வாயில் வைத்ததும் புளிக்கும்! பிறகு துவர்க்கும்.. சூப்பரான புளிச்ச கீரை! கேன்சரை தடுக்கும் கோங்குரா
சென்னை: உயிர்க்கொல்லியான புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றல் புளிச்ச கீரைக்கு உண்டு. இதை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
புளிச்ச கீரை, கோங்குரா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பொதுவாக கீரை என்றாலே உடல்நலனுக்கு நன்மையை கொடுக்கும். அதிலும் இந்த புளிச்ச கீரை உடலுக்கு பல்வேறு பலன்களை கொடுக்கிறது.

இந்த புளிச்ச கீரையில் புரதச்சத்து 1.7 கிராம் உள்ளது. இரும்பு சத்து 5 மில்லிகிராம், விட்டமின் சி 20 மில்லி கிராம், தையமின், ரிபோபிளேவின், நியாசின் உள்ளிட்டவைகளும் உள்ளன. இந்த கீரை நீளமான இலைகளை கொண்டிருக்கும். இதன் சுவை சற்று புளிப்பாகவும் துவர்ப்பாகவும் இருக்கும்.
இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் புளிச்ச கீரையை வாரத்திற்கு ஒரு நாளாவது சாப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த கீரை உடலுக்கு என்னென்ன நன்மைகளை கொடுக்கிறது என்பதை பார்ப்போம். இந்த கீரையை அதிக அளவில் சாப்பிடுவதால் உடல் செல்கள் வலுப்பெறும். இதனால் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
காலை வேளைகளில் மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் காலை உணவுகளை தவிர்க்கிறார்கள். அது போல் ஜங்க் ஃபுட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் காரமான உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு குடற்பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன. இந்த புண்கள் உண்ட உணவு செரிமானம் செய்வதில் பிரச்சினையை கொடுக்கிறது.
அது போல் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் பிரச்சினைகள், அடிவயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும் மகிமை இந்த கீரைக்கு உண்டு. அது போல் தோல் வியாதிக்கு அருமருந்து. இந்த கீரையை அரைத்து சொறி, சிரங்கு இருக்கும் இடங்களில் தடவினால் அவை நீங்கும். ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
ரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது. அது போல் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற நோய் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது. அத்துடன் இதய பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் கொலஸ்டிராலை அழிக்கும் சக்தி உள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. கருவுறுதலை மேம்படுத்தும். கண் பார்வை தெளிவு பெறும். சிறுநீர் தொற்றை நீக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். வாழ்நாள் நோய்களை தடுக்கும் ஆற்றல் இந்த புளிச்ச கீரைக்கு உண்டு. இந்த கீரைக்கு வெளிநாடுகளில் anti infertility herb என்ற பெயர் உண்டு.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications