Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொட்டுக்கடலையில் கொட்டி கிடக்கும் நன்மைகள்.. புரோட்டீன் நிறைந்த வறுத்த பொட்டுக்கடலை தரும் ஆரோக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொட்டுக்கடலையிலுள்ள சத்துக்கள் என்னென்ன? எலும்பு குறைபாடுகளை பொட்டுக்கடலை போக்க என்ன காரணம் தெரியுமா? வளரும் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகளுக்கு பொட்டுக்கடலை சிறந்த உணவு என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? தலைமுடி அடர்த்தியாக வளருவதற்கு பொட்டுக்கடலை எப்படி உதவியாக இருக்கிறது? இவைகளை எல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

பொட்டுக்கடலையில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க செய்கிறது.. இதனால், உடலிலுள்ள கழிவுகளை வெளியேறுகின்றன.. உள்ளுறுப்புகள் சுத்தமாகின்றன.

Pottukkadalai Pottu Kadalai Pottukadalai

சிறந்த சத்துக்கள்

பொட்டுக்கடலையில் பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.. ஆனால், கலோரிகள் மிகவும் குறைவு.. ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் அடங்கிய உணவு என்பதால், உடல் எடை குறைய நினைப்பவர்களுக்கு சூப்பர் சாய்ஸ்.. எனவே, வறுத்த பொட்டுக்கடலையை சாப்பிடுவால், எடையில் மாற்றம் தென்படும்.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. என்சிபிஐ வெளியிட்டிருந்த ஒரு ஆய்வின்படி, எடை இழப்புக்கு புரத ஆதாரமான உணவை எடுப்பது நல்லது என்று தெரிவித்துள்ளனர்.. அந்தவகையில், எடை இழப்புக்கு புரோட்டீன் நிறைந்த வறுத்த பொட்டுக்கடலையை தேர்ந்தெடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் - பொட்டுக்கடலை

நீரிழிவு நோயாளிகளுக்கு பொட்டுக்கடலை மிகவும் நல்லது.. இதனால் குளுக்கோஸை சமநிலைப்படுத்துகிறது.. சர்க்கரை செயலிழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது

உடல் சீராக இயங்குவதற்கும், நரம்புகள் ஆரோக்கியமாக செயல்படுவதற்கும் பொட்டுக்கடலை உதவியாக உள்ளது.. அதனால், வறுத்த பொட்டுக்கடலையை சாப்பிட்டு வந்தால், நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் குறைய துவங்குமாம்.

பெண்களுக்கு வரப்பிரசாதம் பொட்டுக்கடலை

ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிடுவது பெண்களுக்கும் நன்மை பயக்கும்.. காரணம், இந்த பொட்டுக்கடலையில், ஏராளமான செலினியம் உள்ளன.. இது டிஎன்ஏ சேதத்தை குறைப்பதற்கும், தனிநபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதற்கும் தூண்டுகோலாகிறது.

அதுமட்டுமல்ல, உடலிலுள்ள உயிரணுக்களுக்கு ஆற்றலை வழங்கவும், உடல் செயற்பாடுகளுக்கும் புரோட்டீன் அத்தியாசிய தேவையாகும். பெண்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் புரதம் தேவை என்கிறார்கள். அதேபோல, முடி வளர்ச்சி, சருமம், நகங்கள் பாதுகாப்புக்கும் புரோட்டீன்தான் தேவை.. இந்த புரோட்டீன்கள் வறுத்த பொட்டுக்கடலையில் உள்ளது. அதனால், பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த பொட்டுக்கடலை..

அதுமட்டுமல்ல, மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். கர்ப்பிணிகள் சிறிதளவு வறுத்த பொட்டுக்கடலை சாப்பிட்டால், குழந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்.

இதய நோய் அபாயத்தை தடுக்கும்

வறுத்த பொட்டுக்கடலையில் மாங்கனீசு, போலேட், பாஸ்பரஸ், காப்பர் போன்ற சத்துக்கள் இருப்பதால், இதய நோய் அபாயம் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.. உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் பொட்டுக்கடலை உதவுகிறது.

வறுத்த பொட்டுக்கடலையிலுள்ள பாஸ்பரஸ், ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.. உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அதிக பாஸ்பரஸ் உட்கொள்ளல் முக்கிய பங்கு வகிப்பதாகவும், உடலில் நிகழும் பல உயிரியல் செயல்முறைகளில் பாஸ்பரஸ் முக்கிய பங்கு வகிப்பதாகவும், பப்மெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சரும பாதுகாப்பு - தலைமுடி அடர்த்தி

சரும பாதுகாப்புக்கு பொட்டுக்கடலை உதவுகிறது.. படை, சொறி, அரிப்பு போன்ற தொந்தரவுகளை இந்த பொட்டுக்கடலை கொண்டே விரட்டிவிடலாம்.. வலுவான மற்றும் அடர்த்தியான தலைமுடிக்கும், பொட்டுக்கடலை உதவுகிறது.. காரணம், பொட்டுக்கடலையில் புரோட்டீன், வைட்டமின்கள் (A, B1, B2, B3), கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.

எனவே,உடல் மெலிந்துள்ள பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ள பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் என அனைவருக்குமே சிறந்த உணவாக பொட்டுக்கடலை விளங்குகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+