பச்சை வைரம் காசினி கீரை.. தங்க மூலிகை தரும் தங்கமான பலன்கள்.. காசினி கீரையில் அத்தனையும் சத்துக்கள்
சென்னை: காசினி கீரையை "கடவுளின் வரம்" என்று ஏன் அனைவரும் போற்றுகிறோம் தெரியுமா? காசினி கீரைகள் கிடைக்காவிட்டாலும், காசினி கீரையின் பவுடரையாவது பயன்படுத்த சொல்ல என்ன காரணம்? காசினி கீரையிலுள்ள சத்துக்கள், நன்மைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை சாப்பிடலாமா? இவைகளை பற்றியெல்லாம் இங்கு சுருக்கமாக பார்ப்போம்..
காசினி கீரையில் வைட்டமின் A, B, C, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து நிறைந்திருக்கின்றன.. இதைத்தவிர, இன்சுலின், லாக்டுசின், குமாரின், சாப்போனின், டானின், பிளேவோனாய்டுகள், ஆல்கலாய்டுகள் அதிகம் காணப்படுகின்றன.

வாரம் 2 முறையாவது காசினி கீரையை சமைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள்.. காசினி கீரையை சமைத்து சாப்பிட முடியாவிட்டாலும், இதை பவுடராக தயாரித்து வைத்து கொள்ளலாம்.. காசினி கீரையை சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் பவுடராக்கி எடுத்து கொள்ளலாம். சுடுசோறுடன் நெய்விட்டு, இந்த சாதத்தை கலந்து சாப்பிடலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளில் பவுடர் வடிவிலும் கிடைக்கிறது
யூரிக அமிலத்தை கட்டுப்படுத்தும்
உடலில் அதிகமாக உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி உடல்வலியை போக்கக்கூடியது காசினி கீரைகள்.. பித்தப்பை கோளாறுகளையும் நீக்கக்கூடியது.. பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களையும் காசினி கீரை குணப்படுத்தக்கூடியது.
ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும், பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும், அதிக உதிரப்போக்கு தொந்தரவுக்கும் காசினி கீரை மிகச்சிறந்த மருந்தாகும். இந்த கீரையின் பவுடரை அரை ஸ்பூன் தேனில் 21 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது வெள்ளைப்படுதல் சரியாகும்.
3 முக்கிய உறுப்புகளுக்கு பலம்
அதேபோல, கல்லீரல், சிறுநீரகம், இதயம் என்ற 3 முக்கிய உறுப்புகளை பாதுகாக்க செய்கிறது காசினி கீரை.. காசினி கீரையில், சீரகம், மஞ்சள் கஷாயமாக குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்..
சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களை கரைத்து வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. காசினியை தொடர்ந்து உணவில் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்களும் சேராது..
இன்சுலின் சுரப்பி - நீரிழிவு நோய்
இன்சுலின் சுரப்பை சுரக்க செய்யக்கூடியது இந்த காசினி கீரை. எனவேதான், சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை அவசியம் சாப்பிட வேண்டுமாம். கீரையை பருப்புடன் சேர்த்து கரைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது காசினி பவுடரை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் கட்டுப்படும்.. அத்துடன், புண்கள் இருந்தாலும் விரைந்து ஆறிவிடும்.
அதேபோல, காசினிக் கீரை பொடியை தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில், ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். இதனால், உடல் சூடு தணியும்.
கடவுளின் வரம் - காசினி கீரை
நீண்ட கால புண்கள் இருந்தால், இந்த காசினி கீரையை அரைத்து பற்றுபோல கட்டினால், விரைவில் பழுத்து உடையும்.. வெறுமனே கீரையின் சாற்றையும் புண்களின் மீது தடவி வரலாம்.. அஜீரண கோளாறு உள்ளவர்கள், காசினி கீரையை தாராளமாக சாப்பிட வேண்டும்..
இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், ரத்தசோகை பிரச்சனை நெருங்குவதில்லை.. உடலிலுள்ள தேவையற்ற நீரும் வெளியேறிவிடும்.. இந்த காசினி பொடியை தினமும் இரவு நேரத்தில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், தேவையற்ற கொழுப்புகளும் நீங்கும். இதனால் இதயத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இத்தனை மகத்துவம் இருப்பதால்தான், காசினி கீரையை, கடவுளின் வரம் என்கிறார்கள்..
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications