ஆரோக்கியம் தரும் ஆடாதோடை இலைகள்.. நெஞ்சு சளி, மூலநோய், வீக்கத்தை போக்கும் ஆடாதொடை மூலிகை பவுடர்
சென்னை: ஆடாதொடை இலைகளின் பயன்கள் என்னென்ன தெரியுமா? சுவாச கோளாறுகளை தவிர வேறு எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு இந்த ஆடாதோடை இலைகளை பயன்படுத்தலாம்? மூலநோய்க்காரர்களுக்கு மருந்தாகும் இந்த இலைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ஆடுகள் இந்த செடியின் இலையை மட்டும் சாப்பிடாதாம்.. அதனால்தான், ஆடு தொடாத இலை, அதாவது "ஆடு தொடா" என்று பெயர் வந்ததாக சொல்வாரகள். பாரம்பரிய வைத்தியத்தில், இந்த மூலிகைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அதேபோல, சித்த மருத்துவத்தில், காய்ச்சல் தீருவதற்கு குடிநீர் வகைகளில், இந்த ஆடாதோடை இலைகளைதான் சேர்க்கிறார்கள்.

நுரையீரல்: நுரையீரலின் பாதுகாவலன் இந்த ஆடுதோடை இலைகள் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வாசிசின் என்ற வேதிப்பொருள் இந்த மூலிகையில் உள்ளது. இந்த செடி வளரும் இடங்களில் எல்லாம், கார்பன்டை ஆக்ஸைடை உள்ளிழுத்து கொண்டு, ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும். இது மனித குலத்துக்கே ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.
ஆஸ்துமா, இருமல், எப்போர்ப்பட்ட சளியையும் விரட்டிவிடும் இந்த கசப்பு இலை. இதற்கு இந்த இலைகளை நிழலில் காயவைத்து பவுடராக்கி, மெல்லிய வெள்ளை துணியில் சலித்து கொள்ள வேண்டும்.. இதில் 1 ஸ்பூன் வீதம் 3 வேளை, 6 மாத காலம் சாப்பிட்டு, வெந்நீரை குடித்துவந்தால், நுரையீரலில் உள்ள தொந்தரவுகள், சைனஸ் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை அத்தனையும் வேரோடு விலகும்.
ரத்த அழுத்தம்: இந்த பவுடர் ரத்த அழுத்தத்தையும் சீராக்கும்.. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த ஆடாதோடை இலைகள் அருமருந்தாகும்.. ரத்தத்தை சுத்திகரிப்பதில் இந்த மூலிகைக்கு நிறைய பங்கு உள்ளது.
காசநோய் இருந்தாலும் பறந்துவிடும். 48 நாட்களுக்கு இந்த ஆடாதோடா இலையை சாப்பிட்டால், T.B விலகும் என்பார்கள்.. அதனால்தான் கொரோனா நேரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை இந்த இலைகள் நமக்கு தந்திருந்தன. அதனால்தான், எல்லாவகையான இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்தே தயராகின்றன. மலேரியா ஜூரத்துக்கு மருந்தாகவும் இந்த இலைகள்தான் பயன்படுத்தப்படுகிறது .
ஜூரம்: டெங்கு ஜூரத்தில் குறையும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை, இந்த இலைகளுக்கு இருக்கிறது. எனவே, ஜூரத்தின்போது, ஒன்று அல்லது இரண்டு ஆடாதொடை இலைகளை மையாக அரைத்து, சுத்தமான தேன் கலந்து உட்கொண்டுவந்தால், சுரத்தைக் குறைப்பது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சளி, இருமல் போன்ற நோய்கள் அனைத்தும் குணமாகும்.
நெஞ்சில் சளி கட்டியிருந்தால், இந்த இலையை பறித்து, நெருப்பில் போட்டு, அந்த புகையை சுவாசித்தால் போதும், நெஞ்சிலுள்ள சளி கரைந்துவிடுமாம் ஆடாதோடை இலையை தூள் செய்து, வெறும் தண்ணீரில் கலந்து குடித்தால் தசைவலிகள் நீங்கிவிடும். வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இந்த இலைகள் அதனை நீக்க உதவுகின்றன.
உதிரப்போக்கு: பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ஆடாதொடை இலைகள் உதவுகின்றன.. ஆடாதொடை இலைகளை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால், அதிக உதிரப்போக்கு நின்றுவிடும். கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல், இந்த செடியின் வேரை கஷாயம் தயாரித்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பார்கள்.. இதனால் கர்ப்பப்பையையும் உறுதியாகிறது..
இதன் இலைகளை விளக்கெண்ணெயில் லேசாக வதக்கி தசைப்பிடிப்பிருக்கும் இடங்களில் ஒற்றடம் கொடுக்கலாம். வீக்கத்தைக் கரைக்கும் திறன் இருப்பதால் மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களைக் கரைக்க அவ்விடத்தில் இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி பற்று போடலாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications