இட்லிக்கு ஊற வெக்கறீங்களா? 3 நாளைக்கு தோசை மாவு யூஸ் பண்றீங்களா? அப்ப இதை உடனே பாருங்க
சென்னை: இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவை, அதிக ஈரப்பதம், அதிக வெப்பத்தில் வைக்கக்கூடாது என்பார்கள். அதேபோல, ஒருநாளைக்கு அரைத்த மாவை, 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு என்ன காரணம்?
1 இட்லியை எடுத்துக் கொண்டால், 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றன. மேலும், கொழுப்புச்சத்து இல்லாமல் இருப்பதால், அனைவருக்குமே ஏற்ற உணவாக கருதப்படுகிறது.
பயன்கள்: இட்லி சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாகிறது. தசைகளை வலிமையாகின்றன. ரத்தம் உற்பத்தியாகின்றன. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தந்து, வயிற்றிலுள்ள புண்களை ஆற்றுகின்றன.

இட்லி மாவு புளிக்க வைத்து தயாரிப்பதால், நொதித்தல் செயல்முறை காரணமாக, புரோ பயாடிக்குகள் உருவாகின்றன.. உணவை ஜீரணிக்க செய்து, நம்முடைய குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையாக இருப்பது இந்த புரோ பயாடிக்குகள்தான். ஆனால், நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளில் கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. இட்லி, தோசை, ஆப்பம், தயிர் போன்ற எல்லாமே நொதிக்க வைக்கப்பட்டவைதான். அதாவது புளித்து வைக்கப்பட்டு, அதன்பிறகு சமைக்கப்படுபவை.
வாயு பிரச்சனை:
எனவே, நொதித்த உணவுகளை இரவு நேரத்தில் தவிர்க்க சொல்கிறார்கள்.. வயிறு உபாதைகள் உள்ளவர்கள், அஜீரணம், அசிடிட்டி, வாயு தொந்தரவு இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் பெண்களும் இரவு நேரங்களில் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்..
அதேபோல, நொதித்தல் முறையில் தயாரான இட்லி மாவினை, 3 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். காரணம், பாக்டீரியாக்களின் வளர்ச்சி இந்த மாவில் அதிகமாக இருக்குமாம். அதிலும், ஒரே பாத்திரத்தில் மாவை வைத்திருக்கும்போது பாக்டீரியாக்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும்.
உபாதைகள்:
அதுமட்டுமல்லாமல், இட்லிக்கு அரைக்கும்போது வெந்தயம் சேர்த்தேதான் அரைக்கப்படும். 3 நாட்களுக்கு மேல் இதை பயன்படுத்தினால், வீக்கம் பிரச்சனை, அஜீரணம், அசெளகரியம் உள்ளிட்ட பல உபாதைகளை தந்துவிடும். இதய நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடவே கூடாதாம். எனவே 3 நாட்களுக்குள் இட்லி மாவை பயன்படுத்திவிடுவது நல்லது என்கிறார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications