நூறு நோயை விரட்டும் அசோக மர இலைகள்.. மூலம் முதல் நீரிழிவு வரை விரட்டும் அசோகா மரப்பட்டை தூள்.. அருமை
சென்னை: முன்னோர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவிய மூலிகை அசோக மரப்பட்டையாகும்.. வேப்பமரம், முருங்கை மரம், வாழை மரம் போலவே அசோக மரமும் அத்தியாவசிய மரமாக திகழ்ந்துள்ளது.. "பெண்களின் மருந்து" என்று அசோக மரத்தை பெரியவர்கள் சொல்வார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? அசோக மரம் தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன? எப்படி பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
அசோக மரத்தின் இலைகள், பட்டைகள், பூக்கள் என ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்களை பெற்றிருக்கின்றன.. உதாரணத்துக்கு அசோக மரத்தின் பட்டைகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.. சரும ஆரோக்கியத்துக்கு இந்த பட்டையை பயன்படுத்துவார்கள். இதனை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட்டு, காலையில் பட்டையை விழுதுபோல் அரைத்து, சருமத்திற்கு பூசிவந்தால், சருமம் ஆரோக்கியமும், பொலிவும், மினுமினுப்பும் பெறும்.. அலர்ஜி இருந்தாலும் நீங்கிவிடும்.

அழகு சாதன பொருட்கள்
எனவேதான் பெரும்பாலான அழகு சாதன பொருட்கள் தயாரிப்புகளில் முக்கியமான மூலப்பொருட்களாக அசோக மரத்தின் பட்டைகள் சேர்க்கப்படுகின்றன. உடலின் சருமம் முதல் உள்ளுறுப்புகள் வரைக்கும் மருந்தாகின்றன.. ஆனால், கர்ப்பிணிகள் இதனை தவிர்க்க வேண்டும்.
அசோக மரத்தின் பட்டைகளை மருந்தாக சாப்பிட்டால், வயிற்றிலுள்ள புழுக்கள், கிருமிகள் நீங்கிவிடும்.. காரணம், அசோகா மரத்தின் பட்டை பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வலி நிவாரண பண்புகளை கொண்டிருக்கிறது. உள் மற்றும் வெளிப்புற அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது..
அதைவிட முக்கியமாக மூலநோய்க்கு அசோக மர பட்டைகளே உதவுகின்றன.. அதனால், மர பட்டைகளை வைத்து டீ போல தயாரித்து குடிக்கலாம். அதேபோல, மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள், இந்த மரப்பட்டையை விழுதாக அரைத்து பூசினால் நிவாரணம் கிடைக்கும். இந்த மரத்தின் பட்டையில் கெட்டோஸ்டெரால் என்ற முக்கிய பொருள் உள்ளதால், சீரற்ற மாதவிடாயையும் சரிசெய்கிறது.. அதிக உதிரப்போக்கு, வயிற்றுப்போக்கை தடுக்க இதன் பூக்கள் பயன்படுகின்றன. இதனால் வயிற்று வலியையும் தீர்க்கிறது.
அசோக மரப்பட்டை
அசோக மரப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் போல எடுத்து கொள்ள வேண்டும். இதில் 8 முதல் 10 டீஸ்பூன் வரை மாதவிடாயின்போது மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு பிறகு குடித்து வருவதால், மாதவிலக்கின்போது வரும் வயிற்று வலி குறையும்..
பெண்களை பாதிக்கக்கூடிய கருப்பை கட்டிகளை இந்த மரத்தின் பட்டைகள் சரிசெய்கின்றன... அதாவது, இந்த மரப்பட்டை பொடி 5 கிராம் எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து, பாதியாக சுண்டவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் 2 வேளை, 2 மாதம் சாப்பிட்டு வந்தாலே, நீர்க்கட்டிகள் மறைந்துவிடுமாம்.
கருப்பை கட்டிகள்
கர்ப்பப்பை வலுவற்று இருந்தால், அசோக மரப்பட்டை தேயிலை தினமும் 15 முதல் 25 மி.லி அளவு எடுத்துகொள்ள வேண்டும். இதனால் கருப்பையின் தசைகள் வலுப்பெறும். அசோக மரப்பட்டை பொடியுடன் வால் மிளகு சம அளவு கலந்து வைத்து பசும்பாலில் 3 கிராம் அளவு கலந்து குடிக்கும்போது, வெள்ளைப்போக்கு மட்டுப்படும்.
