இரு நூறு நோய் தீர்க்கும் கீரைகள்.. யார் யார் கீரைகளை தவிர்க்கலாம்? ஆயுளை கூட்டும் கீரையின் மகத்துவம்
சென்னை: கீரைகள் ஏன் நமக்கு கட்டாயம் தேவை? கீரைகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? கீரைகளை சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? கீரைகளை குழந்தைகளுக்கு சாப்பிட தரலாமா? எப்போது முதல், எந்த வகையில் குழந்தைகளுக்கு கீரையை உணவில் சேர்க்கலாம்? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
கீரைகளில் 50 க்கும் மேற்பட்டவைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த ஒவ்வொரு கீரையும், ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.. நன்மைகளும்உண்டு. எனினும், ஒருசில குறிப்பிட்ட நன்மைகள் எல்லாவகையான கீரைகளிலுமே நிறைந்துள்ளன.

குறிப்பாக சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் C போன்ற முக்கிய மூலப்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன.. எனவே, கீரைகளை சாப்பிடுவதால் ரத்தசோகை விலகும்.. ரத்தம் ஊறிவரும்.. ரத்த சுத்திகரிப்பும் நடக்கும்.. மலச்சிக்கல் தொந்தரவு இருப்பவர்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையை சாப்பிட்டு வரவேண்டும்.
ஆரோக்கிய வாழ்வுக்கு கீரை
நார்ச்சத்து நிறைய கீரைகளை தினமும் சாப்பிடுவதால், ஆரோக்கிய வாழ்வை பெறலாம். முறையாக சமைக்க வேண்டும்.. கீரைகளை வாங்கும்போதே கவனமாக பார்த்து வாங்க வேண்டும். கீரையில் ஓட்டைகள் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், பூச்சிகளும், பூச்சி மருந்துகளும் அதற்கு காரணம். எப்போதுமே பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத கீரைகளையே உணவில் பயன்படுத்த வேண்டும். விளைவிக்கும் கீரையாக இருந்தாலும், விளைவிக்காத கீரைகளாக இருந்தாலும், இரண்டிலுமே நல்லது, கெட்டது உள்ளன.
நிறைய மண், சிறுபுழுக்கள் கீரைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதால், பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில்கீரைகளை போட்டு வைத்துவிட வேண்டும். பிறகு 2 நிமிடம் கழித்து, கீரையை எடுத்துவிட்டு பார்த்தால், கீரையிலிருந்த மண், பாத்திரத்தில் தங்கியிருக்கும். இதற்கு பிறகு கீரைகளை அலசலாம்.
நறுக்கிவிட்டு அலச கூடாது
எக்காரணம் கொண்டும், கீரையை பொடியாக நறுக்கிவிட்டு அலச கூடாது.. அதிக நேரம் வேகவிடாமல், பச்சை நிறம் மாறாமல் குறைவான நீரை ஊற்றி வேக வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது..
வளரும் குழந்தைகளுக்கு கீரையில் பொரியல், கடைசல் தவிர, அடை, வடை செய்து தரலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்தபிறகே கீரை சூப் தரவேணடும். அதுவும் ஒரு ஸ்பூன் மட்டுமே தரவேண்டும். ஏனென்றால், செரிமானத்திற்கு ஆறு மாதத்தில்தான் தயாராக உள்ளது. 6 மாதத்துக்கு முன்பே மற்ற உணவுகளை கொடுக்க நேர்ந்தால், தாய்ப்பால் குடிக்கும் குடிப்பது குறைந்து, சுரப்பும் குறைந்துவிடும்.. இதனால், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படலாம்..
கீரைகளை இரவில் சாப்பிடலாமா
அதேபோல சிலவகையான உணவுகளுடன் சேர்த்து கீரை சாப்பிடக்கூடாது. அந்தவகையில், கீரையை தயிருடன், இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, இது கல்லீரல் பாதிப்பை தந்துவிடும். சிக்கனுடன் சேர்த்து அகத்திக்கீரை சாப்பிடக்கூடாது. மது அருந்தியபிறகும், அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாகும்..
சத்துக்கள் அதிகமாக உள்ளதால், கீரைகளை அதிகமாக சாப்பிடகூடாது.. நார்ச்சத்து அதிகமாக உள்ள கீரையை பெரியவர்களும் அதிகமான சாப்பிடக்கூடாது. இதனால் நச்சு விளைவு, வாயு, வீக்கம், பிடிப்புகள், வயிறு கோளாறு ஏற்படும். கிட்னியில் பாதிப்பு இருப்பவர்களும் அதிக கீரைகளை தவிர்க்கலாம். ஆக்ஸாலிக் ஆசிட் அதிகமாக சுரந்து, அந்த ஆசிட்டை வெளியேற்றுவது கடினமாகிவிடும்.
மூட்டு வலி பாதிப்புகள்
மூட்டு வலி தொந்தரவுகள் உள்ளவர்களும் கீரையை தவிர்க்கலாம்.. இதனால் கீல்வாதம் பாதிப்பு வரலாம்.. அமிலம், துத்தநாகம், மெக்னீசியம், கால்சியத்துடன் இணையும்போது, தாதுப்பற்றாக்குறையும் ஏற்படுத்திவிடும். அதேபோல யாராக இருந்தாலும் இரவில் கீரையை தவிர்க்கலாம். வைட்டமின் K கீரையில் உள்ளதால், ரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நீரிழிவு நோயாளிகள், கீரையை தவிர்க்கலாம்.
இரவு நேரங்களில் கீரை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.. ஏனென்றால், நார்ச்சத்துக்களை ஜீரணிக்கக் கூடிய நொதிகள் இரவில் மிகக்குறைவாகவே சுரக்குமாம்.. அப்போது கீரையை சாப்பிட்டால் மந்தம் ஏற்படும்.. அதிக கலோரிகள் கீரையிலிருந்து கிடைப்பதால், ஜீரணத்தில் சிக்கலும் வரலாம். எனவே மதிய நேரமே கீரைகளுக்கு சிறந்தது.












Click it and Unblock the Notifications