இட்லி, தோசைக்கு அரைக்கிறீங்களா? இட்லி மாவுக்கு டைம் இதுதான்.. "நொதித்த" மாவில் ஒளிஞ்சிருக்கும் மேட்டர்
சென்னை: இட்லி உணவு உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், புளித்த மாவை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.. மாவு புளித்துவிட்டது என்பதை அறிந்து கொள்வது எப்படி? புளித்த மாவை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படக்கூடிய தொந்தரவுகள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
இட்லி மாவு புளிக்க வைத்து தயாரிப்பதால், நொதித்தல் செயல்முறை காரணமாக, புரோ பயாடிக்குகள் உருவாகின்றன.. உணவை ஜீரணிக்க செய்து, குடலின் ஆரோக்கியத்தை காக்க இந்த புரோ பயாடிக்குகள் அவசியமாகின்றன.

எனினும், நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை குறிப்பிட்ட அளவே எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது. இட்லி, தோசை, ஆப்பம், தயிர் போன்றவை நொதிக்க வைக்கப்பட்டவை. அதாவது புளிக்க வைக்கப்பட்டு சமைக்கப்படுபவை..
ஆனால், நொதித்த உணவுகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, வயிறு உபாதைகள் உள்ளவர்கள், அஜீரணம், அசிடிட்டி, வாயு தொந்தரவு இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் பெண்களும் இரவு நேரங்களில் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்..
அதேபோல, இட்லிக்கு அரைக்கும்போது வெந்தயம் கலந்து அரைப்பது வழக்கம். ஆனாலும் 3 நாட்களுக்கு மேல் இதை பயன்படுத்தினால், வீக்கம் பிரச்சனை, அஜீரணம், அசெளகரியம் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும். எனவே, இதய நோய் உள்ளவர்கள் 3 நாட்களுக்கு மேல் இட்லி மாவை பயன்படுத்த கூடாது..
அதுமட்டுமல்ல, 3 நாள் ஆகிவிட்டாலே பாக்டீரியாக்களின் வளர்ச்சி மாவில் அதிகம் நிறைந்திருக்கும். அதுவும் ஒரே பாத்திரத்தில் மாவை வைப்பதால், பாக்டீரியாக்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும் என்கிறார்கள். இதனால் நெஞ்செரிச்சல், குடல் தொடர்பான பிரச்சனை, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
துர்நாற்றம் வீசுவது, அதிகப்படியான புளிப்பு சுவை, மாவின் மீது எண்ணெய் போன்ற மெல்லிய படிமம் உருவாவது போன்றவற்றை வைத்து மாவு புளித்துவிட்டது என்பதை அறிந்தது கொள்ளலாம்.
எனவே, மாவின் உயிர்ப்புத் தன்மையை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் உட்கொள்ளுதல் வேண்டும். அந்தவகையில், இட்லி மற்றும் தோசை மாவை அரைத்து 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி முடித்துவிட வேண்டுமாம்.. மாவு கெட்டுப்போக கூடாது என்று ஃபிரிட்ஜில் வைக்கும்போது, அதன் உயிர்ப்பு தன்மை மற்றும் அதன் எதார்த்த சுவையை முழுமையாக இழந்திருக்கும்.
சோடா உப்பு: இதை சமைத்து சாப்பிடும்போது, பசி அடங்குமே தவிர, ஊட்டச்சத்துக்கள் எதுவுமே நமக்கு கிடைக்காது. மாவு புளிக்காமல் இருக்க உப்பு போடாமல் இருந்தாலும் சரி, சோடா உப்பு கலக்காமல் இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு மேல் இட்லி மாவு வைத்து பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். மாவு புளிக்காமல் நன்றாகவே இருந்தாலும்கூட 1 நாளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
பாக்கெட் இட்லி மாவையும் தவிர்த்துவிடலாம்.. காரணம், இந்த மாவில் புளிப்பு வாசனை வராமல் இருக்க, புண்ணுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் தடவப்படுவதாக சொல்கிறார்கள். இதனை உட்கொள்ளும்போதும் குடல் ஆரோக்கியம் பாதித்து, வயிற்று வலி, வயிற்று உபாதைகள், அஜீரணம் ஏற்பட்டுவிடும். மாவு அரைக்கும்போது பயன்படுத்தப்படும் தண்ணீரும் சுத்தமானதா என்று தெரியாது. அசுத்த நீராக இருந்தால் இரைப்பை நோய் வரை தாக்கிவிடும்.
பாக்கெட் மாவு: அதுமட்டுமல்ல, அரிசி மாவில் உளுத்தம்பருப்பின் அளவை குறைத்துக்கொண்டு மரவள்ளிக்கிழங்கின் கழிவுகளை அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாம். மேலும், மாவு புளித்து போகாமல் இருக்க, கால்சியம் சிலிக்கேட் என்ற வேதிப்பொருளும் சேர்க்கப்படுகிறது. எனவே, பாக்கெட் மாவை தவிர்த்துவிட்டு, வீட்டில் அரைக்கும் மாவை, அதிலும் ஒரே நாள் மட்டும் பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications