ஆப்பிள் சீடர் வினிகர் ஆரோக்கியம்.. ஆப்பிள் சிடர் வினிகரை நிறைய குடித்தால் பக்க விளைவுகளா? அடேங்கப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆப்பிள் சீடர் வினிகர் என்பது என்ன? பெரும்பாலானோர் இதனை உடல் எடை குறைக்க பயன்படுத்துவது ஏன்? எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும்? ஆப்பிள் சீடர் வினிகர் தரும் வேறு பல நன்மைகள் என்னென்ன? எந்தெந்த வழிகளில் உபயோகப்படுத்தலாம்? ஆப்பிள் சீடர் வினிகர் தரும் பக்க விளைவுகள் என்னென்ன? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் என்பது, ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவைகளை கொண்டு சேர்த்து தயாரிக்கப்படுவதாகும். சாலட், சட்னி இவற்றில் இதனை சேர்ப்பார்கள்..

apple cider vinegar Weight Loss

அதாவது, ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து உருவாக்குவார்கள். எப்போதுமே ஆப்பிள் சீடர் வினிகரை, தண்ணீருடன் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் ரத்த செல்களின் நுண்கிருமிகள் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து விடுகின்றன.. இந்த ஆப்பிள் சீடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்டியோபோரசிஸ் என சொல்லக்கூடிய எலும்பு பிரச்சனை நீங்குகிறதாம்.. தலையில் பொடுகு நீங்க, வாயில் துர்நாற்றம் நீங்க, அலர்ஜியை குறைக்க, சருமத்தை சுத்தப்படுத்த, வயிறு உப்பசம் நீங்க, ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது.

ஆண்டிபயாடிக் மருந்து

அதேபோல, வினிகர் என்றாலே தொண்டையில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது.. அந்தவகையில் மிகச்சிறந்த ஆண்டிபயாடிக் என்று சொல்லலாம். ஆப்பிள் சிடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து குடித்தால், இருமல் கட்டுக்குள் வரும்..

கீல்வாதம் பிரச்சனக்கு ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.. மூட்டு வலி, அழற்சி, வீக்கம், மூட்டு சிவந்து போதல் போன்ற தொந்தரவுகளுக்கு இதை பயன்படுத்தலாம்.. காரணம், ஆப்பிள் சீடர் வினிகரிலுள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, அல்கலைன் உற்பத்தி தன்மை போன்றவை வலி, வீக்கத்தை குறைத்து மூட்டுகளில் இறுக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

உடல் எடை குறைகிறதா?

ஆப்பிள் சிடர் வினிகர் உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாமா? தினமும் சாப்பிடுவதற்கு முன்பு 2 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிப்பதுடன், குறைந்த கலோரி உடைய உணவுகள் எடுத்து கொள்வதால் உடல் எடை விரைவாக குறைவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த 2009ம் ஆண்டு, 3 மாதங்கள் தினமும் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துகொண்ட எடை கொண்டவர்கள் சராசரியாக 1.2 முதல் 1. 7 கிலோ வரை எடை இழக்க உதவியதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடாதவர்களைவிட, தினமும் 2 டீஸ்பூன் சாப்பிட்டவர்கள், வெறும் 3 மாதங்களில் இரண்டு மடங்கு எடையை குறைத்திருந்ததாம்..

எனினும், எடை இழப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகரை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இன்னும் நிறைய தேவைப்படுவதாகவும் சொல்கிறார்கள்.அதுமட்டுமல்ல, உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைப்பதிலும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்வதிலும் ஆப்பிள் சீடர் வினிகர் உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைதல் போன்ற சிக்கலை தீர்க்கவும் உதவுகிறது.

அதிகம் ஆபத்து - பக்கவிளைவுகள்

எனினும், பெயரிலேயே ஆசிட் உள்ளதால் இதனால் பாதிப்புகளும் உண்டு... ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தும்போது, சிலருக்கு தொண்டையில் எரிச்சல் ஏற்படுத்தலாம். செரிமானத்தில் சில சிக்கல்களை தந்துவிடக்கூடும்.. இதனால் பசியின்மையை, அஜீரணக்கோளாறு, குமட்டல் உணர்வு ஏற்படும்..

பற்களின் எனாமலில் அரிப்பை ஏற்படுத்தலாம். அதிகமாக இதை சாப்பிடும்போது, ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை குறைத்துவிடும். இது எலும்புகளின் உறுதித்தன்மையை பாதிக்கும்.

அதிகமாக பயன்படுத்தும்போது, பற்களின் உணர்திறனை பாதிக்கப்பட்டு பல்கூச்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. சருமத்துக்கு நல்லது என்றாலும், சிலசமயம் சருமத்தில் எரிச்சல் தன்மை தந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இதனை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+