பிபி சப் லீனியேஜிற்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் என்பது போன்ற டேட்டாக்கள் எதுவும் இதுவரை வரவில்லை. இந்த எக்ஸ்பிபி 1.1 6 புதிய வைரஸ் என்பதால் இன்னும் 3 வாரங்களுக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும். ஆனால் பெரிய அலை வருவதற்கான வாய்ப்பு இல்லை. இது ஓமிக்ரானின் துணை திரிபு என்பதால் பயம் இல்லை. எக்ஸ்பிபி என்பது புதிய வேரியண்ட்டும் இல்லை.

துணை திரிபு
எக்ஸ்பிபி என்ற வேரியண்ட் இந்தியாவில் ஏற்கெனவே இருக்கும் வேரியண்ட்தான். அதில் 1.16 என்ற துணை திரிபு பரவி வருகிறது. இறப்பு சதவீதமும் அதிகரிக்கவில்லை. எனவே லாக்டவுன் அளவுக்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனாவை விட எச்3என்2 ப்ளூதான் அதிகமாக பரவி வருகிறது. எனவே பொது இடங்களில் மாஸ்க் அணிவது மற்ற வைரஸ் பரவலில் இருந்து நம்மை காக்கும். இந்த புதிய துணை திரிபான எக்ஸ்பிபி 1.16 எல்லா வயதினருக்கும் பரவி வருகிறது. இவ்வாறு விஜய் ஆனந்த் தெரிவித்தார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications