என்னது.. மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? காயத்ரி பற்ற வைத்த நெருப்பு - என்ன சொல்றாரு பாருங்க
சென்னை: கொரோனா தடுப்பூசி காரணமாக பலருக்கு மாரடைப்பு வருவதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் இது தொடர்பாக சந்தேகத்தை கிளப்பும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவலின் வேகம் தற்போது குறைந்தாலும், அதன் பிறகு ஏற்படும் மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம் வயது மாரடைப்புகள் அதிகளவில் ஏற்பட்டு பலரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாரடைப்புகள் ஏற்படுவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், கொரோனா தடுப்பூசி காரணமாக மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றன. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் மக்கள் மீது கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டதாலேயே இந்த விபத்துகள் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள். ஆனால், இதை அரசும் மருத்துவர்களும் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக சந்தேகம் கிளப்பும் வகையில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் காயத்ரி ரகுராம். அதில், "கரோனாவுக்குப் பிறகும், தடுப்பூசிக்குப் பிறகும், தடுப்பூசியின் எண்ணிக்கையால் இறக்கிறார்களா இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. இளைஞர்கள், வயதான ஆண்கள் மற்றும் சில பெண்கள் அதனால் மாரடைப்பால் இறக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

தடுப்பூசி காரணமாக என்று எந்த செய்தியும் இல்லை. ஆனால் அரசாங்கம் பொது மக்களை எச்சரித்து அவர்களை பொதுச் சோதனைக்குக் கோருகிறதா? தடுப்பூசிகள் காரணமா என்று சொல்ல அவர்களுக்கு தைரியம் இருக்குமா? அதற்கு கொரோனா அல்லது தடுப்பூசி அல்லது இயற்கை மரணம் காரணமாக இருக்கலாம், மரணம் இன்னும் மரணம்தான். தடுப்பூசி நம்மை காப்பாற்றியதா? அதன் பிறகு நமக்கு கோவிட் வரவில்லையா? சொல்லப்படாத பல பதில்கள் உள்ளன.
பலருக்கு இப்போது கோவிட் அல்லது தடுப்பூசிக்குப் பிறகு பிரச்சனை உள்ளது. சில உறுப்புகள் பாதிக்கப்படும். மருத்துவமனைகளுக்கு செல்ல பயப்படுகிறோம். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் உள்ளது. ஏனென்றால், நாம் நமது நகரத்தை சுத்தமாக வைத்திருக்கவில்லை மற்றும் மழையில் தண்ணீர் தேங்க அது அழுக்காகிறது. ஒவ்வொரு இடமும் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் நமது ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆரோக்கியமே செல்வம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications