ரஸ்தாளியை விடுங்க.. கற்பூரவள்ளி வாழையை எடுங்க.. பலே கற்பூர வாழை.. அனீமியாவை விரட்டும் பெஸ்ட் பழங்கள்
சென்னை: ரத்த சோகையிலிருந்து விடுபட உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா? இதில் தவிர்க்கவே முடியாதது கற்பூரவள்ளி வாழைப்பழமாகும். ஏன் தெரியுமா?
பொதுவாக, ஆண்களுக்கு 13 கிராம் விழுக்காடு குறைவாக ஹீமோகுளோபினும், பெண்களுக்கு 12 கிராம் விழுக்காடு குறைவாக ஹீமோகுளோபினும் உடலில் இருந்தாலே, அது ரத்த சோகை பாதிப்பாக கருதப்படுகிறது.

ரத்தசோகை: இந்த ரத்த சோகை வருவதற்கு பிரதான காரணம் இரும்புச்சத்து குறைபாடுதான். சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாததே இதற்கு மூல காரணமாகும்..
அதேபோல, வைட்டமின் B12, ஃபோலிம் அமிலம் குறைபாடுகள் காரணமாகவும் ரத்த சோகை ஏற்படலாம். எலும்பு மஜ்ஜை சரியாக செயல்படாவிட்டாலும் ரத்த சோகை வரலாம்.. மரபணு காரணங்களால் ரத்த செல்கள் அழிந்தாலும் ரத்த சோகை பாதிப்பு ஏற்படலாம்.
என்ன காரணம்: அதேபோல, உடலில் இதர பாதிப்புகள் காரணமாக ரத்தம் வெளியேறுவதாலும், ரத்த சோகை சோகை ஏற்படலாம். பெண்களுக்கு பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ரத்த போக்கு ஏற்படுவதால் ரத்த சோகை ஏற்படலாம்.
எனவே இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.. முருங்கைக்கரை உட்பட பச்சை காய்கறிகள் இதற்கு பலன் தருகின்றன.. காரணம், ஒரு மனிதனுக்கு தினமும் 15 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவையாக இருப்பதால், பழங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. இதில், பேரீச்சை பழங்கள் அதிக பலன் தருகிறது.. மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்கள் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்..
வாழைப்பழம்: வாழைப்பழங்களையும் சாப்பிடலாம்.. இதில் கற்பூரவள்ளி வாழைப்பழத்திலும், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் B6, நார்ச்சத்துக்கள் உள்ளன. காலை உணவை சாப்பிட முடியாதவர்கள்கூட, இந்த ஒரு பழத்தை மட்டுமாவது சாப்பிட்டாலே போதும், ஆற்றலும், சுறுசுறுப்பும் அன்றைய நாளில் கிடைக்குமாம்..
இந்த கற்பூரவள்ளி சிறிய பழமாக இருந்தாலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளதாலும், மாங்கனீசு, மெக்னீசியம் அடங்கியிருப்பதாலும், எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவை தருகிறது.
ரத்த சோகை: அதேபோல, ரத்தசோகை பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம் இந்த கற்பூரவள்ளி வாழைப்பழம்.. தொடர்ந்து இந்த பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தவிருத்தி அதிகமாகி, ஹீமோகுளோபின் பிரச்சைனையை விரட்டியடித்துவிடும்..!
நாவல் பழம்: அதேபோல, ரத்தத்தை உற்பத்தி செய்வதிலும் திராட்சை பழங்கள் பெரும் பங்காற்றுகின்றன.. விடாமல் திராட்சையை நாம் சாப்பிட்டு வரும்போது, ரத்தத்தில் உள்ள கெட்ட கூறுகள் நீங்குகின்றன.. அத்துடன், நல்ல ரத்தத்தை உற்பத்தி யாகின்றன.. நாவல் பழத்தையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்தமும் அதிகமாகும். தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் ரத்தம் பெருகும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications