முத்து முத்தான பலன் தரும் "ரத்த" விதை.. பிரமிக்கவைக்கும் மாதுளை.. பெண்கள் தவிர்க்க கூடாத மாதுளம்பழம்
சென்னை: இதயத்தை காக்கக்கூடிய மாதுளம் பழங்கள் பெண்களுக்கு எந்த அளவுக்கு பலன்களை தருகிறது தெரியுமா? கர்ப்பிணிகள் மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா?
மாதுளம் பழத்தை எடுத்துக் கொண்டால், வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், நிறைய ஆன்டிஆக்சிடன்ட் அடங்கியிருக்கும் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த பழமாகும்.
கொழுப்புகள்: இந்த பழத்தின் விதைகளில் அதிகமாக இருப்பது நார்ச்சத்துக்கள்தான்.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த இந்த மாதுளை மிகச்சிறந்த உணவாகும்.. வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நீக்கும்..

இந்த பழத்தின் விதைகள், புற்றுநோய் பாதிப்பு செல்களை தடுத்து அழிக்கக்கூடியது.. பெரும்பாலான புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில், மாதுளம் விதைகளின் முக்கியத்துவம் வெளிப்பட்டுள்ளது.. வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நீக்கி, இதயத்துக்கு கவசம் போல இந்த பழங்கள் காத்து நிற்கின்றன.
ரத்த நாளங்கள்: தினமும் 100 மி.லி மாதுளை சாறு குடித்து வந்தாலே, ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்கு சென்று, இதயம் பலம் பெறும். இதயம் சம்மந்தமான நோய் பிரச்சனை உடையவர்களும், மிதமான அளவில் அதுவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, மாதுளம்பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
இந்த மாதுளை விதைகள் மூளையை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.. பாலிபினால்களை கொண்டிருப்பதால், நினைவாற்றலையும் மேம்படுத்தி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.. எனவே வளரும் பிள்ளைகளுக்கு மாதுளம் பழத்தை, அதன் விதையுடன் ஜூஸ் தயாரித்து தந்தால், அவ்வளவும் பலனளிக்கும்.
மாதுளை விதை: மாதுளையின் கொட்டைகளில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பாலிபினால்கள், ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராட உதவுவதால், நம்முடைய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க செய்கிறது.. கீல்வாதம் மட்டுமல்லாமல், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு தீர்வை தருகின்றன.
கர்ப்பிணிகளுக்கு இந்த பழம் அவ்வளவும் நல்லது.. காரணம், கர்ப்பத்திலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக அமைவதற்கு இப்பழம், தூண்டுகோலாகிறது. வெளிநாடுகளிலெல்லாம், பிறந்த குழந்தையின் மூளையில் எந்த பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்கு தருகிறார்களாம்..
கர்ப்பப்பை: திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் மாதுளையை விதைகளுடன் சாப்பிட்டு வரலாம்.. இதனால், ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

அதேபோல ஆண்களுக்கு, விறைப்புத்தன்மை இருந்தாலும் இந்த மாதுளை அந்த குறையை போக்கிவிடும்.. விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன
ஆச்சரியம்: இதில் இன்னொரு ஆச்சரியம், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளையை சாப்பிட்டு வரும்போது, ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதாக சமீபத்திய ஆய்வுகளில் நிரூபித்திருக்கிறார்கள்.
ஆனால், ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது மாதுளைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இலைகள்: மாதுளை பழங்களை போலவே அதன் மாதுளை இலைகளும் சத்து நிறைந்தவை.. முக்கியமாக, வைட்டமின் C உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த இலைகள் உதவுகின்றன. அதனால்தான், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மாதுளை இலையில் டீ, அல்லது கசாயம்போல காய்ச்சி தருவார்கள். உடல் எடை குறைய நினைப்பவர்கள், தொப்பை இருப்பவர்கள், இந்த இலையின் தண்ணீரை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications