Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலக்கீரை பண்றீங்களா? பலன்களை பெருக்கி தரும் பசலை.. உடல் எடை குறைக்க பெஸ்ட் சாய்ஸ் இந்த பாலக்கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரோக்கியமான பாலக்கீரையில் என்னென்ன சமையல் செய்யலாம் தெரியுமா? பாலக்கீரையின் பயன்கள் என்னென்ன தெரியுமா?

உடல் எடை குறைப்பவர்களுக்கு பாலக்கீரை ஒரு வரப்பிரசாதம்.. இதிலுள்ள உள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. இதனை உணவில் சேர்க்கும்போது, கெட்ட கொலஸ்ட்ரால் நம் உடலில் தங்குவதை தவிர்க்கலாம். தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Health benefits about Palak Keerai and Do you know Spinach is the Best Medicine for Weight Loss

இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்கிறது.. குழந்தைகளுக்கும் வலு சேர்க்கிறது. அதிக அளவு பொட்டாசியமும் உள்ளது.. உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கீரையைதான் பரிந்துரைக்கிறார்கள்..

பசலைக்கீரை: இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபொலிக் சத்து உள்ளதால், மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் பசலை கீரையில் நிறைவான ப்ளவனாய்டு நிரம்பியிருப்பதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.. நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கீரை என்பதால், இதை உணவில் தவிர்க்கவே கூடாது..

குழந்தைகளுக்கு உணவில் இதை அடிக்கடி சேர்த்து தர வேண்டுமாம்.. சுண்ணாம்பு சத்தும், வைட்டமின் K சத்தும், அதிகம் உள்ளதால், எலும்புகளையும் பற்களையும் வலிமைபடுத்த செய்கிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த பசலைக்கீரையை காரம் அவ்வளவாக இல்லாத குழம்பாகவோ, அல்லது சூப் போன்றோ தந்தால், எலும்பும், பற்களும் உறுதிப்படும்.

தலைமுடி: பெண்களுக்கான இரும்புச்சத்துக்கள் இதில் இருக்கிறது.. எனவே, முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், ரத்த உற்பத்திக்கும் துணைபுரிகிறது.. ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்யும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை, இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலமாக சரிசெய்யலாம்..

கோடைக்காலங்களில் ஏற்படும் உஷ்ணத்தின் காரணமாக வரும் அனைத்து கோளாறுகளையும் இந்த கீரை சரிசெய்கிறது.. ஆசன வாய் பகுதியில் உண்டாகும் புண், எரிச்சல் போன்றவற்றையும் இந்த கீரை குணப்படுத்துகிறதாம். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் பசலைக்கீரையை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.. இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.

அக்கி நோயால் அவதிப்படுபவர்கள், தீப்புண், வெந்நீர் காயம், சொறி, சிரங்கு, காயங்கள் ஏற்பட்டாலும், பசலை இலையை நன்றாக நசுக்கி அவைகளின் மீது தொடர்ந்து தடவிவந்தால் மெல்ல நிவாரணம் கிடைக்கும். பசலைக்கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கை, கால்களில் ஏற்படும் தோல் எரிச்சலுக்குப் பற்று போட்டாலும், தீர்வு கிடைக்கும்.

தோசை: பசலைக்கீரையில் பலவிதமான உணவுகளை செய்யலாம்.. பாலக்கீரையை சுத்தம் செய்து கொண்டு, ஒரு மிக்ஸியில் சேர்த்து, சீரகம் இஞ்சி போட்டு அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்.. பிறகு, கோதுமை மாவில் உப்பு சிறிதளவு ஓமம் தண்ணீர், அதனுடன் கீரை விழுதையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.. இதை 20 நிமிடம் ஊறவைத்து, சப்பாத்தி போல சுட்டு எடுத்தால் சுவையாக இருக்கும்.

பாலக்கீரை அடை: அல்லது, இந்த பாலக்கீரையில் அடை செய்யலாம்.. அரிசி, பருப்பை இரண்டையும் ஊற வைத்து அரைத்து கொள்ள வேண்டும். இஞ்சி பச்சை மிளகாய், பெருங்காயம், பாலக் கீரை போன்றவற்றை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.. வெங்காயம், பூண்டு இரண்டையும் வதக்கிகொள்ள வேண்டும். இப்போது அரைத்த மாவில், வெங்காயம், பூண்டு, மிக்சியில் அரைத்த விழுது என மொத்தத்தையும் கொட்டி கலக்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து கரைத்து, அடை போல சுட்டு எடுக்கலாம்.

பாலக்கீரையில் தோசை போலவும் செய்து தரலாம்.. கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதேபோல வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்க கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பிறகு, பசலைக் கீரை, சிறிது உப்பு சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இவை அனைத்தையும், இட்லி மாவுடன் சேர்த்து, தோசை வார்க்கலாம்.

பாலக்கீரை கூட்டு: டயட் இருப்பவர்கள், எண்ணெய் குறைவாக சேர்த்து இந்த கீரையை, சப்பாத்திக்கு கூட்டு போல செய்து சாப்பிடலாம். பாலக் கீரையை அலசி குக்கரில் போட்டு ஒரு விசில் வர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்..

ஒரு குக்கரில் வாணலில், எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பொறித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது கழுவி வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

கூட்டு: தேவையான தண்ணீர் ஊற்றி இறக்கி, குக்கரை விசில் போட்டு மூடிவிடவும். பிறகு, பசலைக் கீரையை அதில் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.. ஒரு வாணலில் சிறிதளவு எண்ணெய், சீரகம், கடுகு , காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு தாளித்து பருப்பில் கொட்டினால், பசலைக் கீரை பருப்புக்கூட்டு தயார்.

அதே பாலக்கீரையில் பக்கோடா செய்யலாம்.. பஜ்ஜி செய்யலாம்.. சிக்கன், மீன் வகைகளில் சேர்த்தும் செய்யலாம்.. கூட்டு, சூப் செய்யலாம்.. முட்டை பொடிமாஸ் செய்தால் அதனுடன், இந்த கீரையையும் பொடிபொடியாக நறுக்கிப்போட்டு செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+