"தேங்காயை" பச்சையா சாப்பிடலாமா? வெறும் தேங்காயை சாப்பிட்டால் இவ்ளோ நன்மையா? வாரிவழங்கும் தென்னை
சென்னை: இயற்கையாக கிடைக்கக் கூடிய எந்த ஒரு பொருளும் உடலுக்கு நன்மை மட்டுமே கொடுக்கும்... அப்படிப்பட்டதுதான் தேங்காய்.. இதை பச்சையாக சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னாகும்?
வாழையை போல, முருங்கையை போல, தென்னை மரத்தின் அனைத்து பாகமும் நமக்கு பயன்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது. உணவாகவும், எண்ணெய்யாகவும், மருந்தாகவும், அழகு சாதனப்பொருளாகவும் பல வடிவங்களை இந்த தேங்காய் பெறுகிறது.

நார்ச்சத்து: கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள், என பல சத்துக்கள் நிரம்பியதுதான் தேங்காய்.. இவையெல்லாமே ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் சத்துக்கள் ஆகும்..
இதிலுள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்துதான், ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன.. நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.. முதுமையை தள்ளி போட்டு, சரும ஆரோக்கியத்தை பேணிகாக்கிறது.. அல்சர், வயிற்றெரிச்சல், அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் நீக்குகிறது.
இதய நண்பன்: தேங்காயில், கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா, போன்றவை உள்ளதால், இதயத்துக்கு கெடுதி என்றும், தேங்காய் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வந்துவிடும் என்று சொல்லப்பட்டது.. ஆனால், இதெல்லாம் பொய்யான கூற்றுகள்.. தேங்காயிலுள்ள சேச்சுரேடட் கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை... இதனால், கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை என்பதால், கொலஸ்ட்ரால் தொந்தரவு ஏற்படவும் வாய்ப்பில்லை..
உண்மையை சொல்லப்போனால், தேங்காயிலுள்ள கொழுப்புகள், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை கூட்டுகிறது.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த தேங்காய்.. காரணம், இதிலுள்ள தாதுக்கள் மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மற்றும் மெக்னீசியம் போன்றவை வெவ்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமானவை என்பதால், தேங்காயை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டியுள்ளது.
உடல் எடை: அதேபோல, தேங்காய் சதைப்பகுதியை சாப்பிட்டு வரும்போது, ரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படும் என்கிறார்கள். அல்சைமர் போன்ற மறதி நோய்கள் எதுவுமே வராமல் தேங்காய் எண்ணெய் தடுக்கிறது.. அத்துடன், வயிறு நிரம்பிய உணர்வையும் இந்த தேங்காய் தருவதுடன் கொழுப்பு எரிபொருளாகவும் பயன்படுகிறது.
தேங்காய்ப்பூவில் காப்பர், இரும்புச்சத்து, தாமிரம் போன்றவை அதிகம் உள்ளதால், ரத்தத்தின் சிவப்புணுக்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அதிகமாக கிடைக்க வழிகோலுகிறது.
கர்ப்பிணிகள்: கர்ப்பமான பெண்களும், பாலூட்டும் பெண்களுக்கும், தேங்காய்பூக்களை சாப்பிடும்போது, பால் அதிகமாக சுரக்கும்.. கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளும் நீங்கும்..

நீரிழிவு நோயாளிகள், தேங்காயை சட்னியாக, துருவிப்போடும் பொரியல்களை சாப்பிடலாம்.. ஆனால், வெறும் தேங்காயை அதிக அளவில் அப்படியே சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். சிலர் தேங்காய் பால் எடுத்து சமைப்பார்கள்.. தேங்காயில் உள்ள நார்ச்சத்தை தூக்கிப்போட்டுவிட்டு, வெறும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டை மட்டுமே எடுத்து கொள்வதில் பலனில்லை.. இதனால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத்தான் செய்யும்.
இன்சுலின்: எனவே, தேங்காய் பால் போல் அல்லாமல், தேங்காய் வடிவிலேயே பயன்படுத்தலாம்.. இதனால், இன்சுலின் அளவை அதிகரிக்கும்.. பொதுவாக, சர்க்கரை நோயாளிகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.. பசியும், சோர்வும் அதிகமாக இருக்கும்.. இந்த பிரச்சனைக்கெல்லாம் தேங்காய் பூக்கள் மிகவும் சிறந்தது.. இதனால், கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.












Click it and Unblock the Notifications