Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரவனில் கேவலம்.. நடிகைகள் டிரஸ் மாற்றுவதில் பகீர்.. ராதிகா ஏன் போலீஸுக்கு போகல? கேட்பது யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரவனில் உடை மாற்றாமல் அறைக்கு சென்று மாற்றியதாக நடிகை ராதிகா சொல்வது அதிர்ச்சியாக உள்ளது என்றும், பிற நடிகைகளுக்கும் இந்த தகவலை தெரிவித்தாக சொல்லும் ராதிகா, ஏன் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை? என்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.

கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு கிடக்கிறது.. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பெரும்பாலாலான பிரபலங்கள் மீது புகார்கள் குவிந்து வருகின்றன..

actress radhika kerala hema committee

சினிமா: ஒருபக்கம் திரையுலகிலும், மறுபக்கம் அரசியலும் இந்த விவகாரம் தலைதூக்கி வருகிறது. இதனால் அடுத்து என்னாகுமோ? என்ற பதற்றம் கேரளாவில் எழுந்துள்ளது. தினம் தினம் ஒவ்வொரு பிரபலங்கள் மீதான புகார்களை, நடிகைகள் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், இந்நிலையில் பிரபல நடிகை ராதிகா, கேரள திரையுலகில் பல வருடங்களாகவே நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயத்தை தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

கேரள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர்.

வீடியோக்கள்: பிறகு அந்த வீடியோக்களை அங்கே ஷூட்டிங்கில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.. இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் பார்த்துள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் ரூம் எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு ஷூட்டிங்கிற்கு வருவேன்.

நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன். நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் என்னுடைய அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு" என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார்.

ராதிகா: ராதிகாவின் இந்த பேச்சுக்கள், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் உலுக்கி எடுத்து வருகிறது.. இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்... அத்துடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்..

அடையாளம்: அந்த அறிக்கையில், "தைரியமான பெண்ணாக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் நடிகை ராதிகா அவர்கள் மலையாள சினிமா நடிக்கும்போது, நடிகைகள் உடை மாற்றுவதனை காரவனில் ரகசிய கேமரா பொருத்தி ஆண்கள் சிலர் பார்த்து சிர்த்ததனை பார்த்தேன் என்றும் பிறகு தான் காரவனில் உடை மாற்றாமல் அறைக்கு சென்று மாற்றியதாக கூறுவது அதிர்ச்சியாக உள்ளது.

பிற நடிகைகளுக்கும் தகவலை தெரிவித்தேன் என்று சொல்லும் ராதிகா அவர்கள் ஏன் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை? ஏன்
பத்திரிகையாளர்களை சந்தித்து இப்படிபட்ட மோசமான செயலை வெளியில் கொண்டுவரவில்லை? என்ற பல வினாக்கள் எழுகின்றன..

பெண்கள்: இப்படிதான் நடந்தேறி இருக்கிறது சினிமா துறையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள்... குற்றத்தை தட்டி கேட்காமல் இருப்பது கூட ஒரு வகை குற்றம்தான்... வாய்ப்பு வராதோ என்ற பயம் பெண்களை மௌனமாக இருக்க வைத்திருப்பது மிகவும் வருத்தத்திற்குறிய செயலாகும்.

பெண்களின் இந்த மவுனமே ஒட்டு மொத்த குற்றங்களுக்கும் முடிவு கட்ட முடியாத நிலையில் இருக்க வைக்கிறது.வெளியில் வந்து தைரியமாக புகார் கொடுங்கள் அதன் மூலமாகதான் நமது அடுத்த தலைமுறை பெண்களுக்கு இதுபோன்று நடக்காமல் தடுக்க முடியும். பொறுத்தது போதும்!!" என்று தெரிவித்திருக்கிறார் ராஜேஸ்வரி பிரியா

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+