Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிற்றரத்தை தூள் சிறிது போதுமே.. சுவாச கோளாறு மட்டுமல்ல, கேன்சரையே விரட்டிடுமாம்.. சிறந்த சித்தரத்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவாச கோளாறுகளுக்கு மட்டுமே சிற்றரத்தை பயன்படுவதாக பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. பார்ப்பதற்கு இஞ்சி போலவே இருக்கும் இந்த சிற்றரத்தையில், புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய ஆச்சரிய கூறுகள் இருக்கிறதாம்.. செரிமான ஊக்கியாக நம்முடைய முன்னோர்கள் சிற்றரத்தையை பன்னெடுங் காலமாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.. சித்தரத்தை என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும் சிற்றரத்தையின் பிற பயன்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

சிற்றரத்தை போலவே பேரரத்தை என்றும் ஒருவகை உண்டு. ஆனால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உதவக்கூடியது சிற்றரத்தைதான். சளி, இருமல், காய்ச்சல், கபம் என எதுவானாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்தாகிறது.

Chitharathai chitharathai Powder Cancer

நுரையீரல் கோழைச்சளி

சிற்றரத்தை பொடி என்றே நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கிறது. அந்த பொடியை, சிறிது தேனில் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.. பெரியவர்கள் நீரில் இந்த சிற்றரத்தை பொடியுடன், சிறிது சுக்கு தூள் கலந்தும் குடிக்கலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் சிறிது சிற்றரத்தை துண்டை வாயில் வைத்துக் கொண்டால் போதும். உணவை மெல்ல முடியாமல் தொண்டை வலியால் அவதிப்படுபவர்களும் இதை செய்யலாம். இதனால் நுரையீரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமல் தீரும்.

குறையும் கொழுப்பு சத்து

ஆனால், சுவாச கோளாறுகளை தாண்டி ஏராளமான பலன்களை இந்த சிற்றரத்தை தருகிறது.. குறிப்பாக, உடலிலுள்ள கொழுப்பு சத்தை கரைக்கும் சக்தி கொண்டது.. இதனால் இதயம் காக்கப்படுகிறது. சிற்றரத்தையுடன் தாமரைப்பூ கலந்து தினந்தோறும் காலையில் சாப்பிடுவதால் மாரடைப்பு வராது என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆச்சரிய கூறுகளை சிற்றரத்தையில் உள்ளதாம்.. இதற்கு காரணம், "அசிடாக்ஸிகவிக்கால் அசிட்டேட்" என்ற பொருள், புற்றுநோய் மரபணுக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்கிறது. "நேச்சுரல் மெடிசின்" நாளிதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்த உண்மை தெரியவந்துள்ளது..

மூட்டு வலி, ரூமட்டாய்டு

மூட்டுவலி, ரூமட்டாய்டு மூட்டுவலி (Rheumatoid Arthritis) போன்ற இன்னல்களுக்கு, சிற்றரத்தையுடன் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்பு 45 நாட்கள் சாப்பிட்டு வரலாம். இதனால் வலி குறைவதுடன், அழற்சியும் நீங்கும். குழந்தைகளுக்கு இந்த சிற்றரத்தை மிகவும் அவசியமான பொருளாகும். அதனால்தான், பிரசவ லேகிய தயாரிப்புகளில் சிற்றரத்தையும் சேர்க்கப்படுகிறது..

பிறந்த குழந்தைக்கு உரை மருந்து தரும்போது சிற்றரத்தையும் சேர்த்து உரைப்பார்கள்... காரணம், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது இந்த சிற்றரத்தை.. குழந்தைக்கு வலு கொடுக்கக்கூடியது.

அதேபோல, இளைப்பு நோயுள்ள குழந்தைகளுக்கு சிற்றரத்தையை வசம்பு போல் விளக்கெண்ணெய் தடவி நெருப்பிலிட்டு சுட்டு கரியாக்கி, அதனை தேனில் குழைத்து நாக்கில் தடவி விடுவார்கள்..

குழந்தைகளுக்கு சத்து நிறைந்தது

குழந்தைகளுக்கு இந்த சிற்றரத்தை மிகவும் அவசியமான பொருளாகும். அதனால்தான், பிரசவ லேகிய தயாரிப்புகளில் சிற்றரத்தையும் சேர்க்கப்படுகிறது.. பிறந்த குழந்தைக்கு உரை மருந்து தரும்போது சிற்றரத்தையும் சேர்த்து உரைப்பார்கள்... காரணம், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது இந்த சிற்றரத்தை.. குழந்தைக்கு வலு கொடுக்கக்கூடியது. அதேபோல, இளைப்பு நோயுள்ள குழந்தைகளுக்கு சிற்றரத்தையை வசம்பு போல் விளக்கெண்ணெய் தடவி நெருப்பிலிட்டு சுட்டு கரியாக்கி, அதனை தேனில் குழைத்து நாக்கில் தடவி விடுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+