அசோக மரத்தின் பூக்கள், மலத்தில் ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்துகின்றன. வயிற்று போக்கு இருந்தாலும் இந்த பூக்களை மருந்தாக உபயோகிக்கலாம்.. சர்க்கரை நோயாளிகளுக்கு அசோக மரத்தின் உலர்ந்த பூக்கள் ஒரு வரப்பிரசாதம் எனலாம். ஏனென்றால், அசோக மரப் பூக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த துணை புரிகிறது..
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் அசோக மர பட்டைகளில் டீ தயாரித்தும் குடிக்கலாம். இதற்கு அசோக மரத்தின் காய்ந்த பூக்களை எடுத்து நீரில் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். 15 முதல் 60 துளிகள் வரை தினமும் 2 வேளையாக இதை எடுத்துக் கொள்ளும்போது, சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.
அசோக மரத்தின் விதைகளை பொறுத்தவரை, சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையை கொண்டது.. அத்துடன் சிறுநீரகத்தில் கற்கள் சேராமலும் முன்கூட்டியே தடுக்கிறது.. இந்த விதையை காயவைத்து தூள் செய்தும் மருந்தாக பயன்படுத்துவார்கள்..
அசோக இலைகளை எடுத்துக் கொண்டால், வயிற்றிலுள்ள புழு, பூச்சிகளை நீக்கக்கூடியது. இதனை முறையாக பயன்படுத்தும்போது, குடல் சுத்தமாகி ஆரோக்கியமாகிறது. அத்துடன் வயிறு தொடர்பான சிக்கல்களையும் இந்த இலைகள் தீர்க்கின்றன. இந்த அசோக இலைகளை கழுவி சுத்தம் செய்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிது நீரில் இந்த சாற்றினை கலந்து, சீரகத்தூள் சேர்த்து குடித்தால், வயிறு பொருமல், வயிறு வலி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், வயிற்றுப்புண்கள் போன்ற உபாதைகள் தீரும்.
சரும பாதுகாப்பு
அதேபோல, வேப்ப இலைகளை போலவே, அசோக மரத்தின் இலைகளும் சருமத்தை காக்கக்கூடியது.. இந்த இலைகளை சுத்தம் செய்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, கடுகு எண்ணெய்யை கலந்து, உடலிலுள்ள காயங்கள், புண்கள், கொப்புளங்களுக்கு தடவினால் விரைவில் குணமாகும். எரிச்சல், நமைச்சல், குடைச்சல் போன்றவையும் தீரும்.
இந்த அசோக மர இலைகள் நம்முடைய ரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகிறது.. சரும அழற்சி, சரும தொந்தரவுகள் நீங்குகின்றன. அசோகா மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறுகளை, தீக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்த முடியும்.. அவ்வளவு ஏன்? எக்ஸிமா, சோரியாஸிஸ், சிரங்கு, வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தவும் இந்த இலையின் சாறு பேருதவி புரிகிறது.
ஆன்மீகத்தில் முக்கிய பங்கு
அதேபோல, அசோக மரங்கள் ஆன்மீகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. செல்வம் பெற மிகவும் உதவியாக இருப்பது அசோக மரத்தின் வேர்களாகும்.. எனவே, இந்த மரத்தின் வேரை சுத்தமான நீரில் கழுவிய பிறகு காயவைத்து பத்திரமாக எடுத்து வைத்து கொள்ளவேண்டும். இதனால் வீட்டில் நிதிநெருக்கடி அண்டாது என்பது நம்பிக்கையாகும்.
அசோக இலைகளை வீட்டில் வைத்தால், லட்சுமி தேவியின் அருள் கிடைக்குமாம்.. இதற்கு வெள்ளிக்கிழமைகளில், 11 அசோக இலையை, சிவப்பு துணியில் கட்டி வீட்டில் எடுத்து பாதுகாப்பாக வைப்பதால், வீட்டில் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி, செல்வம் பெருகும்.
சொந்தமாக பிசினஸ் செய்பவர்கள், அசோக இலைகளில் ஒரு மாலையை தொடுத்து, அலுவலகம் அல்லது கடையின் வாசலில் கட்டி தொங்கவிடலாம். இதனால் வியாபாரம் செழிக்கும். தடையின்றி வருமானம் வரும்.. படிப்பில் ஆர்வம் இல்லாத பிள்ளைகள், சரஸ்வதி தேவியை அசோக இலைகளால் அர்ச்சனை செய்து வரலாம். இதனால் நினைவாற்றல் பெருகும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications