ஹார்ட் அட்டாக் அண்டாது.. சத்தான பார்லி இட்லி போதுமே.. தோசை மாவுக்கு பதிலா இதை சேருங்க.. பெஸ்ட் டிபன்
சென்னை: எப்போதும் போல அரிசி இட்லி, தோசைக்கு பதிலாக, சத்தான இட்லி, தோசையை எப்படி செய்வது தெரியுமா? இதோ 2 டிப்ஸ்களை பார்ப்போம்.
ஆவியில் வேக வைத்து எடுப்பதால் இட்லி அனைவருக்கும் ஏற்ற உணவாகிறது.. இதில் அரிசிக்கு பதிலாக பார்லியை பயன்படுத்தி இட்லி சுட்டு பாருங்கள்.

பார்லி: காரணம், பார்லி கெட்ட கொலஸ்ட்ராலை போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது.. நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரையின் அளவை குறைக்கும். வைட்டமின் B உள்ளதால் நரம்புகளை பலப்படுத்தக்கூடியவை.. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், ஆரோக்கியமான செல் வளர்ச்சியை ஆதரிக்கின்றன..
நம்முடைய உறுப்புகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கின்றன பார்லி நீர் இதய நோய்களின் நிகழ்வைக் குறைக்க உதவுகிறது, ஏனெனில் பானத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் இதயத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுகின்றன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் அதிக கொழுப்பு இரண்டையும் திறம்பட எதிர்த்துப் போராடுவதில் பார்லிக்கு பெரும் பங்கு உள்ளது..
உடல் எடை: உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடல் எடையையும் குறைக்ககூடியது.. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், மலச்சிக்கலை போக்கக்கூடியது.. பெருங்குடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் இது வெளியேற்றுகிறது, எனவே, காலை உணவில் பார்லியை அதிகம் சேர்த்து கொண்டால் இதய பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.
பார்லியை மாவு போல அரைத்து வைத்துக் கொண்டால், சப்பாத்தி, தோசை, இட்லி செய்யலாம்.. பார்லியை கஞ்சியாகவோ சூப்பாகவோ செய்து குடித்தால் பாதங்கள் நீர் கோர்த்து வீங்கி கொள்ளாது... பெண்களுக்கு வலு கொடுக்கக்கூடியது.
பார்லி: பார்லியை கலந்து இட்லி சுட்டு பாருங்கள்... அபாரமான சத்துகள் உங்களுக்கு கிடைக்கும்.. 1 கப் பார்லியை 2 முறை களைந்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரை கப் கோதுமை ரவையை 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்போது பார்லியில் உப்பு, மிளகாய், கோதுமை ரவை, அரை கப் தயிர் சேர்த்து அரைக்கவும். அரைத்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடவும். பிறகு இட்லி அல்லது தோசை செய்தால் சத்தான இட்லி ரெடி..
தயிர்: இட்லி மாவுக்கு பதிலாக ராகியை பயன்படுத்தி இட்லி சுடுவதை போல அவலை பயன்படுத்தியும் இட்லி சுடலாம். மிக்சியில் 1 கப் அவலை அரைக்க வேண்டும்.. இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அரை கப் அரிசி மாவு, 1 கப் தயிர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும்..
இதனை 1 மணி நேரம் ஊற விடவேண்டும்.. பிறகு சோடா உப்பு சேர்த்து இட்லி சுட்டு எடுக்கலாம்.. எப்போதும் போலவே இந்த மாவையும் வேகவிட்டால் போதும்.. அல்லது இட்லி மாவிலும், அவலை கலந்து செய்யலாம். சோயா மொச்சையை பயன்படுதி அரைத்து இட்லி செய்தால், அதிக சத்தான இட்லி கிடைக்கும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications