ஆசனவாயில் இரத்தமா.. மூலநோய்க்கு காரணம் இதுவா? பைல்ஸ் வராமல் தடுக்கும் ஆரோக்கிய உணவு.. மூலம் அண்டாது
சென்னை: மூலம் ஏற்பட காரணங்கள் என்ன? யார் யாருக்கெல்லாம் மூலநோய் பாதிப்பு வரலாம்.. மூல நோய் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? மூலநோயின் வீர்யத்தை குறைக்கும் உணவுகளும், கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களும் என்னென்ன?
மூலம் என்பது ஆசனவாய் பகுதியை சுற்றிலும் இரத்தக்கட்டிகளாக உருவாக்கிவிடும் சிரமம் தரக்கூடிய நோயாகும்.. ஆசனவாயின் உட்புறம், வெளிப்புறம் அல்லது இருபுறங்களிலும் உருவாகலாம்.. இது அனைத்து வயதினருக்கும் பாலின பாகுபாடின்றி ஏற்படுகிறது.

ஆசனவாய் ரத்த நாளம்: மூலம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.. ஆசனவாயின் ரத்த நாளங்களை சுற்றி ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக மூல நோய் உருவாகலாம்..
நாள்பட்ட மலச்சிக்கல் அல்லது மலம் கழிக்கும்போது சிரமம் இருந்தாலும் உருவாகலாம்.. அதிக உடல் உழைப்பு இல்லாமல் ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலநோய் பாதிக்கலாம்.. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் பிற்காலத்தில் மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
காரணங்கள்: ஒவ்வாமைக்குரிய உணவுகளை சாப்பிடுவது, அல்லது அதிக காரமான உணவை சாப்பிடுவது, அதிகமாக வெயிட் தூக்குவது, நார்ச்சத்து குறைவாக உள்ள உணவை சாப்பிடுவது போன்றவையும் காரணங்களாக உள்ளன.
மூல நோயின் அறிகுறியாக அரிப்பு, வலி, அசௌகரியம் , குடல் இயக்கம் குறைபாடு மற்றும் இரத்தக்கசிவு போன்றவை ஏற்படலாம்.. எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ப்ராக்டோஸ்கோபி அல்லது சிக்மாய்டோஸ்கோபிக்கு உட்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அறிகுறிகள்: அதேசமயம் மூலநோய்க்கான மருந்தே முறையான உணவும், சுறுசுறுப்பான பழக்கவழக்கமும்தான் என்கிறார்கள் நிபுணர்கள். அந்தக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு உடலுழைப்பு இருந்ததால், மூலநோய் அண்டாமல் இருந்தது. அதுமட்டுமல்ல, மூலநோய் பாதிப்பு இருந்தாலும் அதை எளிய முறையில், வெறும் பழையசாதம் தண்ணீரை கொண்டே விரட்டியடித்து கொண்டிருந்தார்கள்.
பழைய சாதம் மூலத்துக்கு மிகச்சிறந்த தீர்வாகும். பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி, சின்ன வெங்காயம், கல் உப்பு போட்டு மூடி வைத்துவிட்டு, மறுநாள் காலை வெறும் வயிற்றில் 10 நாட்களுக்கு குடித்து வந்தால், மூல நோய்க்கு நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணம் குறையும்... மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும். அல்சர் புண்களும் ஆற துவங்கிவிடும். சிறுகுடல் ஆரோக்கியம் அடையும்.. மிகச்சிறந்த எனர்ஜி நிறைந்த பானமாகவும் விளங்குகிறது.
நார்ச்சத்து: அதேபோல, எலுமிச்சை, சாத்துக்குடி சப்போட்டா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாசி பழம், பேரிக்காய், மாதுளை போன்ற பழங்களை தவறவிடக்கூடாது. மூலத்துக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.. காரணம், இதில், பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கலுக்கு நிவாரணம் கிடைக்க செய்கிறது.
நார்ச்சத்து மிகுந்த தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, ப்ரக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், புடலங்காய், கொத்தமல்லி காய்கறிகளையும், வெந்தயக்கீரை, பசலைக்கீரை குளிர்ச்சி நிறைந்த கீரையையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால், எண்ணெய், காரம், உப்பு அதிகமாக சேர்க்காமல், லேசாக விளக்கெண்ணெய் மட்டும் பயன்படுத்தி சமைத்தால் குளிர்ச்சி கிடைக்கும்.
அதிக தண்ணீர்: காலை உணவாக, புட்டு, இடியாப்பம், இட்லி, பருப்பு வகைகளை சாப்பிடுவதால் எளிதில் ஜீரணமாகும்.. தாகத்தை அடக்காமல் நிறைய தண்ணீர் குடிப்பதுடன், யோகாவும் மூலத்திலிருந்து விடுபட உதவுகிறது. ஏரோபிக்ஸ் செய்யலாம்.. ஒருவேளை மூலநோய்க்கு சிகிச்சை எடுத்து கொண்டால், அரிசி, சோளம், ஓட்ஸ், பார்லி போன்றவை தவிர்க்கவே கூடாது என்பார்கள்.
அதுமட்டுமலலாமல், நேரத்திற்கு சாப்பிடுதல், வெளியில் சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதை தவிர்த்தல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல், கீரை, மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை தினமும் சாப்பிடுவது, ஒரு நாளைக்கு சராசரி 3 முதல் 4 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது, ஓரளவாவது உடலுழைப்பு, முறையான உடற்பயிற்சி போன்றவைகள் நம்முடைய உடலை மூலத்திலிருந்து காக்க உதவும் வழிமுறைகளாகும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications