Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சைலண்ட் கில்லர்".. இந்தியர்கள் உடலில் அதிகரிக்கும் கொழுப்பு! முதல்முறையாக வெளியான வழிகாட்டுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சைலண்ட் கில்லர் எனப்படும் டிஸ்லிபிடெமியா என்றால்? இதுகுறித்து மருத்துவ அறிஞர்கள் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன தெரியுமா?

சமீபகாலமாகவே, இதய நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது.. இதுபோன்ற தொற்றா நோய்களால் இந்தியாவில் ஒவ்வொரு நொடியிலும் 10 பேர் இறப்பதாகவும், பல்வேறு நோய்களால் உயிரிழக்கும் ஒரு கோடி பேரில் 52 லட்சம் பேர் தொற்றா நோய்களால் இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

Health Heart Diseases

கொலஸ்ட்ரால்: இதில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது டிஸ்லிபிடெமியா (Dyslipidemia) என்ற பாதிப்பாகும்.. அதாவது நமது உடலில் உள்ள கொழுப்பு, கொலஸ்டிரால், டிரைகிளிசரைடுகள், பாஸ்போலிப்பிட்ஸ் உள்ளிட்டவற்றின் அளவு திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது.. இந்தப் பிரச்சினையைத்தான் டிஸ்லிபிடெமியா என்று சொல்கிறோம். இது இருதய கோளாறில் போய் முடியும்... இருதயம் சம்பந்தமான பிரச்சினையும் கூட.

இந்த நோய் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இந்திய இருதயவியல் கழகம் ஒரு வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் மத்தியில் டிஸ்லிபிடெமியா பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய வழிகாட்டியை அது உருவாக்கியுள்ளது. இதுகுறித்து இருதயவியல் கழகத்தின் தலைவரான டாக்டர் பிரதாப் சந்திரா ராத் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறிய சில முக்கிய அம்சங்கள் இதுதான்:

சைலண்ட் கில்லர்: டிஸ்லிபிடெமியா என்பது ஒரு சைலண்ட் கில்லர்.. .சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போல எந்தவிதமான அறிகுறியையும் இது காட்டாது. மாறாக திடீரென நமது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை உடனடியாக கண்டறிந்து, அதை சரி செய்வதற்கான நடவடிக்கையில் இறங்குவதுதான் சரியான சிகிச்சை முறையாகும். இதற்காகத்தான் இந்த புதிய வழிகாட்டியை உருவாக்கியுள்ளோம்.

வழக்கமான பரிசோதனைகளை முறைகளிலிருந்து, இது கொஞ்சம் மாறுபட்டு புதிய சோதனைகளை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். வழக்கமாக நமது ரத்தத்தில் உள்ள கொழுப்பை கண்டறிய சாப்பாட்டுக்கு முன்பு ரத்தம் எடுத்து பரிசோதனை செய்யப்படும். ஆனால், இப்போது சாப்பாட்டுக்கு பின்னரும் சோதனை செய்ய பரிந்துரைத்துள்ளோம்.

நோயாளிகள்: டிஸ்லிபிடெமியா பிரச்சினையை பொறுத்தவரை Elevated LDL C அளவுதான் முக்கியமாக கண்காணிக்கப்பட வேண்டியுள்ளது. அதேசமயம், டிரைகிளிசரைட்ஸ் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு எச்டிஎல் அல்லாத கொலஸ்டிராஸ் அளவும் கண்காணிக்கப்பட வேண்டும்" என்கிறார் டாக்டர் பிரதாப் சந்திரா ராத்.

அதாவது, உணவுக்குப் பிந்தைய பரிசோதனை மூலம் நோயாளியின் உடலில் டிஸ்லிபிடெமியா எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை துல்லியமாக ஊகிக்க முடியுமாம். இதன் மூலம் மேலும் பரிசோதனைகள் தேவையா, என்ன மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை எளிதாக தீர்மானிக்க முடியும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.

வழிகாட்டுதல்கள்: மேலும் இந்த புதிய வழிகாட்டுதலின்படி 18 வயதானதும் முதல் லிபிட் புரபைல் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். ஒரு வேளை வீட்டில் யாருக்கேனும் டிஸ்லிபிடெமியா பிரச்சினை இருந்தால் 18 வயதுக்கு முன்பே கூட பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

லோ ரிஸ்க் பிரிவின் கீழ் வருவோர் தங்களது LDL C அளவை 100 மில்லி கிராம்/DL என்ற அளவிலும், எச்டிஎல் சி அளவை 130 மில்லி கிராம் /DL என்ற அளவுக்குள்ளும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். ஹை ரிஸ்க் உள்ளவர்கள் அதாவது BP, சர்க்கரை வியாதி உள்ளோர், எல்டிஎல் சி அளவை 70 மில்லி கிராம்/DL என்ற அளவிலும், எச்டிஎல் சி அளவை 100 மில்லி கிராம் /DL என்ற அளவுக்குள்ளும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அறிவுறுத்தல்: குடும்பத்தினரில் யாருக்காவது இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சினை, ஆஞ்சினா ஆகிய பிரச்சினை இருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் ஹை ரிஸ்க் பிரிவின் கீழ் வருவார்கள். அவர்களுக்கு உரிய காலத்தில் தேவையான பரிசோதனைகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஒருவருக்கு டிஸ்லிபிடெமியா தாக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை ரத்தத்திலுள்ள Low Density Lipo Protein - Cholestrol LDLC எனப்படும் குறைஅடர் கொழுப்பு புரதத்தின் அளவை வைத்து கண்டறியலாம். அதேபோல, High Density Lipo Protein - Cholestrol HDLC எனப்படும் உயர்அடர் கொழுப்பு புரதத்தின் அளவை வைத்தும் கண்டுபிடிக்கலாம். அதேபோல, triglycerides (>150 mg/dL) போன்றவற்றின் அளவை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.

கொழுப்பு அளவு: எனவே, ஒருவருக்கு ரத்தத்தில் குறைஅடர் கொழுப்பின் அளவு 100 mg/DL என்ற அளவிலும், உயர்அடர் கொழுப்பு புரதத்தின் அளவு 130 mg/DL குறைவாகவும் இருக்க வேண்டும். ஆனால், ரத்தத்தில் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ LDLC, HDLC இரண்டுமே படிந்துவிடக்கூடாது. இந்த அளவு மாறுபாடும்போது, டிஸ்லிபிடெமியா பாதிப்பு ஏற்படலாம்.

இந்த வழிகாட்டியில் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் மட்டுமல்லாமல், வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும் நிறைய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தவிர்க்கலாம்: அதாவது டயட் எனப்படும் சாப்பாட்டு முறைதான் இதில் முக்கியமானது. உரிய டயட் முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தினசரி முறையான உடற்பயிற்சி அவசியம். யோகா போன்றவை மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் இந்த வழிகாட்டியில் இடம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+