முன்னூறு நோயை ஓட்டும் முருங்கை.. முருங்கையிலை ரசம் குடித்தால்.. அடுத்து நடக்கும் அதிசயத்தை பாருங்க
சென்னை: முருங்கைக்கீரையை வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலே தீரும் முக்கிய நோய்கள் என்னென்ன தெரியுமா?
மற்ற கீரைகளைவிட நிறைய முக்கியத்துவத்தை பெறுவது முருங்கைக்கீரை மட்டும்தான்.. காரணம், மற்ற கீரைகளிலுள்ள இரும்புச்சத்தினைவிட, 75 சதவீதம் அதிகமான இரும்புச்சத்துக்கள் முருங்கை கீரையில் இருக்கிறது..

ஏகப்பட்ட சத்துக்கள்: ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் C உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு வைட்டமின் A இந்த முருங்கைக்கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இதில் உள்ளது. முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் உள்ளது..
வயிறு வலி: முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, வயிற்றுப்புண் ஆறிவிடும்.. சரும வியாதிகள் விலகும்.. உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலையும் இந்த கீரை நீக்குகிறது.. முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் அதிக உடல் எடை, சர்க்கரை நோய், ரத்த சோகை, இதயநோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு போன்றவற்றை குணப்படுத்தும்.
தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை.. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... முருங்கையிலையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் வலுப்பெறும், ஈறுகள் சம்பந்தமான பிரச்சனையும் தீரும்..
உடல் எடை: உடல் எடை வெகுவாக குறைய வேண்டுமானால், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை.. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும் என்கிறார்கள்.
ஒரு வாணலில் சிறிது நெய்விட்டு, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதில் ஒரு கிண்ணம் அளவுக்கு சுத்தம் செய்த முருங்கையிலையை சேர்த்து வதக்க வேண்டும். இதில், சிறிது மஞ்சள் தூள், உப்பு, மிளகு, சீரகத்தை பொடி செய்து தூவி இறக்கிவிட வேண்டும். மதிய உணவில் இந்த கீரையை இப்படி உணவில் கலந்து சாப்பிட்டால், ஏகப்பட்ட நோய்கள் தீருமாம்.. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த கீரை வரப்பிரசாதம்.
கீரை விழுது: முருங்கையிலையை ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.. ஒரு கப் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.. இதனை வடிகட்டி, எலுமிச்சம் பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.. அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்தும் குடிக்கலாம்.. இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இந்த பானம், குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.
கருப்பை: பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்க தூண்டுகோலாகிறது.. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும்போது, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்...
முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை பலம் பெறும். கர்ப்பப்பையிலுள்ள நீர்க்கட்டி குணமாக வேண்டுமானால், முருங்கை இலையை கொதிக்க வைத்து இந்த தண்ணீரை குடித்து வந்தாலே போதும்.
ரசம்: அதேபோல, முருங்கையிலையில் ரசம் வைக்கலாம்.. வெந்தயம், சீரகம் இரண்டுமே அரை டீஸ்பூன், தனியா 1 ஸ்பூன், 1 பச்சை மிளகாய், பூண்டு 4 பல், கறிவேப்பிலை என அனைத்தையும் மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். 1 கப் முருங்கைக்கீரையில், அரை கப் தண்ணீர் விட்டு வேகவிட்டு தஎடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, கா.மிளகாய், பெருங்காயம் தாளித்து, மிக்சியில் அரைத்த பொருட்களையும் சேர்க்க வேண்டும்.
நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் சத்தான ரசம் தயார். இப்படி ரசத்தை சாப்பிட்டு வந்தாலே பெரும்பாலான நோய்கள் நம்மை விட்டு நாலடி தள்ளி நிற்கும் பாருங்கள்..!!












Click it and Unblock the Notifications